ஏன் ஜனங்கள் அலைகழிக்கப்படுகிறார்கள்? WHY ARE PEOPLE SO TOSSED ABOUT? Jeffersonville Indiana U.S.A. 56-01-01 ......... நாமத்திற்கே அங்கேதான் என்னுடைய இருதயத்தில் இரத்தம் பூசப்பட்டது; அவருடைய நாமத்திற்கே மகிமை உண்டாவதாக-! 2. எங்கள் பிதாவே, இன்று காலை, தாவீதின் வீட்டில், அசுத்தத்திற்காகவும், எங்கள் இருதயத்தைச் சுத்திகரிப்பதற்காகவும் ஒரு நீரூற்று திறக்கப்பட்டிருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம் உமது அன்பு குமாரனாகிய இயேசுவின் இரத்தத்தால் நிரப்பப்பட்ட அந்த நீரூற்றுக்கு நாங்கள் இன்று காலை பணிவுடன் வருகிறோம், அதன் சிவந்த நீரோட்டத்தின் கீழ் எங்கள் ஆத்துமாக்களை மூழ்கடித்து, மறுபுறம் கழுவுகிறோம்: நாங்கள் பாவிகளாகச் சென்ற இடத்தில், இரட்சிக்கப்பட்டோம்; வியாதியிலிருந்து நன்றாக வெளியே வரட்டும்; ஒவ்வொரு சின்ன விஷயத்தாலும் தூக்கி எறியப்பட்டு, மனமுடைந்து, சோர்ந்து போய், மறுபக்கம் வெளியே வாருங்கள். உம்மிடம் நாங்கள் வந்திருக்கும் இந்த சிறந்த வாய்ப்புக்காக, இந்த மாபெரும் பாக்கியத்திற்காக நாங்கள் எப்படி உமக்கு நன்றி செலுத்துவோம்-? இன்று நாங்கள் பணிவுடன் தலை வணங்கி, ஒவ்வொரு ஆசீர்வாதத்திற்கும் உமக்கு நன்றி கூறுகிறோம். இன்று இங்கே உம்மை சந்திப்போம்,பிதாவே….. 3. பாடல்களில் எங்களைச் சந்தித்ததற்கும், ஆராதனையின் முந்திய பகுதியைச் சந்தித்ததற்கும், இப்போது வார்த்தையைச் சுற்றி எங்களைச் சந்திப்பதற்கும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நமது ஆண்டவரோடு வார்த்தையைச் சுற்றி நாம் ஐக்கியமாய் இருப்போமாக, பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசி மற்றும் பாவியின் இருதயத்திற்கு நேராக எடுத்துச் செல்லட்டும். ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் இன்று மகத்தான நற்கூலி உண்டாகட்டும்; நோயுற்றவர்களுக்கும், நோயுற்றவர் களுக்கும் சோர்வடைந்தவர்களுக்கும் துன்பப்படுபவர்களுக்கும் உதவி செய்யுங்கள்; மேலும், வழிப்போக்கர்களுக்கு உதவி செய்வான்; மந்தமான விசுவாசிக்கு; கிறிஸ்துவுக்குள் இளைப்பாறி, ஆவியால் நிரப்பப்பட்டு, கர்த்தருடைய வருகைக்காகக் காத்திருப்பவருக்கு ஊக்கமளியும். பிதாவே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அதைக் கேட்கிறோம். ஆமென். 4. இக்காலையில் கூடாரத்தில் இருப்பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியுறுகிறேன். உங்களெல்லோருக்கும் என் இதயப்பூர்வமான காலை வந்தனம். இந்நாளிலும், இன்னுமாக நாம் கர்த்தருடைய ஊழியத்தில் காணப்படுவதைக் குறித்து நம்பிக்கையாயிருக்கிறோம். 5. "நான் மிகவும் ஆச்சரியமாக மீட்கப்பட்டேன்” என்ற பாடலை எத்தனை பேர் பாடக்கூடும் என்று கேட்கப்பட்ட போது, நாம் எல்லோரும் நம் கரங்களை உயர்த்தினோம். அது என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிற்று. நூறு சதவிகிதம் எல்லோரும் தங்கள் கரங்களை உயர்த்தினதை நான் கவனித்தேன். "நான் மிகவும் ஆச்சரியமாக மீட்கப்பட்டேன். என்னுள்ளே இயேசு இன்பமாக வாசம் செய்கிறார்” என்ற பாடலுக்காகவும், உங்களுக்காகவும் நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். 6. இங்கு கட்டிலில் கிடத்தப்பட்டிருக்கும் சகோதரியின் மேல் சிறிதளவு சூரிய வெளிச்சம் பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு வேளை அவர்கள் அங்கிருந்து அகற்றப்பட வேண்டுமென்று விரும்புகிறார்களோ இல்லையோ என்பதை நானறியேன். "நான் மிகவும் ஆச்சரியமாக மீட்கப்பட்டேன்" என்ற பாடலை பாட இந்த சகோதரியும் தன் கரங்களை உயர்த்தினதை நான் கவனித்தேன். 7. நாம் எவ்விதமாயிருக்க வேண்டுமோ அவ்விதமாயிருப்பதற்காக நசரேயனாகிய இயேசு நம் இருதயங்களில் வந்து நம்மை ஆசீர்வதிக்க முடியும் என்ற காரியம் எவ்வளவு அற்புதமாய் இருக்கின்றது சில வருடங்களுக்கு முன்பு நாம் வழக்கமாக ஒரு பாடலைப் பாடுவோம். "நான் எவ்விதமாயிருக்க வேண்டுமோ, அவ்விதமாக அவர் என்னை உருவாக்குகிறார், அவருடைய கிருபை என்னை சுத்தம் செய்து விடுவிக்கும்,” என்ற பாடலே அது. அது எவ்வளவு அற்புதமாயிருக்கின்றது. இந்த ஞாயிற்றுக்கிழமை காலை போதக ஆராதனையில் உங்களுக்குப் போதிப்பது என்னுடைய முறையாயிருக்கிறது. 8. நான் கூடாரத்தின் பின் வழியாக வரும் போது, அனேகர் பிறந்த நாளின் காணிக்கைகளை செலுத்துவதை காண நேர்ந்த போது, அது என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிற்று. இக் கூடாரம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் போதகர் ஜனங்களை அவர்களின் பிறந்த நாளில் ஆசீர்வதித்து, கடந்து போன நாட்களில் தேவன் கிருபையாக அவர்களுக்காகச் செய்தவை-களுக்காகவும், இனி வரப்போகும் நாளின் ஜீவியத்திற்காகவும் நன்றியறிதலின் ஜெபத்தை ஏறெடுப்பதை எனக்கு ஞாபகப்படுத்துவதாயிருந்தது. 9. இக்கூடாரத்திற்கு நான் கடமைப்பட்டவன் என்பதை நினைக்கிறேன். இந்த அறிவிப்பை நான் இதுவரை வேறு எங்கும் கூறாமல் இந்த இடத்தில் தான் முதலாவதாக கூறுகிறேன். இது தட்டெழுத்து செய்யப்பட்டு தபாலில் அனுப்பப்படுவதற்காக ஆயத்தமாயுள்ளது. ஆனாலும் அதை நான் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன். மேலும் இது புதுவருடமாய் இருப்பதால் புது வருடங்கள் என்ற விதமாயல்ல, ஆனால் காலத்தின் புது திருப்பம் என்ற விதமாக அவ்விதம் செய்ய விழைகிறேன். 10. தேவ குமாரனின் வருகையின் முன்னடையாளங்களைக் காணத்தக்கதாக இந்நாளுக்குரிய ஜனங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, ஒரு மகத்தானதும், மகிமையானதுமான தருணத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். இதுவரை இவ்வுலகம் அறியாத ஒரு மகத்துவமான எழுப்புதல் விரைவில் வரப்போகிறது என்றும், அல்லது சரித்திரம் காணாத அளவுக்கு இவ்வுலகமானது காரிருளான ஒழுங்கீனத்திற்கு உள்ளாகப் போகப்போகிறதென்றும் நான் என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். 11. தாங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதைக் குறித்து ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கான மகத்தான நேரம் ஜனங்களுக்கு உண்டாயிருக்கின்றது. கிறிஸ்துவுக்கென்று சரியானதொரு தீர்மானத்தை எடுக்காத யாராவது இன்று இங்கு இருக்க நேரிட்டால் அவருக்கு இந்த காலை நேரம் தான் சரியான நேரம் என்று நான் நம்புகிறேன். இந்தஆராதனையில் நீ எங்காவது இருந்து கொண்டு "ஆம், கர்த்தாவே, என்னுடைய மீதியான வாழ்நாளில் நான் உம்மையே சேவித்து ஊழியம் செய்வேன் என்று தீர்மானம் எடுக்கத் தக்கதான நேரம் இந்த நாள் தான்” என்று நீ உன் இருதயத்தில் கூறிக் கொள்வாயாக.! 12. இது ஒரு அற்புதமான நாள். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியக் கூடாதவாறு ஒரு திரையானது நமது கண்களுக்கு மேலாக விசுவாசிகளுக்கும் கூட போடப்பட்டிருக்கிறது என்பதை நான் நிச்சயமாக அறிகிறேன். அனேக சமயங்களில் ஆவியினால் நடத்தப்படும் ஜனங்கள், இவ்வுலகத்தின் மக்களால் தவறாகப் புரிந்துக் கொள்ளப்படுகிறார்கள். ஏனெனில் கர்த்தராகிய இயேசுவுக்கு முழுவதுமாக அர்ப்பணித்த ஜீவியம் செய்வதென்பது ஒரு அற்புதமான ஜீவியமாகும். தற்போது, சில வாரங்களுக்கு முன்… 13. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு நான் ஆண்டவரிடம் எட்டு அல்லது பத்து என்று வாக்குக் கொடுத்திருந்தேன். 1946-ம் ஆண்டு நான் கூடாரத்தை விட்டு வெளி ஊழியங்களுக்குச் சென்ற போது அங்கு பணத்தைக் குறித்ததான பெரிய தொந்தரவுகள் உண்டாகும் என்று நான் அறிந்தேன். ஏனெனில் இத்தகைய கூட்டங்களில் பணமானது அதிக அளவில் சம்பந்தப்பட்டு இருந்தது. ஆகவே நான் கர்த்தரிடம், “இந்தக் கூட்டங்களில் என் முழு இருதயத்தோடும் உமக்கு ஊழியம் செய்வேன்” என்று வாக்களித்திருந்தேன். அங்கு இடையூறு, ஏனெனில்… மற்றும் நிறைய பணம் சேர்க்கப்பட்டுள்ளது, மற்றும் அது போன்ற அனைத்தும். 14. ஒரு மனிதனை கர்த்தர் சிறிதளவு ஆசீர்வதிக்கும் போது மூன்று முக்கியமான காரியங்களான பணம், பெண், புகழ் என்பவை அவனைத் திரும்பவும் அவனுடைய பழைய நிலைமைக்குக் கொண்டு வந்து விடுகின்றன என்பதை நான் கவனித்திருக்கிறேன். 15. வேதத்தில் பாலாக் என்பவன் தீர்க்கதரிசியாகிய பிலேயாம் என்பவனுக்கு அதிகமான பணத்தைக் கொடுக்க முன் வந்த போது, அந்த பணத்தின் காரணமாக பிலேயாம் தன்னுடைய வரத்தை விற்றுப் போட்டான் என்று பார்க்கிறோம். இச்சம்பவம் உங்களுக்குத் தெரிந்த ஒன்றாகும். 16. சிம்சோன், தெலிலாளிடம் தன்னை விற்றுப் போட்டான். இந்தப் பெண் அவனை தன் மடியிலிருத்தி, அவன் தன்னிடமுள்ள கர்த்தரின் இரகசியத்தை வெளியிடும் வரை அவனை மயக்கினாள். 17. சவுல், புகழுக்காக தேவ வரத்தை விற்றுப் போட்டான். அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். தீர்க்கதரிசிகளில் ஒருவனாக அவன் எண்ணப்பட்டான் என்று வேதம் கூறுகிறது. இன்னொருவரைக் காட்டிலும் தன்னை பெரியவனாக்க விரும்பி புகழுக்காக அவன் விழுந்து போனான். 18. மனிதன் விழுந்து போகத் தக்கதான இந்த மூன்று முக்கியமான காரியங்களை நான் வேதத்திலிருந்து கண்டு, எல்லா நேரங்களிலும் இந்த மூன்று காரியங்களை நான் தவிர்க்கத் தக்கதாக நம்முடைய பரலோகப் பிதாவை நோக்கி வேண்டுதல் செய்தேன். 19. கூட்டங்களில் ஒரு போதும் பணத்திற்காக பிச்சையெடுக்க மாட்டேன் என்று தேவனிடம் நான் வாக்களித்தேன். அது மட்டுமல்ல, காணிக்கை தட்டை ஜனங்கள் மத்தியில் அனுப்பி இத்தகைய காணிக்கையின் மூலம் பல ஆயிர டாலர்கள் கிடைக்கும் என்று நான் அறிந்து இருந்தேன். கூட்டங்களுக்குத் தேவையான பண உதவியை நான் பெற்றுக் கொள்ளும் அளவிற்கு அவர் என்னைக் கைவிடுவாரென்றால், நான் ஊழியத்தை விட்டு விட்டு என் வீட்டிற்குத் திரும்பி விடுவேன் என்றும் கர்த்தரோடு ஒரு உடன்படிக்கை செய்திருந்தேன். இந்தக் காரியத்தில், யாரையும் எந்த விதத்திலும் வற்புறுத்தாமல் என் பணத் தேவையை அவர் அற்புத விதமாக சந்தித்தார். ஜனங்கள் பணம் தரத்தக்கதாக சற்று அவர்களை நிர்பந்திக்க நான் அனுமதிக்காததினால் கூட்டத்திற்கு ஒழுங்குகள் செய்யும் 3 அல்லது 4 நிர்வாகிகள் தங்கள் வேலையையும் இழந்து விட்டனர். இத்தகைய காரியத்தில் எனக்கு நம்பிக்கை கிடையாது. 20. கர்த்தர் எங்களுக்கு ஒரு சிறு வீட்டை ஒரு இரவுக்குள்ளாகக் கொடுத்தார் என்பதைக் குறித்து இப்பட்டிணத்திலுள்ள ஜனங்கள், "அவர் ஒரு லட்சாதிபதி” என்று ஒரு வேளை என்னைக் குறித்து நினைக்கக் கூடும். 21. நீங்கள் அந்த உண்மையை அறிய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நான் அவ்விதமாக லட்சாதிபதியாகியிருக்கக் கூடும். பிச்சையெடுக்காமல் கூட நான் அவ்விதமாயிருக்கலாம். ஏனெனில் ஜனங்கள் என்னிடம் வந்து, "சகோதரன் பிரான்ஹாமே, நான் உங்களுக்கு இதைத் தருகிறேன், அதைத் தருகிறேன்” என்று கூறுவார்கள். ஆனால் அதை நான் விரும்பாமல் மறுத்து விடுவேன் ஏனெனில் அது அசுத்தமாயிருக்கிறது. என்னுடைய சுதந்திரம் மேலே இருப்பதையே நான் விரும்புகிறேன். 22. 23-வருடங்களுக்கு முன்பாக என் ஊழியத்தை ஆரம்பித்த போது நான் சிறுவனாக இருந்தது போன்றல்ல இப்பொழுதோ நாளுக்கு நாள் என் தலை மயிர் வெண்மையாகிக் கொண்டு வருகின்றது என்பதை நான் அறிகிறேன் மனுஷன் உலக முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும் தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அதினால் அவனுக்கு லாபம் என்ன-? என்ற ஒன்று மட்டும் நான் அறிந்திருக்கிறேன். ஆகவே, அத்தகைய சபிக்கப்பட்ட காரியங்களை நான் கண்டிருக்கிறேன். கடந்த சில நாட்களாக ஊழியக்காரர்களும், ஜனங்களும் இவ்வாறு சீர்குலைந்து குடும்பங்களுக்காக என்னை ஜெபிக்க அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். 23. அன்றொரு நாள் ஒரு பெண் என்னிடம் வந்து, "சகோ. பிரான்ஹாமே, நான் என் பெயரை கூறமாட்டேன். ஏனெனில் என்னுடைய கணவர் ஒரு பிரசித்து பெற்ற சுவிசேஷ ஊழியக்காரன்" என்றான். அவள் தொடர்ந்து, "என் கணவர் ஒரு 18 வயது இளம் பெண்ணோடு விபச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை நான் கையும், களவுமாக பிடித்து விட்டேன். அத்தகைய காரியத்தை அவர் இரண்டு வருடங்களாகச் செய்துக் கொண்டு வருகிறார் என்பதை என்னிடம் அறிக்கையிட்டார்” என்றாள். அவள் மேலும் என்னிடம், "சகோ.பிரன்ஹாமே, இதைக் குறித்து நான் என்ன செய்வது-?” என்று கேட்டாள். அதற்கு நான், "எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் என் சகோதரனுடைய ஆத்துமாவிற் காக ஜெபிப்பேன்” என்று கூறினேன். 24. நான் கடைசியாக கலிபோர்னியாவில் ஊழியம் செய்த போது 15,000 டாலர்கள் கடனாளியாகி விட்டேன். ஆனால் கடைசி இரண்டு நாள் கூட்டத்தில் அற்புதமாக தேவன் அதை சந்தித்தார். "நீ பிச்சையெடுக்கத் தான் வேண்டும். ஜனங்களிடம் பணத்தைக் குறித்து அறிவிப்பு செய்” என்று அவர்கள் கூறினார்கள். அப்பொழுது நான், "என் தேவனிடத்தில் நான் வாக்களித்தது அதுவல்ல” என்றேன். சில மனிதர்கள், "நான் அதை எழுதுகிறேன்" என்றார். நான், "இது தேவனுக்கு நான் கொடுத்த வாக்குறுதி அல்ல" என்றேன். ஆகவே, என் உடன் ஊழியக்காரருக்கு நான் என் சொல்லைக் காப்பது போலவே என் தேவனோடும் நான் இருந்தேன். 25. நாங்கள் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் என் மனைவிக்கும் மகனுக்கும் இக்காரியத்தைக் குறித்து எதையும் நான் சொல்ல விரும்பவில்லை. கலிபோர்னியாவில் சில சுவிசேஷ ஆராதனைகளுக்காக நான் தரித்திருக்க வேண்டியதாயிற்று. அப்பொழுது நான், "நான் திரும்பிச் சென்று கர்த்தராகிய இயேசு எனக்கு என்னச் சொல்லுவார் என்று பார்க்கப் போகிறேன் அப்படி அவர் ஒன்றும் சொல்லவில்லையென்றால், நான் கூடாரத்திற்குச் சென்று போதகர் நெவில் அவர்களுக்கு உதவியாயிருக்கப் போகிறேன்” என்று நினைத்தேன். மேலும் நான், "முன்பு நான் ஒரு பொது நிறுவனத்தில் வேலை செய்தது போல, ஒரு வேலையில் சேர்ந்து அதில் இருந்து கொண்டே தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தை போதகரோடு ஞாயிற்றுக் கிழமையிலிருந்து முறை வைத்து, அவர் ஞாயிற்றுக் கிழமை காலையென்றால் நான் மாலையும், அவர் புதன் கிழமையென்றால் நான் செவ்வாய்க் கிழமை என்ற விதமாக ஊழியத்தில் ஈடுபடலாம்” என்றும் யோசித்தேன். 26. இவ்விதமாக நான் தீர்மானித்து சகோதரன் உட் (Bro.Wood) அவர்களுடன் ஒரு வேலையிலும் அமர்ந்து விட்டேன். இச்செயல் என் மனைவியையும், மகனையும் மிகவும் இடறலுக்குள்ளாக்கி விட்டது. அப்பொழுது என் மகன் பில்லி என்னிடம், "தகப்பனே, நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று நான் நிச்சயமாகக் கூறுகிறேன்” என்று கூறினான். 27. அதற்கு நான், "இல்லை, நான் சரியானதையே செய்கிறேன். ஏனெனில் நான் அவரிடம் எதை வாக்கு கொடுத்தேனோ அதையே காப்பாற்றுகிறேன்” என்று கூறினேன். காரியம் எப்படியாய் இருந்தாலும் சரி, ஒரு மனிதன் தன்னுடைய வார்த்தையைக் காப்பாற்றவில்லை என்றால் அவனை நம்ப முடியாது. 28. ஆகவே அந்த ஒரு காரியத்தில் ஒரு மனிதன் எப்பொழுதும் உண்மையுள்ளவனாக இருத்தல் வேண்டும். எத்தனை லட்சம் தடவைகளானாலும் நீ காரியங்களை பேசு. ஆனால் அதைக் குறித்து உண்மையுள்ளவனாக இருத்தல் மிகவும் அவசியமானதாகும். அது தவறாயிருந்தாலும், சரியாயிருந்தாலும், நீ எதைக் கூறினாயோ அதற்காக உண்மையுள்ளவனாயிரு. ஒரு வேளை அது உனக்கு விரோதமாயிருந்தாலும் அதையே கூறி அதிலே நிலைத்திரு. இல்லாவிடில் ஒரு போதும் எதையும் கூறாதே. 29. ஆகவே, ஒரு உண்மையுள்ள ஆத்துமாவை தேவன் ஆசீர்வதிப்பார் என்று நான் உணர்ந்தேன். மேலும் நான் அவருடைய திவ்விய வார்த்தையாலும், அழைப்பினாலும் வியாதியை வெற்றிக் கொள்ள ஜனங்களுக்காக ஜெபிக்க நிற்கிறதான ஸ்தானத்தையும் வகிக்கிறபடியால், நான் அக்காரியத்தைச் செய்ய உண்மையுள்ளவனாக இருத்தல் அவசியம் என்பதை அறிந்திருந்தேன். ஏனெனில் நீ அவ்விதம் செய்வாயோ அல்லது செய்யமாட்டாயோ என்பதை பிசாசு அறிவான். நீ எவ்வளவு தான் சத்தமிட்டு அலறினாலும், பாவனையான காரியத்தைச் செய்தாலும் எனக்குக் கவலையில்லை. அவன் அதைக் குறித்து எந்தவித கவனமும் செலுத்துவதில்லை. அது உண்மை. ஆனால் நீ உண்மை உள்ளவனாய் இருந்தால் தேவன் அதைக் குறித்து கவனம் செலுத்துவார். 30. ஆகவே நான், "இக்காரியத்தைக் குறித்து என் குடும்பத்திடம் அரிசோனா என்னும் இடத்திற்குச் சென்றதும் நான் கலிபோர்னியாவை கடந்து சென்ற பின்பு கூறலாம்” என்று யோசித்தேன். ஆனால் அவ்விதம் கூற எனக்கு போதிய பெலன் இல்லை... பின்பு நான், "மெக்சிகோவிற்கு வந்ததும் கூறுவேன்” என்று இவ்விதமாக யோசித்துச் சென்றுக் கொண்டே முடிவில் இந்தியானா என்னுமிடத்தில் தான் நான் அவர்களிடம் இக்காரியத்தைப் பற்றிக் கூறினேன் ஆனால் என் மகன் பில்லி அதை சரியானபடி உணர்ந்துக் கொள்ளவில்லை. அவன் என்னிடம் "தகப்பனே, நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினான். 31. மிகவும் களைத்தவனாக வீட்டிற்குச் சென்று அழுதுக் கொண்டே என் படுக்கைக்குச் சென்றேன். என் மனைவி தூங்கிய பின்பு, நான் அறைக்குள்ளாகச் சென்று முழங்காற் படியிட்டு, "அன்புள்ள இயேசுவே, நான் என்ன செய்யப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் எங்கு ஆரம்பித்தேனோ அங்கே திரும்பவும் வந்து நிற்கிறேன் நான் தவறு ஏதும் செய்து விட்டோனோ என்று ஊகித்துக் கொண்டிருக்கிறேன்” என்று ஜெபித்தேன். 32. ஏறத்தாழ 2 மணி நேரத்திற்குப் பின்பு, அவர் எனக்குத் தரிசனமானார். ஒரு தரிசனத்தில், நான் ஒரு போதும் பார்த்திராவண்ணம் திரளான கூட்ட ஜனங்களை அவர் எனக்குக் காண்பித்தார். அத்தரிசனத்தில் நான் என் மனைவியோடு பேசிக் கொண்டிருந்தேன். நான் ஒரு மூட வைராக்கியம் கொண்டவன் அல்ல என்று நீங்களெல்லாரும் என்னை அறிந்திருக்கிறீர்கள். உண்மையாக இல்லாத பட்சத்தில் இக்காரியங்களை நான் உங்களுக்கு கூறுவதில்லை. அது உண்மை. 33. அந்த தரிசனத்தில் சகோ. அர்கன்பிரைட் நிற்பதைக் கண்டேன். நான் அவரிடமாக சென்றேன். அவர் என்னை நோக்கி, சகோ. பில்லி.... ஜெப அட்டைகள் யாவற்றையும் நாங்கள் கொடுத்து விட்டோம். ஆராதனைக்கு எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது. நீங்கள் உள்ளே சென்று வெளியே வரத்தக்கதாக ஒரு வழியையும் ஏற்படுத்தியிருக்கிறோம்” என்று கூறினார். அதற்கு நான், "சகோ, அர்கன்பிரைட் அவர்களே, மிகவும் நன்றி” என்று கூறினேன். நான் மேலும் நடந்து சென்று இன்னும் சில சகோதரர்களைக் காணச் சென்றேன். அப்பொழுது அங்கு வேறொரு சகோதரன் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். அங்கு நின்று கொண்டு இருந்தவர்களிடம் நான், "அவர் யார்-?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அவர் அங்கு பிரசங்கிக்க அவர்களால் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறார்” என்றார்கள். 34. அதற்கு நான், "யார் அந்த அவர்கள்-?” என்று கேட்டேன். அவர்கள் பதில் ஏதும் கூறாமல் சென்று விட்டார்கள். அங்கு பிரசங்கித்த மனிதன் ஆராதனையை முடித்து விட்டு ஜனங்களைப் போகச் செய்தார். அப்பொழுது நான், "ஓ பீட அழைப்பின்றி ஜனங்களை நீர் போக விடக்கூடாது” என்று கூறினேன். அப்பொழுது அங்கிருந்த மற்றொருவர், "நாங்கள் காணிக்கைகளை எடுத்து முடித்தாயிற்று” என்று கூறினார். அதற்கு நான், "கிறிஸ்துவுக்கு முன்பாக ஆத்துமாக்களா அல்லது காணிக்கையா, எது முக்கியம்-?” என்று கேட்டேன். 35. தரிசனம் இவ்விதமாக இருக்கும் சமயத்தில் கர்த்தருடைய தூதனானவர் என்னை ஒரு பிரகாசமான ஓடையினிடம் எடுத்துச் சென்றார். அது மிகவும் ஒரு அழகான நீல நிற தண்ணீராய் இருந்தது. அதில் பெரிய மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. அப்பொழுது அவர் என்னிடம், "நான் உன்னை மீன் பிடிக்கிறவனாக்குவேன்” என்றார். பின்பு அவர் என்னிடம், "இப்பொழுது நீ உன்னுடைய தூண்டிலைத் தண்ணீரில் போடு. அவ்விதம் போடும் போது - முதல் முறை அதை மெதுவாக இழு. இரண்டாம் முறை சிறிது மெதுவாக சுண்டி இழு. (அதிகக் கவனமாக அல்ல). மூன்றாம் முறை மீனைப் பிடிப்பதற்காக உன் தூண்டிலை நிலைப்படுத்து” என்று கூறினார். 36. பின்பு நான் தூண்டிலை தண்ணீரில் எறிந்தேன். முதன் முறை நான் இழுத்த போது ஜனங்களெல்லோரும் குதூகலிக்க ஆரம்பித்தது-? "அது அற்புதம் அது அற்புதம்” என்றனர். நான் மிகவும் பரவசப்பட்டு இரண்டாம் முறை வேகமாக சுண்டி இழுத்தேன். அவ்விதம் நான் செய்த போது ஒரு மீனைத் தண்ணீருக்கு மேலாக இழுத்தேன். பிடிப்பட்ட மீன் தூண்டில் அளவே இருந்தது. சிக்காகி விட்ட என்னுடைய தூண்டிற் கொடியை நான் சரி செய்துக் கொண்டிருந்தேன். 37. அச்சமயம் எனக்கு பின்புறமிருந்து பேசிக் கொண்டிருந்த மனிதன் எனக்கு முன்பாக நடந்து வந்தார். அவர் பாலஸ்தீன உடையைப் போன்று நீண்ட வெண் அங்கி தரித்து தலையில் ஒரு பாகையை வைத்திருந்தார். அவர் என்னைப் பார்த்து, "சகோ.பிரன்ஹாமே, அதுதான் காரியம்” என்றார். அதற்கு நான், "காரியத்தை நான் சரிவர செய்யவில்லை என்று அறிகிறேன், சுண்டியிழுக்க வேண்டாத நேரத்தில் சுண்டியிழுத்து விட்டேன்” என்றேன். அதற்கு அவர், "இத்தகைய சமயத்தில் உன்னுடைய தூண்டிற் கொடியை அவ்விதம் சிக்கலாக்காதே” என்றார். அதற்கு நான், "நல்லது ஐயா, என்னால் நிலைப்படுத்த முடிந்த அளவு அதை நிலைப் படுத்துவேன். இனிமேல் அதைக் குறித்து கவனமாயிருப்பேன்” என்று கூறினேன். 38. அப்பொழுது அவர், "நான் முதல் முறை உன்னிடம் பேசிய பின்பு, நீ உன் கைகளை ஜனங்களின் மேல் வைத்து அவர்களுடைய தவறு என்னவென்று அவர்களுக்குக் கூறினாய். இரண்டாவது இழுப்பின் போது, நீ அவ்விதம் செய்யும் போது அவர்களுடைய இருதயத்தின் இரகசியங்களையும் அறிந்தாய். நான் உன்னை ஜனங்களுக்கு முன்பாக ஒரு தீர்க்கதரிசியாக ஏற்படுத்தினேன். ஆனால் நீயோ, எப்பொழுதும் ஜனங்களுக்கு அதை விவரித்துச் சொல்ல முயற்சித்தாய். அத்தகைய காரியத்தை நீ செய்திருக்கக் கூடாது. இதை ஒரு பொது மக்களின் காட்சி பொருளாக்கி விட்டாய்" என்று கூறினார். அதற்கு நான், "நான் அதற்காக மிகவும் வருந்துகிறேன்” என்று கூறினேன். 39. பின்பு அவர் என்னை அங்கிருந்து எடுத்துச் சென்றார். அங்கு ஒரு பெரிய கூடாரத்தைக் கண்டேன். அத்தகைய கூடாரத்தை நான் எப்பொழுதும் பார்த்ததில்லை அக்கூடாரமானது எங்கும் ஜனங்களால் நிறைந்திருந்தது. நான் ஜனங்களுக்கு மேலாக நின்று கொண்டு, சற்று முன்பு பீட அழைப்புக் கொடுத்த இடத்தை கீழ் நோக்கிக் கொண்டிருந்தவாறு காணப்பட்டது. கர்த்தராகிய இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட ஆயிரக்கணக்கான ஜனங்கள் அங்கு அழுது கொண்டும், களி கூர்ந்துக் கொண்டும் இருந்தனர். 40. நான் பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஒரு மனிதன் எழுந்து, "ஜெப வரிசைக்காக ஒழுங்கு செய்யுங்கள்" என்று கூறக் கேட்டேன். அப்பொழுது ஜனங்கள், நான் கீழ் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்த பீடத்திற்கு இடது பக்கம் வரிசைப்பட ஆரம்பித்தனர். அவர்கள் அவ்விதம் வரிசைபட ஆரம்பித்து தெரு வழியாகவும் நீட்டமாகச் சென்றனர். 41. என்னுடைய இடது பக்கத்தை நான் கவனித்தேன். நான் பீடத்தில் நின்றிருப்பேனென்றால் அது என்னுடைய வலது புறமாக இருந்திருக்கும். அங்கு ஒரு சிறிய மரத்தாலான கட்டிடம் இருந்தது. படம் பிடிக்கப்பட்ட அந்த அக்கினி ஸ்தம்பத்தை நான் அங்கு கண்டேன். எல்லா சமயத்திலும் அந்த அக்கினி ஸ்தம்பம் கூட்டங்களில் பிரசன்னமாயிருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நான் பார்த்துக் கொண்டிருக்கும் போது அந்த வெளிச்சம் என்னை விட்டு அகன்று அந்த மரக் கட்டிடத்திற்குள்ளாக செல்வதைக் கண்டேன். பின்பு ஒரு சத்தமானது என்னோடு பேசி, "நான் உன்னை அங்கு சந்திப்பேன். அதுவே மூன்றாவது இழுப்பாகும்” என்று கூறிற்று. அப்பொழுது நான், "ஏன்-?" என்று கேட்டேன். அதற்கு அவர் "முன்பு அவர்கள் அதைக் கண்டது போல் இது ஒரு பொது காட்சியாயிராது” என்றார். இதன் பின்பு தரிசனமானது என்னை விட்டு நீங்கி விட்டது. 42. இப்பொழுதும் இந்த புது வருட ஆரம்பத்திலே, நான் எங்கிருந்து முதலில் ஆரம்பித்தேனோ அதே கூடாரத்திற்கு திரும்பவும் வந்திருக்கிறேன். இக்காரியங்களுக்காக நான் கர்த்தருக்கு மிகவும் நன்றி உள்ளவனாய் இருக்கிறேன். 43. மற்ற சுவிசேஷக் கூட்டங்களுக்கு செல்வதற்கு சற்று முன்பதாக, சரியாக 9 வருடங்களுக்கு முன்பதாக என்று நினைக்கிறேன்... இந்த அரங்கு ஆராதனைகள் (Auditorum Services) எவ்விதம் இருக்குமென்றும், சகோ.லாவ்டன் 3 வருடங்கள் மட்டுமே உயிரோடிருந்து பின்பு மரித்து விடுவாரென்றும், சகோ.வார்ட் அவர்கள் எத்திசையில் கூடாரத்தை அமைப்பார் என்றும் நான் கூறிய யாவும் சரியாக நிகழ்ந்தேறினது என்று பழைய அங்கத்தினர்களாகிய நீங்கள் எல்லோரும் அறிந்திருக்கின்றீர்கள். அது நிகழ்ந்தது எப்படியோ அப்படியோ இத்தரிசனமும் நிகழ்ந்தேறும். ஏனெனில் இது கர்த்தர் சொல்லுகிறதாவது என்ற விதமாயுள்ளது. அது என்னவென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 44. கர்த்தராகிய இயேசுவுக்கென்று நான் இதுவரை நடத்தாத மகத்தான கூட்டங்கள் இனி நடைபெறத் தக்கதான விளிம்பில் இருக்கின்றன என்று விசுவாசிக்கிறேன். 45. ஆகவே, கூடார ஜனங்களுக்கு முதன் முறையாக இச்செய்தியை ஒலி பெருக்கியின் மூலம் கொடுக்க இக்காலை நேரத்தில் உங்கள் முன் இருப்பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியாக உணருகிறேன். "தெய்வீக சுகமளித்தலின் சத்தம்", "வருகையின் தூதன்” போன்ற பத்திரிகைகளில் இன்னும் சிறிது நாட்களில் இது வெளிவரும். அது ஏற்கனவே தட்டெழுத்து செய்யப்பட்டு வெளியே செல்வதற்கு ஆயத்தமாயுள்ளது. எனக்காக ஜெபம் செய்யுங்கள். 46. இவைகளெல்லாம் முடிவு பெற்றவுடன் என்றாவது ஒரு மகிமையின் நாளில், நாம் அவருடைய சிங்காசனத்தண்டையில் சந்திப்போம். அப்பொழுது நமக்கு எத்தகைய ஓர் நேரம் உண்டாயிருக்கும். ஞாபகம் கொள்ளுங்கள். அந்த ஆராதனையில் நான் மட்டுமல்ல. என்னுடைய பங்கு அதில் சிறிது மட்டுமே - உங்களுக்கும் கூட அதில் பங்குண்டு என்பதை கவனியுங்கள். இந்த கூடாரம் விரிவாகப் போகின்றது. கர்த்தர் எதைச் செய்யப் போகின்றாரோ அதனால் இந்த கூடாரம் அற்புதமாக திகழப் போகின்றது. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்தரி... இப்பொழுது தேவ வார்த்தைக்குச் செல்வோம். கர்த்தராகிய இயேசுவுக்கு நன்றியறிதலுள்ள ஒரு சிறு ஜெபத்தை ஏறெடுப்போம். 47. எங்கள் பரலோகப் பிதாவே, தானியங்கி வாகனங்களும், ஆகாய விமானங்களும், உந்து விசை விமானங்களும், ராக்கெட்டுகளும் இன்னும் பலவிதமானவைகளினால் நிறைந்த இந்த விஞ்ஞான நவீன யுகத்தில் நீர் தாழ இறங்கி வந்து எங்கள் நடுவில் இருப்பதற்காக நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். தொலைபேசிகளும், தொலைக்காட்சி கருவிகளும், நவீன அணு ஆயுதங்களும் இங்கு இருந்தாலும், வானத்தையும், பூமியையும் உருவாக்கிப் படைத்த நீர் மட்டுமே சர்வ வியாபியாயும், தன்னிலே நிறைந்திருப்பவராயும், சர்வ வல்லவராயும், உன்னதமானவராயுமிருக்கிறீர். தேவனே எங்களால் இதை விவரிக்க இயலாது. வானத்திற்கு முடிவு எது என்று எங்களால் விவரிக்க இயலாதது எப்படியோ அது போலவே இந்த பூமி பரிபூரணமாக சுற்றி வருவதையும் எங்களால் விவரிக்க இயலாது. மனிதனால் சூரியக் கிரணம் எப்பொழுது சம்பவிக்கும் என்று சரியாக கணிக்க முடியும். ஏனென்றால் உம்முடைய இயந்திரத்தின் கிரியைகள் அவ்வளவு பரிபூரணமாயிருக்கின்றன. அத்தகைய ஒரு பரிபூரண இயந்திரத்தை எங்களால் உண்டாக்க முடியாது. உம்முடைய கிரியைகள் உண்மையும் நீதி உள்ளவைகள் என்பதற்காக நாங்கள் உம்மை நேசிக்கிறோம். 48. இந்த புது வருட காலையிலே நாங்கள் எங்களை சமர்பிக்கிறோம். எங்களை உம்முடைய பரிசுத்த ஆவியினால் நிறைத்து உம்மண்டை எங்களை நெருக்கமாக இழுத்து கொள்ளும். உம்முடைய நித்திய கரங்களை எங்களை அணைத்துப் பிடித்துக் கொள்ளட்டும். கர்த்தாவே, ஏனெனில் காலமானது நடுங்கத்தக்கதாகவும், இருள் சூழ்ந்ததாய் இருக்கிறது. ஆனால் உம்முடைய விடிவெள்ளி நட்சத்திரம் எங்களுக்கு வழிகாட்டுகிறது. நீர் எங்களை எங்கு நடத்துகிறீரோ அங்கு நாங்கள் உம்மை பின்பற்றுவோம். சிலரை தண்ணீர்களுடாகவும், சிலரை வெள்ளத்தினூடாகவும் சிலரை ஆழமான சோதனைகளினூடாகவும் நடத்தினாலும் எல்லோரையும் உம்முடைய இரத்தத்தினூடாக நடத்தும். ஓ.. தேவனே ஜெயமானது முடிவில் காணப்பட்டு இயேசு பூமிக்குத் திரும்பும் வரை உம்முடைய நித்தியக் கரங்களினால் எங்களை வழிநடத்தும். பாவம், வியாதி, துன்பம் யாவும் ஒழிந்து நாங்கள் அந்த மகிமையான ஆயிரம் வருட அரசாட்சியில் ஜீவித்திருப்போம். அந்த நாளுக்காக நாங்கள் ஏங்கிக் கொண்டு இருக்கிறோம். 49. இந்த நாளில் உம்முடைய வார்த்தைக்கு வாரும். கர்த்தராகிய இயேசுவே, வார்த்தைக்கு உள்ளாகப் பிரசன்னம் தாரும். பேசுகிற உதடுகளை விருத்தசேதனம் செய்யும். கேட்கிற காதுகளையும் விருத்தசேதனம் செய்யும். விதையானது ஆத்துமாவில் விழுந்து பரிசுத்த ஆவி நூறு மடங்காக பலனைத் தரட்டும். இவைகளையெல்லாம் இயேசுவின் நாமத்தில் கேட்டுக் கொள்கிறோம். ஆமென். 50. வார்த்தையை போதிக்கத்தக்கதாக நாம் ஆயத்தமாகின்ற இந்த வேளையில் கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உங்களுக்கு உதவி செய்வாராக. உங்களை அதிக நேரம் தங்க வைக்காமலிருக்க நான் முயற்சி செய்வேன். பொதுவாக ஞாயிறு போதக ஆராதனையில் அவ்விதம் முயற்சி செய்வேன். ஏனெனில் இக்கூட்டம் முடிந்தவுடன் வியாதியஸ்தருக்காக ஜெபம் செய்யும் ஆராதனை நமக்குண்டாய் இருக்கின்றது. 51. கர்த்தராகிய இயேசு நம்மிடம் எவ்வளவாய் கிருபையாயிருக்கிறார். சகோ. காக்ஸ் இன்று நம்மிடையே இருக்கிறார் என்று நான் நம்புகிறேன். ஒரு சமயம் சார்லஸ்டன் என்னுமிடத்திற்கு நாம் ஜெபிக்கச் சென்ற போது - அங்கு புற்று நோயினால் முழுவதும் அரிக்கப்பட்டவளாய், நம்பிக்கைக்கு அப்பாற்பட்டிருந்த அந்த சிறிய தாயாருக்காக நாம் ஜெபித்தோம். தேவன் அற்புதமாக அந்த பெண்ணை சுகமாக்கினார். அப்பெண்மணியின் சகோதரன் ஒரு ஊழியக் காரன். அவருடைய பெயர் ஜூனியர் காஷ். இன்று அவர் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, வியாதிக்காகவும் ஜெபம் செய்கிறார். ஹென்றிவில் என்னுமிடத்தில், சமீபத்தில் ஒரு சகோதரன் பெரிய எழுப்புதல் இச்சகோதரனால் உண்டானதாம். இச்சிறிய... எவ்விதம் முன்னேறியிருக்கிறார் என்றெல்லாம் சகோ.நெவில் என்னிடம் கூறிக் கொண்டு இருந்தார். அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியுறுகிறேன். 52. "உன் ஆகாரத்தை தண்ணீர்கள் மேல் போடு, அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்” (பிர:11:7). 53. சரியான விதையை விதை: அப்பொழுது நீ சரியான பலனை அறுவடை செய்வாய். நீ தவறான விதையை விதைப்பாயானால் தவறானதையே அறுப்பாய். கிழக்கிற்கும் மேற்கிற்கும் நீ ஒரே சமயத்தில் செல்ல முடியாது. ஏதாவது ஒரு வழியில் தான் நீ செல்ல முடியும். இந்த காலை நேரத்தில், ஒன்று நீ தேவனை நோக்கிப் பார்க்கக் கூடும். அல்லது வேறு வழியாகச் செல்லக் கூடும். 54. நீ தவறாக சென்று கொண்டிருக்கும் சில நேரங்களில், நீ சரியாகவே செல்வதாக யோசித்துக் கொள்வாய். ஆனால் ஒரே சமயத்தில் நீ வலது பக்கமும், இடது பக்கமுமாக செல்ல முடியாது. நீ இடது பக்கத்தை நோக்கிச் செல்வாயானால், அந்தப் பக்கமே சென்று அதற்கேற்ற பலனுடன் வருவாய். அல்லது நீ வலது பக்கத்தை நோக்கிச் செல்வாயானால் அத்திசையிலே நீ சென்று அதற்கேற்ற பலனுடன் வருவாய். 55. திசைக் காட்டும் கருவியை பின்பற்றுங்கள். அந்த திசை காட்டும் கருவி பரிசுத்த ஆவியானவரே. வடக்கு திசையின் காந்த முள் சரியாக வடக்கு திசையை நிலை நிறுத்துகிறது. ஆகாயத்திலுள்ள இந்த மின் அணுக்களின் செயல்கள் அற்புதமாக இல்லையா-? 56. சில வருடங்களுக்கு முன்பாக நான் வட துருவத்திற்கருகாமையில் நின்று கொண்டு இருந்தேன். வடதுருவ வெளிச்சமானது அங்கே வீசிக் கொண்டிருந்தது. நடு இரவில் அங்கு வீசப்பட்ட மஞ்சளும், பச்சையுமான வெளிச்சக் கதிர் வீச்சுகள், நாம் நடந்து செல்லத்தக்கதாக இந்த அறையில் வெளிச்சம் எவ்விதமுள்ளதோ அவ்விதமாக அது காணப்பட்டது. அப்பொழுது நான் நினைத்தேன். தொலை தூரத்தில் உள்ள மத்திய அமெரிக்காவில் எந்த இடத்தில் இந்த திசைக்காட்டும் கருவியை வைத்தாலும் அது சரியாக இந்த காந்த துருவத்தைக் காட்டும். அது மட்டுமல்ல, அது சரியாக உன்னை வடக்கு பாகத்திற்கு வழிநடத்தும். 57. மகிமையில் எத்தகைய மகத்துவமான காந்த துருவத்தை நாம் கொண்டிருக்கிறோம். இந்த வாழ்நாளின் ஊடாக வழிகாட்ட ஒரு திசைகாட்டும் கருவியாக ஆக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரும், இன்று நாமிங்கு அமர்ந்திருப்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக இயேசு கிறிஸ்துவினிடமாக திசைக்காட்டப்படுவார்கள். 58. இப்பொழுது அவருடைய மகத்துவமான வார்த்தைக்கு வருவோம். எபிரேயருக்கு எழுதிய நிரூபம் 10-ம் அதிகாரம் 19-ம் வசனத்திலிருந்து 22-ம் வசனம் வரை வாசிப்போம். வாசிக்கப்படும் போது நீங்கள் இதை மிகவும் கவனமாக கவனிக்க நான் விரும்புகிறேன். ஆகையால் சகோதரரே, நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டு பண்ணினபடியால், அந்த மார்க்கத்தின் வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே (எவ்வளவு அற்புதமாயிருக்கின்றது) நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், தேவனுடைய வீட்டின் மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிற-படியினாலும், துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.” (எபி. 10:19-22.) 59. இந்த தேவ வார்த்தைகளுக்குரிய பதிலை கர்த்தராகிய இயேசு தாமே அருளிச் செய்வாராக. வார்த்தையை நீங்கள் விரும்புகிறீர்களா-? "விசுவாசம் கேள்வியினாலே வரும். கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும். இப்பொழுது நாம் அடுத்த 30 அல்லது 40 நிமிடங்களுக்கு நேரடியாக வார்த்தையின் போதகத்திற்குச் செல்வோம். 60. நம்முடைய விசுவாசமானது எதிலும் இளைப்பாறுவது கிடையாது. ஒரு கிறிஸ்தவன் தன்னுடைய விசுவாசம் இளைப்பாறத் தக்கதான ஒரு திடமான இடத்தையுடையவனாயிருக்க வேண்டும். அசையாத தேவ வார்த்தை என்னும் இளைப்பாறும் ஸ்தலத்தின் மேல் மட்டுமே ஒரு கிறிஸ்தவன், உண்மையாக மறுபடியும் பிறந்த கிறிஸ்தவன் தன்னுடைய விசுவாசத்தை அல்லது அவனின் விசுவாசத்தை இளைப்பாறச் செய்ய முடியும். அதை நீங்கள் அறிந்து இருக்கிறீர்கள். விசுவாசமானது, புதையுண்டு போகிற மனிதனின் வேத சாஸ்திரத்தினாலோ, கொள்கையினாலோ அல்லது சபையின் கட்டுப்பாடுகளினாலோ, கட்டப்படவில்லை. ஆனால் ஒரு உண்மையான விசுவாசிக்கோ, தேவனுடைய வார்த்தையை அவன் அணுகும் போது எல்லாம் அவனுடைய விசுவாசமானது திடமாக அசையாமல் இளைப்பாறிக் கொண்டிருக்கும். 61. ஒரு சில இரவுகளுக்கு முன்பு நான் பலமாக பிரசங்கிக்க வேண்டும் போல விருப்பம் கொண்டேன். ஆகவே என் மனைவியிடம் படுக்கையிலிருந்தவாறே இரவு 12 மணி வரை, இயேசு எவ்வளவு மகிமை பொருந்தியவர் என்பதைக் குறித்து பிரசங்கித்தேன். அச்சமயத்தில் பிரசங்கத்திற்கேற்ற பொருள் ஒன்று என் இருதயத்தில் தோன்றி நான் இளைப்பாறக் கூட முடியாதபடி என்னை எரித்து விட்டது. அப்பொழுது நான் என் மனைவியைப் பார்த்து, "அருமையான மனைவியே, இன்னும் சிறிது நேரம் உன்னிடம் பிரசங்கிக்க விருப்பமாய் உள்ளேன்” என்று கூறினேன். கர்த்தருடைய கிருபையினால் அவளும் எழுந்து அமர்ந்து எனக்குச் செவி கொடுத்தாள். 62. நான் அவளை நோக்கி, "கிறிஸ்துவ விசுவாசமானது முற்றிலும் இளைப்பாறுதலையே சார்ந்திருக்கின்றது. அது உண்மை. ஒரு கிறிஸ்தவன் அலைந்து திரிய வேண்டுவதில்லை. ஒரு கிறிஸ்தவன் காரியங்களைக் குறித்து குழப்பமுற்று கவலைப்பட வேண்டுவதில்லை. ஏனெனில் அவன் இளைப்பாறிக் கொண்டிருக்கிறான். அவனுடைய காரியங்கள் யாவும் முற்றுப் பெற்று விட்டன. ஓ வியாதியோ அல்லது ஏமாற்றங்களோ வரும். ஆனால் கிறிஸ்தவனோ, தேவன் எதை செய்தாரோ அதைக் காத்துக் கொள்வாரென்று இளைப்பாறிக் கொண்டிருக்கிறான். காரியங்கள் எப்படியிருந்தாலும் வியாதியோ, மரணமோ, பசியோ, வேறெதுவானாலும் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு நம்மை பிரிக்க மாட்டாதென்று அறிந்தவனாய் இளைப்பாறிக் கொண்டிருக்கிறான். நாம் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம். பழைய கப்பலானது இங்கேயும் அங்கேயும் அலைக் கழிக்கப்படட்டும். ஆனாலும் நங்கூரமானது ஸ்திரமாக அதை தாங்குகின்றது. 63. ஒரு சமயம் நான் விமானத்தில் தாழ பறந்துக் கொண்டிருந்த போது, ஒரு துறைமுகத்திற்கு மேலாக பறந்து வந்தேன். அங்கே ஒரு பழைய பெரிய கப்பல் மிதந்து கொண்டிருந்தது. அதனுடைய பாய்மரம் அவிழ்த்து விடப்பட்டிருந்தது. அப்பொழுது ஒரு பலத்த புயல் காற்று அங்கு வீசியது. அக்கப்பலோ அலைக்கழிக்கப்பட்டது அது முன்பாகவும், பின்பாகவும் அலைக்கழிக்கப்பட்டது. அலைகள் மேலே உயர்ந்து ஒன்று கப்பலுக்குள்ளும், அடியிலுமாக சென்றவாறு இருந்தன. அப்பொழுது நான் ஆச்சரியப்பட்டு, "இது மூழ்காததின் காரணம் என்ன-?” என்று கேட்டேன். 64. அப்பொழுது என்னோடு அமர்ந்திருந்தவர் என்னிடம், "அக்கப்பல் நங்கூரம் பாய்ச்சப்பட்டு இருக்கிறது, ஆகவே அது அலைகளினூடே சென்றாலும் மூழ்காது” என்று கூறினார். சில அலைகள் மேலேயும் சில அலைகள் கீழாகவும் சென்றாலும், நங்கூரம் பாய்ச்சப்பட்டு இருக்கும் வரை அதைக் குறித்து கவலையில்லை. அப்பொழுது நான், "ஓ, கர்த்தருக்கே துதியுண்டாவதாக. 65. கப்பலானது தாங்கும் வேலையைச் செய்யவில்லை. நங்கூரம் தான் தாங்கும் வேலையைச் செய்கின்றது. நான் எப்படியிருக்கிறேன் அல்லது எப்படியிருப்பேன் அல்லது எப்படியிருந்தேன் என்பதல்ல. அவர் இப்பொழுது எப்படியிருக்கிறார் என்பதும், அவர் நமக்காக என்ன செய்தார் என்பதும் தான் காரியம். நமக்கு ஓர் நங்கூரம் உண்டு” என்று கூறினேன். நான் என்ன செய்ய முடியும் என்பதல்ல. அவர் என்ன செய்தார் என்பதே காரியம். 66. வரப்போகின்ற கூட்டங்கள் என்னவாயிருக்கும் என்பதில் என்னுடைய விசுவாசம் நங்கூரம் பாய்ச்சப்படவில்லை, என்னுடைய திறமை என்னவாயிருக்கும். அல்லது எந்த சபையில் நான் சேருவேன். அல்லது எந்த ஜனங்களோடு என் ஐக்கியத்தை வைத்துக்கொள்வேன் என்பதில் என் விசுவாசம் இளைப்பாறிக் கொண்டிருக்கவில்லை. மாறாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் முடிக்கப்பட்ட கிரியைகளின் மேல் என்னுடைய விசுவாசமானது முழுவதுமாக இளைப்பாறிக் கொண்டிருக்கின்றது. அது ஏற்கனவே என்னால் பெற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. 67. அவரை மரித்தோரிலிருந்து தேவன் எழுப்பினதால் அவரை நீதியுள்ளவராக விளங்கச் செய்தார். "இவர் என்னுடைய நேசக்குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்" என்று கூறினார். நம்மை நீதிமான்களாக்க தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார். இதைக் குறித்து அந்த கவிஞன் பாடினதில் வியப்பொன்றுமில்லை. "ஜீவித்திருந்து என்னை அவர் நேசித்தார். அவர் மரிக்கையில் என்னை இரட்சித்தார். அடக்கத்தில் என் பாவங்களை தொலைதூரம் எடுத்துச் சென்றார். என்றாவது ஓர் நாள் அவர் வருவார். ஓ அது என்னே மகிமையின் நாள்” 68. புயலடிக்கும் கடல்களில் ஒரு கிறிஸ்தவன் இத்தகைய நம்பிக்கையின் மேல் தான் இளைப்பாறிக் கொண்டிருக்கிறான். புயல் சீறும், எல்லாவித துன்பங்களும் வரும். ஆனாலும் நாம் நங்கூரம் பாய்ச்சப்பட்டு இருக்கிறோம். அது போதுமானது. அது ஒரு போதும் மூழ்காது. 69. அநேக கிறிஸ்தவர்கள் மேடுபள்ளமுள்ள ஜீவியத்தையுடையவர்களாக - (ups and downs) இருக்கின்றதை என் வாழ்நாளில் கவனித்திருக்கிறேன். அதைக் குறித்து நான் ஆச்சரியப் பட்டதுண்டு. "ஜனங்கள் ஏன் மிகவும் அலைக்கழிக்கப்படுகின்றார்கள்" என்ற செய்தியை, நான் போகின்ற மற்ற சபைகளில் பிரசங்கிப்பதைப் பார்க்கிலும் என்னுடைய ஜனங்களிடம் இந்த கூடாரத்தில் பிரசங்கிப்பதே சிறந்த காரியம் என்று நான் யோசித்தேன். 70. அத்தகைய ஜனங்கள் மிகவும் பக்தியுள்ளவர்களாகவும், ஆழமான விருப்பம் கொண்டவர்களாகவும், தினமும் ஆராய்ந்து தேடி தேவனை கண்டுபிடிக்கிறவர்களாகக் காணப்பட்டாலும், கிறிஸ்துவில் நங்கூரம் பாய்ச்சப்பட்ட அல்லது எந்தவிதமான நிலையான தீர்மானத்திற்குள்ளும் வரமுடியாமலிருக்கின்றனர். எனக்குக் கிடைத்த அனுபவத்தின் மூலம் இத்தகையோர் பகுத்தறிவாளர்கள் அல்லது தேவனைப் பற்றி தங்கள் புத்தியில் மட்டும் அறிந்தவர்கள் என்பதை நான் அறிந்துக் கொண்டேன். 71. கிறிஸ்தவ மார்க்கத்தில் இரண்டு வித்தியாசமான சாரார் இருக்கின்றனர். காண்பதற்கு அது விரோதமாயிருக்கின்றது. இரண்டு வித்தியாசப்பட்ட சாரார் என்று கூறுவதைக் காட்டிலும், அதை சரியான வார்த்தையில் கூறப்போனால், இரண்டு வித்தியாசப்பட்ட தோற்றங்கள் (Phases) என்றுக் கூறலாம். 72. அதில் முதல் கூட்டத்தார் தேவன் தம்முடைய வார்த்தையில் என்ன சொல்லியிருக்கிறார் என்பதையும், இயேசுகிறிஸ்துவைப் பற்றியும் தங்கள் புத்தியினால் மூளையின் மனோபாவனையாக (Mental Conception) அறிந்துக் கொண்டவர்கள். 73. இரண்டாவது கூட்டத்தார், அவர்கள் இருதயத்தில் தேவனே தந்ததான, சோதனைக்கடுத்த அனுபவத்தை உடையவர்களாய் இருக்கின்றனர். (Experimental Experience). 74. புத்தி சம்பந்தமான பக்தியுடையோன் பசி தாகம் அடையும் போது, அவன் விருந்து உண்கிறான். ஆனால் அவனுடைய விருந்து நிலை நிற்பதில்லை. 75. ஆவிக்குரியவனோ, எல்லா நேரங்களிலும் ஜெயமுடையவனாய் இருக்கின்றான். எதுவும் அவனை தொல்லை செய்வதில்லை. அவர்கள் நங்கூரம் பாய்ச்சப்பட்டு திடமாயிருக்கின்றனர். எத்தகைய புயல்களும், சோதனைகளும் வந்தாலும் அவைகள் அவர்களை கலக்கமுறச் செய்வதில்லை. அவர்கள் தங்களுக்குள் ஏதோ ஒன்றை பெற்றிருப்பதாகக் காணப்படுகின்றார்கள். தேவனுக்கென்று வாழ முயற்சிக்கும் கிறிஸ்தவர்கள் அத்தகைய கிறிஸ்தவர்களைக் கண்டு பிரமிக்கின்றனர். 76. நான் அடிக்கடி வியப்புற்று, "கர்த்தாவே, இந்த ஜனங்கள் பெற்றிருப்பதை அடைய மற்றவர்கள் ஆவலோடு முயற்சித்தாலும் அதில் தோல்வியுறுகின்றார்களே, இது என்ன-? என்று யோசிப்பேன். 77. கிறிஸ்துவுக்கென்று உழைத்தவர்களாகிய நம்மெல்லோருடைய இருதயங்களிலும் இது ஒரு மகத்தான கேள்வி என்பதை நானறிவேன். முதலில் கிறிஸ்துவிடம் வந்த ஒரு மனிதன் பின்பு அவரை விட்டு பின் வாங்கிப் போவானானால், அவன் திரும்பவும் ஒரு போதும் தன் ஜீவியத்தில் சரியாக இருந்ததை நான் இது வரை கண்டதில்லை. 78. நேற்றைய தினம் ஒரு நீக்ரோ மனிதனிடம் நான் பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஒரு ஊழியக்காரனைப் பற்றி என்னிடம் கூறினார். அந்த ஊழியக்காரன் தன்னுடைய பிரசங்க குறிப்புத் தாள்களை கிழித்தெறிந்து குப்பைக் கூடையில் போட்டு விட்டு, "இதற்கு நான் முழுக்குப் போட்டு விட்டேன்” என்று கூறி, அடுத்த ஞாயிற்றுக்கிழமையன்று அவர் ஒரு பெட்டி நிறைய மதுவை வாங்கி, ஓர் இடத்தில் அமர்ந்து அதைக் குடித்தாராம். பின்பு சில வாரங்கள் கழித்து அவர் தம்முடைய படுக்கையில் மரணத்தருவாயில் கிடந்தாராம். எனக்கு நேரம் இருந்தால் வேதம் இதைக்குறித்து என்ன கூறுகிறது என்று உங்களுக்கு விவரிப்பேன். ஆனால் அது வேறொரு பொருளைப் பற்றியதாயிருக்கிறது. சாத்தான் வந்து அந்த மனிதனை ஆட்கொள்கிறான். தேவன் தம்முடைய பிள்ளையைப் பரம வீட்டிற்கு அழைத்துக் கொள்கிறார். அது தான் காரியம். அது அநேக சந்தர்ப்பங்களில் சம்பவிக்கின்றது. 79. இந்த பசிதாகமுள்ள ஜனங்களைப் பார்க்கும் போது, அவர்கள் அவ்வளவாய் பசிதாகம் கொண்டும் அதை அடைந்து கொள்வதில்லை. நம்முடைய அநேகப் போதகர்களும், வேதக் கல்லூரிகளும் அதிகமான வேத சாஸ்திரத்தினால் ஜனங்களிடம், "நீங்கள் சத்தம் இடாததினாலும், அந்நிய பாஷைகளினால் பேசாததினாலும், அல்லது பல வரங்களை பெற்றுக் கொள்ளாததினாலும் தான் நீங்கள் அதை அடைந்துக் கொள்ளவில்லை” என்று கூறுகிறார்கள். இவைகளனைத்தையும் நான் விரோதிக்கவோ அல்லது தவறு என்றோ குறிப்பிடவில்லை. ஆனால் காரியத்தை மொத்தத்தில் நீங்கள் பார்த்தால் இந்த ஜனங்கள் சத்தமிட்டு, அந்நிய பாஷைகளில் பேசி அல்லது வேறு எந்தவித உணர்ச்சியினால் ஊக்குவிக்கப்பட்ட போதும், எந்த மனிதராக அவர்கள் இருக்க வேண்டுமோ அவ்விதம் இருப்பதில்லை. அது உண்மை என்று நாமறிவோம். இத்தகைய மனோபாவனை நிலைமையிலுள்ள மனிதனுக்காக என்ன செய்யக் கூடும் என்பதைக் குறித்து நான் அநேக சமயங்களில் ஆச்சரியப்பட்டதுண்டு. 80. ஆகவே, தேவனுடைய வார்த்தையில் இதைக் குறித்து மிகவும் எளிமையான முறையில் கண்டு அதையே நான் உங்களுக்கு விவரிக்க முயற்சிக்கிறேன். மனிதனுடைய இருதயங்களில் மனதின் புத்திசாலித்தனமான பகுதியும், ஆத்துமாவும் உண்டு என்று கண்ட பிறகு இதை மேலும் விவரிக்கச் செல்வோம். 81. உண்மையிலே, இரண்டு விதமான மனோசக்தியை உடையவர்களாக நீங்களிருக்கிறீர்கள். ஒன்று மூளையின் மூலமாகக் கிரியைச் செய்கின்றது. மற்றொன்று இருதயத்திலிருந்து கிரியைச் செய்கின்றது. இதை ஆத்துமா என்றழைக்கிறோம். இவ்விதமாக அது உங்களுடைய ஆவியும் ஆத்துமாவுமாக இருக்கின்றது. அநேக சமயங்களில் அவைகள் ஒன்றிற்கொன்று மிகவும் ஒத்துப்போகாமல் இருக்கின்றன. தலையானது ஏதோ ஒன்றை கூறும் போது அது தவறாய் இருக்கும் பட்சத்தில், ஆத்துமாவானது அதைக் குறித்து அதியசயிக்கின்றது. ஆனால் அது ஆத்துமாவுக்குள் வரும் போது, தலையானது பின் வாங்குவதாக் காணப்படுகின்றது. 82. சில காரியங்கள் உனக்குச் சம்பவித்திருக்கும். அது அவ்விதமாகத் தான் நடக்கப் போகிறதென்றும் அறிந்திருப்பாய். இருந்தாலும் ஏன் அவ்விதம் நடந்தது என்று உன்னால் விவரிக்க முடியாது அதை விவரிக்க உனக்கு காரணமும் இல்லாதிருக்கும். ஆனாலும் அதை நீ அவ்விதமாகவே ஏற்றுக் கொண்டிருந்திருப்பாய். ஏதாகிலும் ஒன்று ஆத்துமாவில் சம்பவிக்கும் போது இத்தகைய காரியம் நடக்கின்றது. 83. மிகப்பெரிய, விரிவான ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டங்களில் ஜனங்கள் என்னிடத்தில் வந்து, "ஓ சகோ.பிரான்ஹாமே, என்னிடம் எல்லா விசுவாசமும் உண்டு” என்று கூறுவதைக் கவனித்திருக்கிறேன். மூளையின் மூலமாகத் தோன்றும் மனோசக்தியினால் அவர்கள் சொல்வது சரி தான். ஆனால் அவர்களுடைய ஆத்துமாவிலோ அது இல்லை. அவ்விதம் அவர்கள் ஆத்துமாவில் விசுவாசம் இருக்குமானால், ஜெபத்திற்காக மேடையில் அவர்கள் வர அவசியமே இருந்திருக்காது. இந்தக் காலை நேரத்திலே பிள்ளைகளுக்குப் போதிப்பது போல நான் போதிக்க விரும்புகிறேன். நாம் சற்று பழைய ஏற்பாட்டிற்குச் சென்று இக்காட்சியை ஒப்பிட்டு நோக்கிப் பார்ப்போம். நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். 84. ஒப்புவமையாக (Typing) காரியத்தைக் காட்டுவதில் நான் நம்பிக்கையுள்ளவன். உதாரணப்படுத்திக் காண்பிக்கும் போது அது புரிந்துக் கொள்வதற்கு மிகவும் எளிதாய் இருக்கும். பிள்ளைகளுக்குப் போதிப்பது என்பது மிகவும் நல்லது நாமெல்லோரும் பிள்ளைகள் தாம். நாம் தேவனுக்குள் வாலிபப் பிள்ளைகள். "தேவனுக்குள் வளர்ந்த ஒரு முதிர்ந்தவன் நான்” என்று இங்கு யாராவது கூற முடியுமா-? அவ்விதம் நாம் கூற முடியாது. ஏனெனில் நாம் தேவனுக்குள் சிறு பிள்ளைகள். அது தான் உண்மை. 85. இப்பொழுது, இந்தப் பொருளைப் பற்றிய காரியத்தை பொருத்தத்தக்கதான சரியான இடம் தேவனுடைய கிரியைகள் தான் என்பதை பார்க்க முயற்சி செய்ய விரும்புகிறோம். ஆகவே, நாம் பழைய ஏற்பாட்டிற்குச் சென்று இக்காரியத்தை இஸ்ரவேல் புத்திரரோடு ஒப்பிடுவோம். இஸ்ரவேல் புத்திரர் சிவந்த சமுத்திரத்தைக் கடந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு வரும் பிரயாணத்தில், தேவன் தம்முடைய கிருபையின் ஐசுவரியத்தினால் ஒவ்வொரு இரவும் வானத்திலிருந்து மன்னாவை பூமியின் மேல் பெய்யப் பண்ணினார். 86. ஜனங்கள் இந்த மன்னாவை எடுத்து அப்பங்களாக, அடைகளாக செய்து புசித்தார்கள். இந்த உணவு, வனாந்திரப் பிரயாணத்தில் அவர்களுடைய ஜீவனைக் காப்பாற்றிது. 87. அநேக சந்தர்ப்பங்களில் அவர்கள் அந்த மன்னாவை சிறிது அதிக நேரம் பூமியின் மேல் விட்டு வைக்கும் போது அது உருகிப்போயிற்று அல்லது பூமியானது அதை தக்க வைக்க முடியாமற் போயிற்று என்று நாம் பார்க்கிறோம். 88. இன்றுள்ள கிறிஸ்தவ மார்க்கத்திற்கும் இதே தான் சம்பவிக்கின்றது. அநேக ஜனங்கள் 9 மணிக்கு முன்பாகவே பசியுள்ளவர்களாய் இருக்கிறார்கள். உங்களுக்கு மிகுதியான எழுப்புதல் கூட்டங்கள் உண்டாயிருக்கின்றன அல்லது கூட்டப் பிரகாரங்கள் (Camp Grounds) உண்டாயிருக்கின்றன. (நான் என்ன கூறுவதென்று தெரியவில்லை) - கூட்டப் பிரகார நட்சத்திரங்கள்-? (Camp Ground Stars). அநேக ஜனங்கள் ஆராதனைக்குச் செல்கின்றார்கள். தேவ ஆவி பொழியப்படும் போது அவர்கள் களிகூர்ந்து சத்தமிட்டு, கர்த்தரை துதிக்கின்றார்கள் சாபங்கள், பாவங்கள் அவர்கள் இருதயங்களை விட்டு அகலுகின்றன. ஆனால் எழுப்புதல் கூட்டம் முடிந்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பின், அவர்கள் அதே மன்னாவை புசித்துக் கொண்டே இருந்தாலும், திரும்பவும் தங்கள் பழைய ஜீவியத்திற்கே போவதை காண்கிறார்கள். 89. இந்த அஸ்திபாரமாகிய உண்மையை பெந்தெகோஸ்தே உலகத்திலுள்ள பெந்தெகோஸ்தே ஜனங்களால் உணர்ந்துக் கொள்ள இயலுவதில்லை. இது மிகவும் கடினமான காரியம். ஏனெனில் ஒவ்வொரு சபையும் அவர்களுக்கென ஒரு உபதேசத்தை வைத்து இருக்கிறார்கள். அவர்களுடைய சுவிசேஷகரும், போதகரும் தினமும் கூறுவதைக் கேட்டு, "ஓ நான் பெற்றுக் கொண்டேன். அது என்ன வித்தியாசத்தை உண்டாக்குகின்றது” என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த சத்தியத்தைப் பெற்றுக் கொள்ள அவர்கள் தவறுகின்றார்கள். 90. இயேசு கிறிஸ்து கூறின அஸ்திபாரமாகிய இந்த சத்தியத்தை அல்லது மகத்தான விசுவாசத்தை நான் அடிக்கடி பேசி, விசுவாசித்து அதையே செய்துக் கொண்டிருக்கிறேன். அந்த வசனம் இது தான்: "என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (யோ.5:24) "என் வசனத்தைக் கேட்டு ... என்று எழுதியிருக்கிறது பார்த்தீர்களா-? ஓ இதை ஒவ்வொரு இருதயத்திலும் நங்கூரம் பாய்ச்ச வேண்டுமென்று விரும்புகிறேன். 91. நீங்கள் என்ன செய்ய வேண்டும்-? கேட்டு விசுவாசிக்க வேண்டும். விசுவாசம் கேள்வியினாலே வரும். கேள்வி தேவனுடைய வசனத்திலே வரும். நீங்கள் அதை விசுவாசித்து, கைக்கொண்டு பின் இளைப்பாறுவதாகும். இதைப் புரிந்துக் கொள்ள முடிகின்றதா-? தேவனுடைய வார்த்தை "கேள்” என்று சொல்லுகிறது. உன்னுடைய இருதயத்திலுள்ள ஆத்துமா "விசுவாசி” என்று கூறுகிறது. அங்கு தான் உன் முன்பு மனிதனும் இளைப்பாறுகின்றது. அது முடிந்து போன ஒரு காரியம். ஐயா. 92. விசுவாசம் கேள்வியினால் வரும். இயேசு "என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பின வரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய - ஒரு போதும் முடிவு பெறாத - அல்லது என்றென்றும் ஜீவித்திருக்கிற - ஜீவன் உண்டு” என்று கூறினார். அது அற்புதமாக இல்லையா-? "நித்திய ஜீவன் - அழிவுக்குட்படாமல்: ஆனால் ஏற்கனவே மரணத்தினின்று ஜீவனுக்குள் பிரவேசித்தல் - அவன் நித்திய பிரிவினையினின்று நீங்கி நித்திய பிரசன்னத்தில் இருக்கிறான்” ஆமென்... நீ தேவனுக்கு அந்நியனாய் இருந்த போது, நீ தவிர்க்கப்படத்தக்கவனாய் இருந்தாய். இப்பொழுதோ, நீ அவருக்கு புத்திரன். 93. மரணத்தினின்று ஜீவனுக்கும், இருட்டினின்று வெளிச்சத்திற்கும், அழிவிலிருந்து அழியாமைக்கும், துன்பத்தினின்று இன்பத்திற்கும், பிரவேசித்து கர்த்தர் சொல்லுகிறதாவது என்பதில் உண்மையாக இளைப்பாறிக் கொண்டிருக்கிறாய்: 94. உணர்ச்சிகளின் மேலோ, மனோபாவமான எண்ணங்களின் மேலோ, வேத சாஸ்திரம், அல்லது அஸ்திபாரமற்ற யாதொன்றின் மேலோ அல்லது சிலர் கூறுகிறபடி, "நல்லது, நீ இங்கு வந்து எங்கள் சபையில் சேர்ந்துக்கொள்: அப்பொழுது எல்லாம் முற்றுபெறும்” என்று கூறுவதின் மேல் நீ இளைப்பாறுகிறதில்லை. மாறாக மனித ஆத்துமா திடமாக இளைப்பாறுகின்ற தேவனுடைய வார்த்தையின் மேலேயே நீ இளைப்பாறுகின்றாய். அது தான் காரியத்தை முற்று பெறச் செய்து, உண்மைப் பொருளாகிறது. 95. இரண்டாவது நிலைக்கு நாம் துரிதமாகச் செல்வோம். பாளையத்தில் மன்னாவை இந்த ஜனங்கள் புசித்த பின்பு, இரவு வரும் முன்பே அவர்களில் அநேகர் பசியுள்ளவர்களாயிருக்கக் காரணம் என்ன-? அநேக ஜனங்கள் ஆவிக்குரிய கூட்டங்களுக்குச் செல்லுகிறார்கள்: அநேகர் வீடுகளில் தங்கள் வானொலிக்கருவியைத் திருப்பி அதனின்று ஒரு தேவ செய்தியைக் கேட்டுக் களி கூறுகின்றார்கள். இன்னும் பலர் ஆலயத்திற்குச் சென்று ஒரு நல்ல தேவ செய்தியினை கேட்டு களிகூருகின்றனர். ஆனால் ஒரு சிறு கஷ்டம் உண்டானவுடனே அவர்கள் பெற்றதற்காக அந்தக் களிகூறுதல்களெல்லாவற்றையும் எடுத்துப் போடத்தக்கதாக அங்கு என்ன சம்பவிக்கின்றது-? நிச்சயமாகவே, நீங்கள் தேவ வார்த்தையைக் கேட்கும் போது உங்களுடைய ஆத்துமாக்கள் வார்த்தையில் களிகூருகின்றன. பரிசுத்த ஆவியைத்தான் அங்கு நீங்கள் உட்கொள்ளுகின்றீர்கள். 96. நீங்கள் விசுவாசிக்கும் போது, நித்திய ஜீவனுக்கென்று விசுவாசிக்கின்றீர்கள் என நான் நம்புகிறேன். கர்த்தராகிய இயேசுவை நீங்கள் ஏற்றுக் கொண்டு விசுவாசிக்கும் போது அது உங்களுக்கு நித்திய ஜீவனை அளிக்கின்றது என நான் நம்புகிறேன். பின்பு ஒரே ஆவியினால் கிறிஸ்துவின் சரீரமாகிய விசுவாசிகளுக்குள் ஞானஸ்நானம் செய்யப்படுகிறீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். கர்த்தருக்குச் சித்தமானால் இன்னும் சிறிது நேரத்தில் அதைக் குறித்து நாம் பேசலாம். 97. "பவுல் மேடான தேசங்கள் வழியாகப் போய் எபேசுவுக்கு வந்தான். அங்கே சில சீஷரைக் கண்டு, நீங்கள் விசுவாசிகளான போது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா-? என்று கேட்டான்” 98. கவனியுங்கள். உங்கள் விசுவாசம் உங்களை கிறிஸ்துவில் நங்கூரம் பாய்ச்சுகின்றது. அது புத்தியில் ஏற்றுக் கொள்வதாகும். ஏனெனில் நீங்கள் அதை விசுவாசித்து ஏற்றுக் கொண்டு அது உண்மை என்றும் சத்தியம் என்றும் உணர்ந்துக் கொள்வதினால் இப்பொழுது நீங்கள் கிறிஸ்தவர்களாகின்றீர்கள். நீங்கள் விசுவாசிப்பதினால் நித்திய ஜீவனை உடையவர்களாய் இருந்து, தேவனுக்குள் பிரவேசித்து, பாளையத்தின் மேல் விழும் மன்னாவைப் புசிக்கின்றீர்கள். 99. பல ஜாதியான ஜனங்கள் அதே மன்னாவை புசித்தார்கள் என்ற வினோதத்தை நீங்கள் கவனித்தீர்களா-? அபிஷேகத்தினால் ஒரு செய்தி பிரசங்கிக்கப்படும் போது, கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக் கொள்ளாத பாவிகளான ஜனங்கள், தேவனுடைய அற்புதங்களின் அசைவையும், வியாதி சொஸ்தமாக்கப்படுவதையும், உண்மையாகக் கிரியைச் செய்யும் தேவ ஜனங்களையும் பார்த்து தங்கள் இருதயங்களைத் திறந்து இவைகளெல்லாவற்றிலும் களி கூற முடியும். அதே விதமான மன்னாவைத் தான் இன்றும் கிறிஸ்தவர்கள் புசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உங்களால் காண முடிகின்றதா-? தேவன் மூன்று விதமாக கிரியை செய்கிறதை நீங்கள் பின்பற்ற வேண்டும். ஏனெனில் அதில் அவர் பரிபூரணமாயிருக்கிறார் என்ற என்னுடைய உபதேசத்தை நீங்கள் எப்பொழுதும் ஞாபகம் கொள்ள வேண்டும். 100. தாங்கள் பெற்றதை உடனே ஏன் இழந்து விடுகிறார்கள் என்று நாம் அதிசயிக்கிறோம். இந்த மன்னாவானது மறைந்து போகிறதாயிருக்கின்றது. அது பாளையத்தின் மேல் வரும். பின்பு மறைந்து போகும். திரும்பவும் வரும். ஒவ்வொரு நாளும் அவ்விதமே வரும். ஆனால் 9 மணி அளவில் அது மறைந்து போகும். 101. ஆலயத்தில் நின்று களிகூர்ந்து, ஆலயத்தை விட்டு வெளியேறியவுடன் ஒன்றிரண்டு நாட்கள் கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்திருந்து விட்டு பின் நல் நடக்கையற்ற கிறிஸ்தவர்களாக பேருக்கு வாழ்கின்ற அநேகரை நான் சந்தித்திருக்கிறேன். பின்மாற்றடைகிற மனிதனோ அல்லது பெண்ணோ யாராயிருந்தாலும் சரி, அவர்கள் உன் கையை குலுக்கி, "கிறிஸ்தவ வாழ்க்கையை நான் செய்ய விரும்பவில்லை” என்று கூறும் போது, அதற்காக நீ வருத்தப்பட வேண்டியதாயிருக்கும். 102. தெய்வீக சுகமளித்தலை ஜனங்கள் ஏற்றுக் கொண்டு, "ஓ, இது தேவ வார்த்தையில் இருப்பதைக் காண்கிறேன். கர்த்தாவே, உமக்கு நன்றி. நான் அதை விசுவாசிக்கிறேன்” என்று கூறி சில நாட்கள் கழித்து, ஒரு சிறு புயல் அவர்களைத் தாக்கும் போது அவர்கள் பின் வாங்கிப் போகின்றனர். அத்தகையோரை நீங்களும் கவனித்திருப்பீர்கள். அது உண்மையான காரியம்! அதைக் குறித்து ஜனங்கள் ஏதும் செய்ய முடியாமற் போகிறது. ஆகவே, இவைகளெல்லாம் என்ன, இவ்விதம் சம்பவிப்பதற்கு எவை காரணமாயிருக்கின்றன-? இப்பொழுது கவனிப்போம். இஸ்ரவேல் புத்திரரின் வனாந்திரப் பிரயாணத்தில், அவர்களுக்கு ஜீவன் தருவதற்கென்று இந்த மன்னா தேவனால் அனுப்பப்பட்டதாயிருந்தது என்பதை நாம் பார்க்கிறோம். 103. கர்த்தர், மோசேயையும், ஆரோனையும் நோக்கி, ஓர் பொற்பாத்திரத்தில் இந்த மன்னாவை நிறைத்து அதை மகாபரிசுத்த ஸ்தலத்திலே உடன்படிக்கைப் பெட்டியண்டை வைக்கக் கட்டளை இட்டார். இந்த மன்னா ஒரு போதும் பழமையாகாமலும், தன் இனிப்பை இழக்காமலுமிருக்க வேண்டுமானால் அது உடன்படிக்கைப் பெட்டியண்டை வைக்கப்பட வேண்டியதாயிருந்தது. மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் மன்னா இருக்கும் போது எப்பொழுதும் அது கெடாமல், நன்றாக இருந்தது. 104. மகா பரிசுத்த ஸ்தலத்தில் மன்னாவை சுவைத்து புசித்து அதில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனை எப்பொழுதாவது நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா-? அத்தகைய மனிதனை நீங்கள் திங்கட்கிழமையோ, செவ்வாய்கிழமையோ, புதன், வியாழன், வெள்ளி, சனிக் கிழமையோ அல்லது ஞாயிற்றுக்கிழமையோ, மேகம் சூழ்ந்த நாளிலோ, பிரகாசமான நாளிலோ, இருள் சூழ்ந்த நாளிலோ காரியங்கள் சரியாக இருந்தாலும் தவறாகப் போனாலும் எந்த சூழ்நிலையில் அவனை நீங்கள் சந்தித்தாலும் அவன் இனிமையானவனாகவே இருப்பான். தேவ அன்பினால் எப்பொழுதும் நிறைந்தவனாகவும், தவறானதைப் பேசி அல்லது செய்கிறவனாகவோ காணப்படாமல், தேவனுடைய மகிமையின் கீழ் வாழ்ந்துக் கொண்டு இருப்பான். அவன் ஒரு போதும் பசியடைவதில்லை. தன்னுடைய வளர்ச்சிக்காக அவன் ஆலயத்திற்கு செல்ல வேண்டுவதில்லை. ஏனெனில் அவன் எப்பொழுதும் தேவனால் நிறைந்தவனாயிருக்கிறான். 105. ஜனங்கள் உன்னோடு ஆலயத்திற்கு வருவார்கள். அங்கு உன்கையைக் குலுக்கி மகிழ்ச்சியாகப் பேசி உன்னை, "சகோதரனே” என்று அழைப்பார்கள். ஆனால் ஆலயத்திற்கு வெளியே ஒரு வியாபார சம்பந்தமான ஒப்பந்தத்தில் தாங்கள் தீர்மானித்தபடி சரிபடவில்லை என்றால், சுயநன்மையைக் கருதி உன்னோடு வித்தியாசமானவர்களாகி விடுவார்கள். இந்தக் கூடாரத்தில் அத்தகையோர் இருக்கிறார்கள் என்று நான் கூறவில்லை. ஆனால் அத்தகைய ஜனங்களும் இருக்கிறார்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஒரு சிறிய சம்பவம் பழைய கோபத்தையும், சுயநலத்தையும் திரும்பக் கொண்டு வந்து விடும். கேலிப் பரியாசப் பேச்சுகளுக்கு செவி கொடுத்தோ அல்லது அவ்விதமான காரியங்களைச் செய்யவோ உடன்படும் நபர்கள் ஒரு போதும் மகாபரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதில்லை. 106. அத்தகையோர் புறம்பே இருக்கிறார்கள் - உண்மையில் அவர்கள் அதே விதமான மன்னாவைத் தான் புசித்துக் கொண்டிருக்கிறார்கள். மன்னா இருக்குமிடமான கூடாரப் பாளையத்திற்குள் அவர்கள் கொண்டு வரப்படுகிறார்கள். இந்த ஆவிக்குரிய மனிதன் புசிக்கும் அதே மன்னாவைத் தான் அவர்களும் புசிக்கின்றார்கள். அவர்களிருவருக்கும் ஒரே போதகர் தான் இருக்கிறார். அவர்களிருவரும் ஒரே வேதத்தைத் தான் படிக்கின்றார்கள். ஆனால் ஒருவன் எப்பொழுதும் திடமாக தாழ்மையுள்ளவனாக இருக்கின்றான். மற்றொரு மேடு பள்ளங்களை (ups and down) உடையவனாகவும், உள்ளே செல்வதும் வெளியே வருவதுமாக இருக்கின்றான். இருவரும் ஒரே மன்னாவைப் புசித்தாலும் ஒருவன் உள்ளே பிரவேசித்து விடுகிறான். மற்றவனோ இன்னுமாக புறம்பே இருக்கிறான். இருவரும் நித்திய ஜீவனுக்கென்று விசுவாசிப்பவர்கள் தாம். ஆனால் ஒருவன் தேவனுடைய ராஜ்யத்தில் பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டிருக்கிறான். மற்றவனோ புறம்பே இருந்து மன்னாவை புசித்துக் கொண்டே இருக்கிறான். 107. ஜனங்கள், "நீ அதற்குள் பிரவேசிக்க வேண்டுமானால் சத்தமிட்டு, அந்நிய பாஷைகளைப் பேச வேண்டும்” என்று கூறுகிறார்கள். ஆனால் அத்தகைய காரியங்களையெல்லாம் பிரயோஜனமற்றது என்று நாம் காண்கிறோம். 108. சத்தமிடுகிற ஜனங்களை நான் கண்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் ஜீவியத்தில் சரியாக இருந்ததில்லை. நான் மற்றவர்களை நியாயந்தீர்க்கக் கூடாது. அத்தகைய காரியத்தை நான் செய்யவுங்கூடாது. அப்படி சத்தமிட்ட ஜனங்கள் தான்தோன்றித்தனமான வாழ்க்கை வாழ்ந்ததை நான் பார்த்திருக்கிறேன். மேலும் கீழும் நடனமாடி திரும்பி வந்து பயங்கரமான வாழ்க்கை வாழும் ஆண்களையும், பெண்களையும் நான் கண்டிருக்கிறேன். ஆவியில் நடனமாடி அந்நிய பாஷைகளைப் பேசியும் பயங்கரமான கோப உணர்ச்சி கொண்ட ஆணையும், பெண்ணையும் நான் கண்டிருக்கிறேன். அங்கு ஏதோ தவறிருக்கின்றது. இருந்தாலும் அவர்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களை அனுபவிக்கின்றார்கள். அவர்கள் அதை நம்பி விசுவாசிக்கின்றனர். ஆனாலும் அது வெளிப் பிரகாரத்தில் மட்டுமே காணப்படுகின்றது. அது ஒருக்காலும் உள் பிரகாரத்தில் வருவதில்லை. 109. இன்றைக்குள்ள சபைகளோடு அது தான் காரியம். நீங்கள் இதைப் புரிந்துக் கொள்வீர்களென நம்புகிறேன். ஓ... நம்முடைய நங்கூரமானது திரைக்குள்ளாகப் பாய்ச்சப் பட்டிருப்பதின் முன்னடையாளத்தை நான் பார்க்கும் போது அது எவ்வளவு மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறது. "ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக் கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்த கல்லின் மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக் கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன்" என்று வேதம் கூறுகிறது. நீ இந்த உள் திரைக்குள்ளே கொண்டு வரப்பட்டபின், ஜனங்கள் என்ன கூறினாலும் அது உன்னை வித்தியாசப்படுத்துவதில்லை. யாரும் உனக்கு வித்தியாசமானதையும் போதிக்க முடியாது. ஒரு சபையை நீ சேர்ந்ததினாலோ அல்லது ஏதோ சில கிரியைகளை செய்ததினாலோ இது உனக்கு உண்டாயிருக்கவில்லை. ஆனால் ஏதோ ஒன்று உனக்குள் இருந்து, "நீ உன் இருதயத்தில் ஒரு கல்லை உடையவனாயிருக்கிறாய். அது கடினமானதொரு கல்லல்ல. அது மென்மையாயிருக்கிறது என்று உன்னிடம் கூறுகின்றது. எசேக்கியேலில், பழைய காலங்களில், சட்டங்கள் வாசஸ்தலத்தில் பேழையில், தேவனின் பிரமானங்கள், வைக்கப்பட்டபோது, எசேக்கியேல் மற்றொரு காலத்தைப் பற்றி பேசினார். 110. இன்று ஜனங்களுக்குள் இரண்டு வகையினர் காணப்படுகின்றனர். ஜனங்கள் தாங்களாகவே இரட்சிப்படைய முயற்சிக்கின்றார்கள். ஒருவர், "நான் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஆலயத்திற்குச் செல்வேன்” என்று கூறுகிறார். அது ஒரு நல்ல காரியம் சுட்டிக் காட்டுகிறதாயிருக்கிறது. ஆனால் மற்றவையோ என்று கூறுகிறார். அதுவும் ஒரு நன்மையான காரியம் தான். அவ்விதமான காரியங்கள் இன்னுமாக நியாயப்பிரமாணத்தின் கீழ் இருப்பதை இன்னொருவர் நாம் மிகவும் பக்தியுள்ளவனாக இருப்பேன். சேர்ந்தவர்களோ, (இவர்களும் ஆலயத்திற்குச் சென்று நன்மையை செய்கிறார்கள்) தாங்களாக எதையும் செய்கிறதில்லை. ஆனால் ஏதோ ஒன்று அவர்களுக்குள் இருந்து அவர்களுக்காக அதை செய்கின்றது. அது அவர்கள் இருதயத்திலிருக்கும் பரிசுத்த ஆவியேயன்றி வேறல்ல. 111. இந்த உள் பிரகாரத்தைக் கவனியுங்கள். உள் திரைக்குள்ளே வாழ்கின்ற ஜனங்கள் எப்பொழுதும் போஷிக்கப்பட்டு, ஆகாரத்தை உண்கின்றவர்களாகவும் சந்தோஷமானவர் களாகவும் காணப்படுகின்றனர். "நான் என் நியாயப் பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி நான் அவர்கள் தேவனாயிருப்பேன். அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்” என்று எரேமியா தீர்க்கதரிசி வேறொரு காலத்தைப் பற்றி பேசினான். அக்காலங்களில் தேவனுடைய நியாயப் பிரமாணம் கற்பலகைகளில் எழுதப்பட்டு, உடன்படிக்கைப் பெட்டி (The ark) இருதயத்தைக் குறிக்கிறதாய் இருக்கின்றது. ஆகவே தேவன் தம்முடைய புதிய உடன்படிக்கையை அவர்களுடைய இருதயங்களில் எழுதுவதாகக் கூறினார். 112. இருதயமானது தேவனின் வீடாயிருக்கின்றது. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தேவன் தம்முடைய மகிமையில் உடன்படிக்கைப் பெட்டியினுள் இருந்தார். இந்த உடன்படிக்கைப் பெட்டி மனிதனுடைய இருதயம் தான் என்பது வெளிப்பாடு. தேவன் நம்முடைய தலையில் வாசம் செய்கிறதில்லை. இருதயத்தில் தான் வாசம் செய்கிறார். வேத சாஸ்திரத்தினாலோ, மனோபாவனையான புத்தியினாலோ தேவன் அறியப்படுகிறதில்லை. மாறாக தேவன் பழமையான விதத்தில் மனித இருதயத்திலிருக்கிறதான மறுபடியும் பிறந்த பரிசுத்தம் ஆக்கப்பட்ட அனுபவத்தினால் மட்டுமே அறியப்படுகிறார். இருந்தாலும், ஜனங்கள் தங்களுடைய மனோபாவனையான புத்தியினால் (Mental Conception) தேவனை நேசித்து, நல்ல ஜீவியம் செய்யக்கூடும். ஆனால் தேவனை அறிகிற அறிவின் உண்மையான மறைவிடம் இருதயத்தில் தான் இருக்கிறது. கிறிஸ்து என்னும் பரிசுத்த ஆவியானவர் உன் இருதயத்திற்குள் வரும் போது நீ கிறிஸ்துவில் மறைக்கப்படுகிறாய். 113. அவர் உன்னுடைய சுபாவத்தோடு இருந்து, உனக்குள் தம்முடைய சொந்த ஜீவனால் வாழ்ந்து, தம்முடைய சொந்த சித்தத்தையே உன் மூலம் செய்கின்றார். அல்லேலூயா. அது கடினமான காரியம் என்று நான் அறிவேன். ஆனால் அது தான் சத்தியம். முற்றிலுமாய் உன்னை நீ ஒப்புக் கொடுத்த பின்பு, கிறிஸ்து எத்தகைய வார்த்தையைப் பேசுவாரோ அதையே உன் மூலமாய் பேசுவார். அவர் எதை நினைப்பாரோ அதையே உன் மூலமாய் நினைப்பார். அவர் என்ன கிரியைகளைச் செய்வாரோ அதையே உன் மூலமாகச் செய்வார். நீ முற்றிலுமாக ஒப்புக் கொடுக்கப்பட்டு இளைப்பாறிக் கொண்டிருக்கிறாய். தன்னை முழுவதுமாக அர்ப்பணித்த ஓர் கிறிஸ்தவனின் சாட்சி எவ்வளவு அழகாயிருக்கின்றது. 114. கிறிஸ்து எனக்கு ஜீவன். சாவு எனக்கு ஆதாயம். "இனி நானல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்” என்று பவுல் கூறினான். அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தனி மனிதனின் ஆத்துமாவில் கிறிஸ்து வாழ்கிறார். கிறிஸ்து உதடுகளின் மூலமாகப் பேசி, மனதின் மூலமாக சிந்தித்து கண்களின் மூலமாகப் பார்த்து, சுபாவத்தின் மூலமாக கிரியை செய்கிறார். (அல்லேலூயா-!) உலகத்திற்குரியக் காரியங்களெல்லாம் ஒழிந்த பின்பு, அங்கு எப்பொழுதும் இனிமையும், சமாதானமும் தவிர வேறு என்ன இருக்கக்கூடும்-? கிறிஸ்துவே ஆதிக்கம் செலுத்துகிறார். ஆமென், இதை நீங்கள் காண்கிறீர்களா-? கிறிஸ்து உனக்குள் இருப்பதே காரியம். "நல்லது சகோ. பிரன்ஹாமே, அது சத்தியம் என்று நான் விசுவாசிக்கிறேன் என்று நீ கூறுவாய். அவ்விதம் நீ உன் மனோபாவனையில் விசுவாசிப்பது சரி தான். 115. ஆனால் அது உன் இருதயத்திற்குள் வரவேண்டும். அவ்விதம் வருமானால் உன் முழு தன்மையும் கிறிஸ்துவாயிருக்கும். உன்னுடைய கிறிஸ்துவாய் இருக்கும். பசி, தாகம், உன்னுடைய எல்லாம் கிறிஸ்துவாந் இருக்கும். ஒப்புக் கொடுத்து இளைப்பாறிக் கொண்டு இருத்தல் - எல்லாம் பரிபூரணம். எந்த சத்தத்தினால் (Voice) ஒரு பாவியினிடத்தில் பேச வேண்டுமோ, அந்த சத்தத்தில் அவர் அவனோடு பேசுவார். எந்த சத்தத்தினால் ஒரு விபச்சாரியினிடத்தில் அவர் பேச வேண்டுமோ, அந்த சத்தத்தில் அவளோடு அவர் பேசுவார். எந்த சரியான சித்தனையினால் அவர் சிந்திப்பாரோ, அந்த சிந்தனையை உன் மூலமாக அவர் சிந்தித்து அதை உன் இருதயத்தில் பேசுவார். இந்த உலகத்தில் அவர் இருந்த போது செய்த விதமாகவே உன்னிலும் செய்வார். இனி நீ உன்னுடையவனாய் இருப்பதில்லை. ஏனெனில் நீ ஒப்புக் கொடுக்கப்பட்டு விட்டாய். 116. இந்த மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் ஆரோன் வருஷத்தில் ஒரு தரம் பிரவேசித்தான். அங்கு கூடியிருந்த சபையோர் அவனை கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவன் சரியான விதமாக உடையுடுத்தியும், அபிஷேகிக்கப்பட்டும் இருக்க வேண்டியதாயிருந்தது. அவன் தன்னுடைய நடையை அங்கு காத்துக் கொள்ள வேண்டியவனாயிருந்தான். கர்த்தர் துதிக்கப்படுவாராக அவனுடைய அங்கியில் ஒரு மணியும் (Bell) பொன்னால் செய்யப்பட்ட மாதுளைகளும் தைக்கப்பட்டிருந்தது. அவன் அங்கு நடந்து சென்ற போது ஆசாரியர்கள் "கர்த்தருக்குப் பரிசுத்தம், பரிசுத்தம், பரிசுத்தம்” என்று பாடினார்கள். 117. உடன்படிக்கையின் இரத்தத்தை ஒரு தாலந்திலே தனக்கு முன்பாக அவன் கொண்டு சென்றான். அவன் சாரோனின் ரோஜாவினால் அபிஷேகிக்கப்பட்டு, அந்த அபிஷேகமானது அவன் தாடி வழியாக இறங்கி அவனுடைய அங்கிகளில் இறங்குகிறதாயிருந்தது. தேவனுடைய பிரசன்னம் இருக்கிறதான அந்த மகாபரிசுத்த ஸ்தலத்திற்குள் அவன் நடந்த சென்ற போது, அந்த திரையானது, அவனுக்குப் பின்பாக மூடி அவனை முழுவதுமாக அடைத்து விட்டது அவன் வெளியுலகத்திற்கு முற்றிலுமாக மறைக்கப்பட்டு விட்டான். தேவனுக்குத் துதி உண்டாவதாக. 118. நமக்கு ஓர் மறைவிடம் உண்டு. தேவனுடைய பிரசன்னத்தில் நடந்து, இந்த உலகத்தின் காரியங்களுக்கு நாம் மறைக்கப்பட முடியும். இனி ஒரு போதும் உலகத்தின் சத்தத்தை நாம் திரும்பவும் கேட்பதில்லை. ஏனெனில் அதற்குள் ஒலி ஊடுருவுவதில்லை. அல்லேலூயா உலகமானதுவெளியிலிருந்து வியப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நீயோ, உள்ளே தேவனுடைய நித்தியப் பிரசன்னத்திலே ஒரு போதும் கெட்டு போகாத, பல ஆயிரம் வருடங்களுக்கும் அழியாத மன்னாவிலிருந்து புசித்துக் கொண்டிருப்பாய். 119. தேவனுக்குள் நடந்து சென்ற ஒரு மனிதனுக்குப் பின்னால் திரையானது போடப்பட்டு, உலகத்தின் காரியங்களுக்கு அவன் மறைக்கப்படுகிறான். அங்கு தேவபிரசன்னத்திலே அவன் மன்னாவைப் புசித்துக் கொண்டிருக்கிறான். 120. 9 மணியோ, 12 மணியோ அல்லது எவ்வளவு நேரமோ அதைப் பற்றி கவலையில்லை. அவன் அங்கு ராஜாவின் பிரசன்னத்திலே வாழ்ந்துக் கொண்டிருக்கிறான். ஆமென் ஒவ்வொரு நாளும் அவனுக்கு இன்பமாக இருப்பதில் வியப்பொன்றுமில்லை அவன் எத்தகைய இடத்தில் இருக்கிறான் என்று பாருங்கள். அந்த திரைக்குள்ளேயிருக்கும் இரகசிய ஸ்தலத்தை அவன் கண்டு விட்டான். அவனுக்குப் பின்னால் திரை விழுந்து விட்டதால் அவன் உலகத்தின் காரியங்களை இனி காண முடியாது. இந்த கதவுகள் ஒலி புகாவண்ணம் செம்மறியாட்டுத் தோலினால் வெள்ளாட்டுத் தோலினாலும் செய்யப்பட்டது. கிறிஸ்துவில் ஒரு மனிதனை மறைக்கின்ற பரிசுத்த ஆவியின் அபிஷேகம் எனப்படுகிற ஒலி ஊடுருவக் கூடாத வகையில் செய்யப்பட்ட திரை இது. இங்கே தான் அவன் புது சிருஷ்டியாகிறான். இந்த விதமாகத்தான் அவன் அவனுக்கு முன்பாக தினந்தோறும் நடக்கிறான். 121. தேவனுடைய பிரசன்னத்திலிருக்கும் ஒரு விசுவாசியின் சாட்சி எவ்வளவு அழகாய் இருக்கின்றது. கிறிஸ்துவுக்கு எல்லாம் ஒப்புக்கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவன் எனப்படுவதெதுவோ அது எல்லாம் கிறிஸ்துவுக்குள் ஊற்றப்பட்டது. கிறிஸ்து என்னப்பட்டது எதுவோ அது அனைத்தும் சபைக்குள்ளாக ஊற்றப்பட்டது. “நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்” என்று இயேசு கூறினார். ஓ, இதை ஜனங்கள் ஏற்றுக் கொள்வார்களானால், ஒரு விசுவாசிக்கு உண்டாயிருக்கும் சிலாக்கியத்தை அவர்களால் காணமுடியும். 122. "சகோ.பிரான்ஹாமே, இங்கு ஆலோசனைக்காக ஒரு காட்சியை வைத்திருக்கிறீரே, ஆனால் அதை நீர் எவ்விதம் அடைவீர்” என்று நீங்கள் கேட்கலாம். அது தான் அடுத்த காரியம், "சகோ, பிரான்ஹாமே, அதற்குள்ளாகப் போவது எப்படி-?” 123. அதற்கான மாதிரி வழி இங்கேயிருக்கிறது. "சகோ. பிரான்ஹாமே, நான் ஒரு கிறிஸ்தவன். நான் இரட்சிக்கப்பட்டேன். நான் ஞானஸ்நானம் எடுத்து தேவனுடைய ஆசீர்வாதங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் சில நேரங்களில் மேடு பள்ளங்களை உடையவனாய் இருக்கின்றேன். என்னுடைய கவலைகளும் கஷ்டங்களும் என்னை சங்கடப்படுத்துகின்றன. ஒரு வெற்றியுள்ள ஜீவியம் நான் வாழ விரும்புகிறேன்” என்று நீ கூறலாம். நீ இன்னுமாக வெளிப்பிரகாரத்தில் தான் இருக்கின்றாய். இந்த இடத்தை விட்டு நீ அகன்று உள்ளே வர வேண்டும். 124. அன்று இருந்த ஆசாரிப்புக் கூடாரத்தின் முதலாவது காரியம் என்ன-? - பிரகாரங்கள் (Courts). பிரகாரங்கள் நீதிமானாகுதலைக் குறிக்கின்றன. பிரகாரத்திற்கு வெளியே எல்லா இஸ்ரவேலரும் காணப்பட்டனர். ஆனால் பிரகாரத்திற்குள் விருத்தசேதனம் பெற்றவர்கள் மட்டுமே பிரவேசிக்க முடிந்தது. அப்படியில்லாத பட்சத்தில் அவர்கள் அதை தீட்டுப் படுத்தியவர்களாகக் கருதப்படுவர். உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா-? பவுல் புறஜாதியாரை ஆலயத்திற்குள் கொண்டு வந்த போது, "இந்த தேவாலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கூட்டிக் கொண்டு வந்து இந்தப் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான்” என்று யூதர்கள் கூக்குரலிட்டார்கள். பிரகாரத்தில் இருக்கும் ஜனங்கள் தேவனை ஏற்றுக் கொண்டு புதுப்பிக்கப்பட்டவர்களாகவும், தேவனுடைய நித்திய ஜீவன் வாசம் செய்பவர்களாகவும், நீதிமான்களாகவும் இருத்தல் வேண்டும். இத்தகையோரே பிரகாரங்களில் இருக்க முடிந்தது. 125. பின்பு அவாகள் பலி பீடத்திற்கு வருவார்கள். இங்குள்ள வெண்கல பலிபீடத்தில் தான் அவர்கள் மிருகத்தையும் அதன் இரத்தத்தையும் தகனித்தார்கள். அவர்களுடைய அநீதிகளையும், எல்லாப் பாவங்களையும் நீக்கி அவர்களை சுத்திகரிப்பதற்காக தேவன் அவர்களை சந்திக்கும் இடம் இது தான். இதுவே இரண்டாம் பிரகாரம். 126. பின்பு இந்த இரண்டாம் பிரகாரத்தைக் பரிசுத்தமாக்குதல் கடந்தவுடன், அவர்கள் ஓர் அர்ப்பணிக்கப்பட்ட ஜீவியத்திற்குள் பிரவேசித்து, தேவனுடைய பிரசன்னத்தில் காணப் பட்டார்கள். இந்த ஸ்தலத்தில் அவர்கள் காணப்படும் பொழுதுதான் இத்தகைய மகிமையான காரியங்களால் ஆட்கொள்ளப்பட்டார்கள். மரித்த எதுவும் இப்பிரகாரத்தில் வரும் போது அது திரும்பவும் உயிர் பெற்றது. இங்கு நடைபெறுகின்ற காரியம் மிகவும் அழகான ஒப்புவமையாக இருக்கின்றது. 127. இதை நீங்கள் எப்பொழுதாவது யோசித்திருக்கிறீர்களா-? மோசே, ஆரோனின் கோலை எடுத்து மகா பரிசுத்த ஸ்தலத்தில் கர்த்தருடைய சமூகத்தில் வைத்தான். மறுநாள் ஆரோனின் கோள் துளிர்த்திருந்தது. அது துளிர் விட்டு, பூப்பூத்து, வாதுமைப் பழங்களைக் கொடுத்தது. அது வாதுமை மரத்தினின்று எடுக்கப்பட்ட ஒரு சாதாரணக் கிளை தான் நீயும் கூட அது போல ஒரு சமயம் காய்ந்த கோலாய் இருந்தாய். 128. நீ மனித குலத்தினின்று பிரித்தெடுக்கப்பட்ட ஓர் மனிதக் கிளையாயிருந்தாய், நீ ஒரு வேளை விழுந்து போய், மரித்து தேவனிடமிருந்து தவிர்க்கப்பட்டவனாய் இருந்து இருக்கலாம். ஆனால் சிருஷ்டிப்பில் நீ ஒரு தேவகுமாரனாக சிருஷ்டிக்கப்பட்டிருந்தாய். இங்கே இந்த வெளிப்பிரகாரத்தில் ஒரு வேளை நீ குதித்து, சுற்றித்திரிந்து, மதிப்பையும், மரியாதையையும் பெற்றிருக்கலாம். ஆனால் நீ எப்பொழுதாகிலும் இந்த மகிமையான இடத்திலும் தேவனில் மறைக்கப்பட்டு இருப்பாயானால், நீ எதைச் செய்ய வேண்டுமோ அதற்காக உன்னை அர்பணித்து இருக்கிறாய். 129. தேவனிடமிருந்து பிரிக்கப்பட்ட, நம்பிக்கையற்ற, கிறிஸ்துவற்ற ஒரு பாவியை எடுத்து இந்த மகிமை நிறைந்த இடமாகிய கூடாரத்தில் தேவனுடைய சமூகத்தில் வையுங்கள். அவன் பரிசுத்த ஆவியின் கனிகளாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியப் பொறுமை ஆகிய கனிகளைத் தருவான். 130. ஆரோனின் கோல் பூப்பூத்தது. பூப்பூத்தது என்றால் அதனுடன் கூட உயிர்ப்பித்தலும் உண்டாக வேண்டும். அவ்விதம் உயிர்ப்பித்தல் உண்டான பின்பு அது மலர்ந்தது. தன்னுடைய மலரின் மணத்தை வீச வேண்டும். அடுத்து சம்பவிக்கும் காரியம் அதில் கனியுண்டாகின்றது. 131. தேவனுடைய சமூகத்தில் வரும் ஒவ்வொரு கிறிஸ்தவனும் அந்த வழியாகத்தான் வருகிறான். முதலாவது அவன் உயிர்பிக்கப்பட வேண்டியதாயுள்ளது. பரிசுத்த ஆவியானவர் தாமே அவனை எடுத்து உயிர்ப்பித்து, புதிதாக்கி (Refresh) அவனை புதிய மனிதனாக்க வேண்டும். இங்கு உயிர்ப்பித்தலுக்காக பரிசுத்த ஆவியானவர் வருகின்றார். பரிசுத்த ஆவியானவர் அமைதியான மணி நேரங்களில் தம்முடைய சமூகத்தை அளிக்கின்றார். 132. விடியற்காலையில் நீங்கள் வெளியில் சென்று பார்ப்பீர்களென்றால் அங்கு பூமியின் மேல் பனி பெய்திருப்பதை காணலாம். இரைச்சலும், சந்தடியும் நிறைந்த இந்த உலகம் படுக்கைக்குச் சென்று தூங்கின பின்பு, அதிகாலையில் வெளிச்சத்திற்கு முன்பு பனி பூமியின் மேல் பெய்கின்றது. எப்பொழுதாவது நீங்கள் அதிகாலையில் எழுந்து சென்று வெளியில் பார்த்ததுண்டா-? அதிகாலை நேரம் உண்மையிலே குளிர்ச்சியாகவும், புதியதாகவும் இருக்கும். ஏன்-? பழைய உலகமானது சற்று நேரம் மறைக்கப்பட்டு பின்பு புதியதாக உயிர்ப்பிக்கப்படுகின்றது. 133. இந்த உலகத்தின் காரியங்களுக்கு மறைக்கப்பட்ட மனிதர்களின் சமூகத்தில் நீங்கள் எப்பொழுதாவது வந்ததுண்டா-? அத்தகையோரிடம் பேசுவது உங்கள் ஆத்துமாவை உயிர்பிக்கும். ஏனெனில் அவர்கள் தங்களுக்குள் உயிர்ப்பிக்கப் பட்டவர்களாய் இருந்து ஜீவனுக்குள் வர ஆரம்பித்திருக்கிறார்கள். 134. எப்பொழுதாவது நீங்கள் அதிகாலையில், ஒரு ரோஜா தோட்டத்திற்குச் சென்று அதில் மலர்ந்த மலர்களின் மீது பனி பெய்திருக்கக் கண்டு அதின் மணத்தை முகர்ந்ததுண்டா-? 135. இரவு நேரத்தில் தேவனில் மறைக்கப்பட்டு, அடுத்த நாள் காலையில் புதிதாக்கப் பட்டவனாய் வருகிற ஓர் கிறிஸ்தவனைப் போன்று அது இருக்கின்றது. தேவனில் மறைக்கப்பட்டு புதுப்பிக்கப்படுவது ஒரு மணம் வீசும் ஜீவியம். நீ ஐக்கியங்கொண்டு உரையாட விரும்பத்தக்கவர், நீ மறைந்துக் கொள்ள எத்தகைய ரம்மியமான இடம் அது உன் அயலாகத்தானோடு பேச உனக்கு எவ்வளவாய் மணம் வீசும் மலருக்குப் பின்பு தோன்றுவது கனியாகும். பரிசுத்த ஆவியானவர் வரும் இடமெங்கும் தேவனுடைய வித்தை விதைத்து கனியை அங்கு விளைவிக்கின்றார். நீ மகாபரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கையில், நீ விசுவாசிக்கத்தக்கதான "திட நம்பிக்கை என்றும்” (Confidence) மற்றுமொரு மகத்தான காரியத்தை அது உடையதாயிருக்கிறது. 136. இன்று காலை நேரத்திலே இங்கே இந்த பெண் இக்கட்டான நிலையில் அந்தப் படுக்கையில் படுத்திருக்கின்றாள். தேவன் அவளைத் தொடவில்லையென்றால், அவள் மரித்து விடுவாள். அவளோ தலைமயிர் நரைத்த வயது சென்ற ஒரு தாயாயிருக்கின்றாள். சிறிது நேரத்திற்கு முன்பு நான் அவளோடு பேசிக் கொண்டிருந்தேன். ஒரு வேளை மருத்துவர்கள் அவளைக் குறித்து யாதொன்றும் செய்யக் கூடாத நிலையிலிருக்கலாம். கால் இடறி விழுந்ததினால் இத்தகைய சிக்கல்கள் அவள் சரீரத்தில் இருப்பதாக என்னிடம் கூறினாள். இத்தகைய சூழ்நிலையில், துயரமுற்றவளாக இருக்கும் அவளுக்காக நாம் என்ன செய்ய இயலும்-? 137. அவள் சரீரத்தின் பழுதை நீக்கத்தக்கதாக, தன்னில் தான் நிறைந்து, புதுப்பிக்கவல்ல பரிசுத்தாவியானவரின் ஆசீர்வதிக்கப்பட்ட சமூகத்திற்கு கொண்டு வருவது தான் வழியாகும். ஒரு வேளை அந்த மருத்துவர், இதற்கு மேல் தன்னால் ஏதும் செய்ய முடியாது என்று சொல்ல முயன்றிருக்கக் கூடும். ஆனால் நாம் அவளை அந்த இடத்திற்கு தூக்கிச் செல்வோமானால் காரியம் வேறு விதமாயிருக்கும். நீ வயது சென்றவனாகி உன்னுடைய நாட்கள் கழிந்து போயிற்று என்பது ஒரு காரியமல்ல. 138. தேவனுடைய சமூகத்தில் வந்த ஆபிரகாமுக்கு அது ஒரு பெரியக் காரியமாகக் காணப்படவில்லை. அவன் தன்னுடைய நூறாவது வயதிலும் தேவனைப் பிரியப்படுத்தினான். தன்னுடைய சரீரம் செத்து விட்டதைக் குறித்து அவன் கவலை கொள்ளவில்லை. ஏனெனில் அவன் யேகோவா தேவனின் சமூகத்திலிருந்து கொண்டு, தேவன் அளித்த வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருந்தான். ஆம், இந்த வயதான பெண்மணியும் புற்று நோயினால் மரித்துக் கொண்டிருக்கிறாள். மரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் நாம் அவளை அந்த இடத்திற்கு கொண்டுச் செல்ல முடியுமானால், அது மகத்தானதாய் இருக்கும். ஆரோன் தவிர வேறு யாரும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே பிரவேசிக்க முடியாது. ஆரோன். அதற்குள் நடந்து சென்றான். ஏனெனில் யேகோவா அவனுக்கு உள்ளே வர உரிமைத் தந்து அழைத்திருந்தார். 139. இயேசு கல்வாரியில் மரித்த போது இந்த உள்திரையை மேலிருந்து கீழாக கிழித்து எறிந்தார். பிரதான ஆசாரியன் மட்டுமல்ல. தேவனை அணுகுகின்ற ஒவ்வொரு மனிதனும் இந்த மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்க அவனுக்கு உரிமை தந்தார். இங்கே மரித்துக் கொண்டிருக்கும். இந்த பெண்ணிற்கும் அந்த உரிமையுண்டு 140. சகோதரி, வீவர் (Sis. Weaver) அங்கே அமர்ந்திருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு, அவளும் புற்று நோயினால் மரித்துக் கொண்டிருந்தாள் அவளுடைய கைகளை புற்றுநோய் தின்று விட்டிருந்தது. ஜீவவிருட்சத்தின் கனியை புசிக்கவும் திரைக்குள்ளாக வரவும் அவளுக்கும் உரிமையாயிருந்தது. நான் அவளுக்கு இந்த இடத்தில் தானே ஞானஸ்நானம் கொடுத்தேன். அவள் அதை ஏற்றுக் கொண்டு விசுவாசத்தினால் இதோ இன்றும் ஜீவித்துக் கொண்டு இருக்கிறாள். 141. அதோ அங்கு அமர்ந்திருக்கும் சகோதரி. மோர்கன் (Sis.Morgan) அவர்களும் புற்று நோயினால் பீடிக்கப்பட்டு நம்பிக்கையிழந்த நிலைமையில் காணப்பட்டார்கள். ஆனால் விசுவாசம், கேள்வியினாலே வரும். கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும். அவளுடைய பழுதடைந்த நிலைமையினின்று நாங்கள் அவளை வெளியே கொண்டு வந்தோம். அவளை மருத்துவரிடம் தூக்கிக் கொண்டு சென்றார்களாம். மருத்துவர்கள் அவளைப் பரிசோதித்து விட்டு, புற்றுநோயானது அவளுடைய குடல்களை சுற்றிலும் பிடித்து, மூன்று வேர்களை கொண்டதாய் காணப்படுகிறது என்று கூறினார்களாம். இங்கு அமர்ந்திருக்கும் அவளுடைய கணவன் என்னிடம் அதைச் சொன்னார். எல்லா நம்பிக்கையும் அற்று போயிற்று. 142. ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவளைத் திரைக்குள்ளாக மூடி தம்முடைய சமூகத்தில் வைத்தார். மருத்துவர்கள் கூறுவதைக் கேட்டு கலக்கமடைய வேண்டாம் அல்லது யார் என்ன சொன்னாலும் அதைக்குறித்து கவலை வேண்டாம். ஏனெனில் திரைக்குள்ளாகப் போகும் போது, அவிசுவாசிகளின் வாயை அது அடைத்து விடும். பின்பு அவள், அங்கு வைக்கப் பட்டிருந்த பொற் பாத்திரத்தண்டை நெருங்கி, "அவருடைய தழும்புகளால் நான் குணமானேன்” என்று கூறி மன்னாவைப் புசிக்க ஆரம்பித்தாள். இன்னும் புசிக்கத்தக்கதாக மறுநாளும் அது அங்கு இருந்தது. அடுத்த எழுப்புதல் கூட்டம் வரும் வரை காத்திருக்கும் காரியமல்ல அது. ஆனால் அது நித்தியமாயிருந்து அங்கே காத்துக் கொண்டிருக்கிறது. அவள் இன்னுமாக அதே பாத்திரத்திலுள்ள மன்னாவைப் புசித்துக் கொண்டிருக்கிறாள். 143. அது என்ன-? புதுப்பித்தலுக்கு அல்லது உயிர்பித்தலுக்கு அவளைக் கொண்டு வருவது தான் காரியம். திரையானது அவளுக்குப் பின்னால் மூடப்படும். பின்பு அவள் உலகம் சொல்வதையல்ல, தேவன் சொல்வதையே கேட்பாள். இரத்தத்தோடும், அபிஷேகத்தோடும் அதற்குள்ளே செல். யார் எவ்விதம் செய்கிறார்கள் என்பதல்ல, அல்லது நீ எவ்விதம் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறாய் என்றும் அல்லது எந்த சபையை சேர்ந்திருக்கிறாய் என்பதும் காரியமல்ல. தேவன் தம்முடைய சுயசித்தமான கிருபையினால் யாருக்கு பரிசுத்த ஆவியை தர சித்தங்கொள்ளுகிறாரோ அவர்களுக்கு அதை தந்தருளுவார். 144. ஆகவே தான் இங்கே இந்த ஜனங்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தேவனுக்கு முன்பாக அவர்கள் கலக்கமடைந்திருக்கிறார்கள். தேவன் தம்முடைய கிருபையினால் பரிசுத்த ஆவியைத் தருவதினால் அவர்கள் எங்கு வாழ்கிறார்களோ அங்கு வாழ்ந்திருந்து தங்களை அர்ப்பணித்து இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தேவனை நேசிக்கின்றார்கள். அவருடைய சமூகத்தில் ஒவ்வொரு நாளும் ஜீவித்துக் கொண்டிருக்கிறார்களென்று அவர்கள் விசுவாசிக்கின்றனர். வெள்ளங்கள் ஏற்பட்டாலும், துன்பங்கள் நேரிட்டாலும், அவைகள் ஒரு காரியமல்ல. ஏனெனில் ராஜாவின் சமூகத்தில் அவர்கள் இன்னுமாக ஜீவித்துக் கொண்டு இருக்கிறார்கள். "ஓ. நீ சுகமாக்கப்படவில்லை. அது வெறும் பாவனை விசுவாசமே” என்ற சத்தம் இனிக் கேட்கப்படுவதில்லை. 145. ஏனெனில் திரையானது அங்கு மூடிவிட்டது. அவர்கள் அங்கிருந்து கொண்டு ஜீவனுக்குள் வருகிறார்கள். ஆமென். சிறிது நேரத்திற்கு முன்பு நான் அவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தேன். அவர்களிடமிருந்து பரிசுத்த மணம் வீசிற்றே. அவர்களுடைய சம்பாஷனை காலத்திற்கேற்ப உப்பால் சாரம் ஏற்றப்பட்டிருந்தது. தங்களுடைய அயலகத்தாரைப் பற்றியல்ல. அல்லது பலவிதமாக நடந்து போனக் காரியங்களைக் குறித்து பாசாங்கு பேச்சை பேசியவர்களாக அல்ல. அவர்கள் பேச்சு கிறிஸ்துவையும் அவருடைய மகிமையையும் பற்றியதாகவே காணப்பட்டது. அங்கு தான் அவர்கள் தங்களை ஒப்புக் கொடுத்து, பூப்பூத்து, மணம் வீசி, ஒவ்வொரு நாளும் கனியைத் தருகின்றார்கள். 146. அவள் சுகமடைந்து விட்டாள் என்று உனக்குத் தெரியுமா-? அந்த மனிதன் கூட சுகமடைந்து விட்டார். ஆனால் நான் மட்டும் ஏன் சுகமடைய முடியவில்லை-?” என்று பலர் கூறுகின்றனர். நீயும் கூட சுகமடைய முடியும். சகோதரனே, ஆனால் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறுவது தான் அதற்குகந்த வழியாகும். "சகோ, பிரான்ஹாமே, அது என்ன-?” 147. தேவனை அவருடைய வார்த்தையில் ஏற்றுக் கொள். கிரியைகளினால் அல்ல, கிருபையின் மூலமாய் விசுவாசத்தினாலே நீ இரட்சிக்கப்பட்டாய். மனோ பாவனைகளான உணர்ச்சிகளும், அந்நிய பாஷை பேசுதலும், சத்தமிடுதலும் ஒன்றுமில்லை விசுவாசத்தினால் தேவனுடைய சமூகத்திற்குள் நடந்து, "தேவனாகிய கர்த்தாவே, நான் தனிமையில் உம்முடைய வார்த்தை என்னும் அடிப்படையின் பேரில் உம்மண்டை வருகிறேன். இப்பொழுது நாம் உம்மை விசுவாசிக்கிறேன்” என்று கூறு. "சகோ, பிரான்ஹாமே, சத்தமிடுதல், அந்நியப்பாஷைகளைப் பேசுதல் போன்ற வரங்களை நீங்கள் நம்புகிறதில்லையா-?” என்று கேட்கலாம். ஆம், ஐயா குதிரைக்கு முன்னால் வண்டியைப் பூட்டுகிறவனாய் இருக்கின்றாயே. 148. கிறிஸ்துவினிடம் முதலில் வா பரிசுத்த ஆவியானவர் உன்னை ஆட்கொள்ள அனுமதித்து, மன்னாவிலிருந்து புசிக்க ஆரம்பி. அது இன்றைக்கு மட்டுமல்ல. என்றென்றும் உனக்கு இனிமையாய் இருக்கும். வெளிச்சத்தைக் குறித்து மற்றுமொரு காரியத்தையும் நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். ஒரு விசுவாசி கிறிஸ்துவுக்குள்ளிருக்கும் போது அவன் விநோதமான வெளிச்சத்தில் நடக்கிறான். 149. இவ்வெளிச்சத்தைக் குறித்து விநோதமானக் காரியத்தை மூன்று பிரகாரங்களிலும் இப்பொழுது கவனிப்போம். நீதிமானாக்கப்பட்ட மனிதன் இங்கு முதல் பிரகாரத்தில் காணப்பட்டு சிலநாள் பகல் வெளிச்சத்திலும், சிலநாள் மந்தார வெளிச்சத்திலும் நடக்கிறான். இது உங்களுக்குப் புரிகிறதா-? ஓ இதை நீங்கள் காண்கிறீர்களென்று நான் நம்புகிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. சில நாட்கள் மந்தாரமானதாகவும், சில நாட்கள் உண்மையிலே நீ தேவனுக்கு சேவை செய்ய தகுதியானவையா இல்லையா என்பது உனக்குத் தெரியாது. ஏனெனில் நீ வெளிப்பிரகாரங்களில் நடந்து கொண்டிருக்கிறாய். நிச்சயமாக நீ மன்னாவைத் தான் புசித்துக் கொண்டிருக்கிறாய். நிச்சயமாக நீ ஒரு விசுவாசியாக இருந்து நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறாய். நீ மரித்தால் நிச்சயமாக பரலோக ராஜ்யம் செல்வாய், ஆனால் எத்தகைய ஜீவியத்தை நீ இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறாய்-? 150. ஒவ்வொரு நாளும் நீ வெளியே சென்று, "ஓ, இன்று நான் என்னுடைய பெலவீனத்தில் சிக்கிக்கொண்டேன் அதை தவிர்க்க என்னால் முடியவில்லை தேவனே என்னை மன்னித்து அருளும்” என்று கூறுவாய். 151. நிச்சயமாக நீ அவருடைய புத்திரனாகத்தான் இருக்கிறாய். ஆனால் எத்தகைய ஜீவியத்தை நீ செய்கின்றாய்-? அத்தகைய ஜீவியத்தை நீ செய்கின்றாய்-? அத்தகைய ஜீவியத்தை நீ வெறுக்கிறதில்லையா-? இரவும், பகலும் ஏற்படுகின்ற மேடு பள்ளங்களும், சோதனைகளும் உன்னை இழுக்கின்றதே பின்மாற்றம் அடைகின்றாய். திரும்பவும் ஆலயத்திற்குச் செல்கின்றாய். திரும்பவும் பின் மாற்றமடைகின்றாய். பின்பு மனந் திரும்புகிறாய். இங்கு ஒருவரிடம் மன்னிப்பு கேட்கின்றாய். அங்கு ஒருவரிடம் மன்னிப்பு கேட்கின்றாய். இது என்ன ஜீவியம்-? – ஆனால் கிறிஸ்துவுக்குள் பிரவேசித்த மற்றவனோ மலர்ந்து மணம் வீசி தொடர்ந்து சென்று கொண்டே இருக்கின்றான். இத்தகைய நிலைமை அவனுக்கு சம்பவிக்கிறதில்லை. 152. எத்தகைய ஜீவியம் செய்கிறாய் நீ-? பருவநிலைக்கு ஏற்றபடியான ஜீவியம் - சில சமயங்களில் வெளிச்சம், சில சமயங்களில் மந்தாரம், பாதி வெளிச்சம், பிரகாசமான நாள், பனிபடலம் மூடிய நாள், சூரியனை மறைக்கிறதான மேகமூட்டமான நாள், இத்தகைய ஜீவியத்தை தான் நீதிமானாக்கப்பட்ட எந்த மனிதனும் செய்து கொண்டிருக்கிறான். அது தான் உண்மை. இந்நிலையில் மட்டும் வாழ்ந்துக் கொண்டிருப்பவனுக்கு கிடைக்கும் வெளிச்சத்தின் அளவு அப்படித்தான் இருக்கும். "சகோ. பிரான்ஹாமே, நான் கிறிஸ்துவினிடத்தில் வந்திருக்கிறேன். நான் ஒரு சபையை சேர்ந்து என்னுடைய பெயரை புத்தகத்தில் பதிவு செய்து, என்னால் முடிந்தவரை நல்ல ஜீவியம் செய்ய நான் முயற்சிக்கிறேன்" என்று நீ கூறலாம். 153. கர்த்தர் உன்னுடைய ஆத்துமாவை ஆசீர்வதிப்பாராக. சகோதரனே, நான் அதைப் பாராட்டுகிறேன். தேவனும் அதைக் குறித்து மகிழ்ச்சியடைகிறார். "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு” என்ற வசனத்தை நீ விசுவாசித்தால் நீயும் நித்திய ஜீவனில் பங்குள்ளவனாயிருக்கிறாய். "சகோ. பிரான்ஹாமே, நீங்கள் என்னுடைய சகோதரன், நான் உங்களை நேசிக்கிறேன். 154. ஆனால் இந்த மேடு பள்ளமுள்ள ஜீவியம் - நான் ஒரு நிர்ப்பந்தமான மனிதன் என்று என்னை உணர்த்துகிறதே ஓவ்வொரு நாளும் நான் ஜீவிக்க போராட வேண்டியதாயிருக்கிறது - ஆனால் நீங்களும் அந்த பாதையில் தானே நடக்கிறீர்கள். உங்களுக்கு அவ்விதம் இல்லையே ஏன்-? நானும் சற்று ஆழமாய் நடக்க விரும்புகிறேன்” என்று கூறுவாய். 155. நல்லது. அவன் சற்று ஆழமாய் அடுத்த பிரகாரத்தினும் நுழைகின்றான். இங்கு என்ன காணப்படுகின்றது-? இந்த பரிசுத்த ஸ்தலத்திலே குத்துவிளக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த குத்து விளக்கினின்று வரும் ஒளி அவ்விடத்திற்கு வெளிச்சத்தைக் கொடுக்கின்றது. குடித்தல், புகைபிடித்தல், களவு செய்தல், பொய் பேசுதல், அயலானோடு சண்டையிடுதல், மனைவியுடன் சண்டையிடுதல், (அல்லது மனைவி, கணவனோடு சண்டையிடுதல்) போன்ற தீய சுபாவங்களினின்று ஓய்ந்திருக்கும் விசுவாசியான ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ இந்த ஸ்தலம் குறிக்கின்றதாயிருக்கின்றது. பரிசுத்தமாக்கும் இரத்தத்தின் மூலம் இத்தகைய அற்ப காரியங்களை விட்டு ஓய்ந்திருக்கும் ஓர் இடத்திற்கு அவன் வருகிறான். ஒரு புதிய ஜீவியம் செய்ய அழைக்கப்பட்டு, அதிலே அங்கு நடக்கிறான். வெளிப்பிரகார வெளிச்சத்தில் இனி அவன் ஜீவிக்க வேண்டுவதில்லை. ஏனெனில் அதை விட சிறந்த வெளிச்சம் அவனுக்கு இப்பொழுது உண்டாயிருக்கிறது. ஒலிவ எண்ணெயினால் எரிகின்ற ஏழு குத்துவிளக்குகளின் வெளிச்சத்தில், அவன் இப்பொழுது நடக்கிறான். 156. ஒலிவ எண்ணெய் பரிசுத்த ஆவிக்கு அடையாளமாக இருக்கிறது. அங்கு கிடைக்கும் ஞானஸ்நானமானது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமாயிருக்கின்றது. ஆனாலும் இன்னுமாக அவன் திரைக்குள்ளாகச் சென்று கிறிஸ்துவுக்குள் மறைக்கப்படவில்லை. இந்த குத்து விளக்குகளின் வெளிச்சத்தில் அவன் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறான். அங்கு அதிகமான வெளிச்சம் உண்டாயிருக்கின்றது. ஆனால் அந்த வெளிச்சமானது மங்கக் கூடியதான நேரங்களும் உண்டு. சில நேரங்களில் அங்கு புகை காணப்பட்டு வெளிச்சம் மங்கலாவதுண்டு. சில சமயங்களில் விளக்குகளில் ஒன்று அணைந்து போய் திரும்பவும் அதை ஏற்றி வைக்க அயலகத்தானிடம் நெருப்பு கடன் வாங்க வேண்டியிருக்கும். இது ஒரு பூரணமான வெளிச்சமன்று. இந்த வெளிச்சத்திற்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருந்தாலும், இது ஓர் சரியான வெளிச்சமன்று. ஓ, சகோதரனே இதைக் காண்கிறாயோ-? "சகோதரனே, நான் அந்நிய பாஷைகளில் பேசினேன், நான் சத்தமிட்டேன்” என்று நீ கூறலாம். அது அற்புதம் தான். ஆனால் வித்தியாசமான ஒன்றை நான் உனக்குக் கூறட்டும். சரி. அவன் அந்த குத்துவிளக்குகளின் வெளிச்சத்தில் நடந்து கொண்டு இருக்கிறான். ஆனால் அது ஒரு செயற்கையான வெளிச்சமாய் இருக்கின்றது. இந்த வெளிச்சம் சூரியனுடைய வெளிச்சமோ, அல்லது சந்திரன், நட்சத்திரங்களின் வெளிச்சமோ அன்று. 157. வெளிப்பிரகாரத்தில் நீதிமானாக்கப்பட்ட மனிதனுக்கு, இரவு வரும் போது மிகச் சிறிய வெளிச்சமான நட்சத்திரங்களின் வெளிச்சமே கிடைக்கிறது. ஒரு வேளை சந்திரனின் மங்கலான வெளிச்சமாகவும் அது இருக்கலாம். இத்தகைய வெளிச்சத்தில் அவனுக்கு பயங்கர தடுமாற்றம் உண்டாயிருக்கும். 158. இரண்டாம் பிரகாரத்தில் பிரவேசித்த மனிதனுக்கும் எல்லாவித எதிர்பார்த்தல்களும் (Expectation) காணப்படும்'. அவன் தன்னை அர்ப்பணித்தவனாக, "கர்த்தாவே, நான் இந்த சபையின் மூப்பன், நான் உம்மண்டை நெருங்கி ஜீவிக்கப் போகிறேன். நான் ஒரு நல்ல அயலகத்தானக ஜீவித்து என்னால் இயன்ற வரை நல்லதையே செய்ய முயற்சிப்பேன். கர்த்தாவே” என்று கூறலாம். இத்தகைய நோக்கத்தோடு அர்ப்பணித்தவனுடைய வெளிச்சம் அதிசீக்கிரம் நீங்குவது கிடையாது. ஆனால் அந்த திரி புகைந்து அணைந்து போய், பக்கத்தில் இருந்து ஒருவருக்கொருவர் வெளிச்சத்தைக் கடன் வாங்க வேண்டியதாயிருக்கும். 159. ஆனால் திரைக்குள்ளாகச் சென்று இவ்வுலகத்திற்கு முற்றிலுமாய் மூடப்பட்டு, சேராபீன்களின் செட்டைகளுக்கு நடுவே, அந்த ஷெக்கினா (Shekinah) மகிமைக்குள் பிரவேசித்த மனிதனுக்கு வெளிச்சம் ஒரு போதும் மங்கிப் போகிறதுமில்லை. அணைந்து போகிறதுமில்லை. 160. திரைக்குள்ளாக தேவனுடைய பிரசன்னத்தில் ஜீவிக்கிற மனிதன் ஷெக்கினா மகிமையில் வாழ்கிறான். புயல்கள் சீறினாலும், மேகங்கள் சூழ்ந்தாலும் அல்லது சந்திரனும், நட்சத்திரங்களும், குத்துவிளக்குகளும் தங்கள் ஒளியைக் கொடாமற் போனாலும் அதைக் குறித்து அவனுக்கு எந்தவித கலக்கமும் இல்லை. ஏனெனில் அவன் பரிசுத்த ஆவியின் பலத்தினால் தேவனுடைய ஷெக்கினா மகிமையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான். அந்த வெளிச்சம் இரவில் மறைந்து போய் விடுகிறதில்லை. அது ஒரு விநோதமான, மென்மையான வெளிச்சமாய் எரிந்துக் கொண்டிருக்கின்றது. திரைக்குள்ளாக விசுவாசி சுற்றிலும் நடந்து இளைப்பாறுகிறான். ஷெக்கினா மகிமை இருக்குமிடத்தில் மன்னா காணப்படுகிறது. அதில் இருந்து அவன் தினந்தோறும் புசிக்கிறான். மன்னா அங்கு தீர்ந்து போகிறதில்லை. 161. ஓ, அவனுக்கு இந்த உலகத்தின் கவலையில்லை. ஏனெனில் தேவன் அவனுடைய காரியங்களை கவனித்துக் கொள்கிறார். தேவன் அவனுக்கு மேலாக இருந்து கொண்டு அவனுடைய ஜெபத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல, அவன் தேவனுடைய ஷெக்கினா மகிமையிலும் ராஜாவின் பிரசன்னத்திலும் ஜீவிப்பதினால் அவனுடைய ஜெபங்கள் பதிலளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு சமயமும் தீமையான ஏதாகிலும் ஒன்று அவனுக்குக்கெதிராகப் புறப்படுமென்றால், அது அவனை அணுகாது. அவன் அதற்கு செவி கொடுக்கவும் மாட்டான். ஏனெனில் இவ்வுலகத்தின் முணுமுணுப்புகளெல்லாம் திரைக்கு வெளியே காணப்படுகின்றன. என்னுடைய நண்பனே, நீ எப்பொழுதாகிலும் கிறிஸ்துவுக்குள் அந்த இடத்திற்கு வந்து, உலகம் உனக்கு மரித்ததாயிருக்குமானால் ஓ உன்னுடைய பிள்ளைகள் எந்த வழியாக இருந்தாலும், உன்னுடைய தாயார் எப்படியிருந்தாலும், உன்னுடைய தகப்பனார் வேறுவிதமாக கூறினாலும் அல்லது உன்னுடைய போதகரோ, அல்லது மருத்துவரோ என்ன கூறினாலும் நீ அவைகளைக் குறித்து கவலைக் கொள்ள மாட்டாய். ஏனெனில் நீ ஷெக்கினா மகிமையில் தேவ சமூகத்தில் நடந்து ஜீவித்துக் கொண்டிருக்கிறாய். ஒவ்வொரு நாளும் உன் ஆத்துமாவில் இனிமையை உணர்கின்றாய். ஓ எல்லாம் நன்றாயிருக்கிறது. யாதொன்றும் உன்னை சேதப்படுத்த முடியாது. என்னே மகிமையின் ஸ்தலம் அது. ஒரு பாடலைக் குறித்து நான் இப்பொழுது சிந்திக்கிறேன். நான் அவரது பெயருக்கு "அல்லேலூயா" என்ற குள்ளமான திரையைத் தாண்டிவிட்டேன், நான் அரசன் முன்னிலையில் வாழ்கிறேன். வாழ்கிறேன்-! மகிமைகள் ஒருபோதும் தோல்வி அடையாத முக்காடுகளைத் தாண்டின, நான் அரசன் முன்னிலையில் வாழ்கிறேன். நான் ஒளியில் நடக்கிறேன், அழகான ஒளி, கருணையின் பனித்துளிகள் பிரகாசமாக இருக்கும் இடத்தில் வரும்; இரவும் பகலும் நம்மைச் சுற்றி பிரகாசிக்கவும். இயேசு, உலகத்தின் ஒளி. அவர் தன்னை மறைக்கட்டும். மேலும் நான் என்னை இழந்து விடுகிறேன், ஆண்டவரே, உன்னில் அதைக் கண்டு பிடிக்கிறேன். தன்னை சிலுவையில் அறையலாம். "கிழிக்கப்பட்ட திரையை நான் கடந்து விட்டேன். அவர் நாமத்திற்கு அல்லேலூயா ராஜாவின் சமூகத்தில் நான் ஜீவிக்கிறேன். ஜீவிக்கிறேன்-! மகிமைகள் ஒருபோதும் தோல்வியடையாத முக்காடுகளைத் தாண்டின, ராஜாவின் சமூகத்தில் நான் ஜீவிக்கிறேன். நான் அழகான வெளிச்சத்தில் நடக்கிறேன். அழகான வெளிச்சம் வந்திறங்கும் கிருபையின் பனித்துளிகள் வெளிச்சம் இரவும், பகலும் நம்மை சுற்றி பிரகாசிக்கின்றன. இயேசு உலகத்திற்கு அந்த வெளிச்சம்”. கர்த்தாவே, நான் என்னை மறைத்துக் கொள்ளட்டும். கர்த்தாவே, என்னை நான் துறந்து என்னில் உம்மைக் காணச் செய்யும். என்னுடைய சுயமெல்லாம் சிலுவையில் அறையப்படட்டும். 162. என் அயலகத்தார் என்னை கேலி செய்து எதையாகிலும் கூறட்டும். நான் ஒரே ஒரு காரணத்திற்காக ஆலயத்திற்குச் செல்கிறேன், அது உம்முடைய சமூகத்தில் தங்குவதற்காக, கர்த்தாவே, நான் திரைக்குள்ளாக பிரவேசித்து விட்டேன். கர்த்தாவே இனி ஒரு போதும் அதை விட்டு நீங்க விருப்பங் கொள்ளமாட்டேன். உம்முடைய வார்த்தையில் நீர் எதைக் கூறுகிறீரோ அதையே நான் நம்புவேன். திரைக்குள் தான் நானிருக்க விரும்புகிறேன். கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவை மட்டும் நான் காணத்தக்கதாகவும், அவரில் ஜீவித்து, நடந்து அவருக்குள்ளாக மரிக்கவும் திரையை எனக்குப் பின்னால் போட்டு என்னை மூடும் 163. மறுரூபமலையில், இயேசு மறுரூபமானவராக அப்போஸ்தலருக்கு முன்பாகக் காணப்படுகையில், அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்க்கையில், இயேசுவைத் தவிர வேறொருவரையும் காணவில்லை. 164. ஓ, கர்த்தாவே அந்த இடத்தில் என்னை மறைத்தருளும். இயேசுவைத் தவிர வேறொன்றையும் நான் காணாதபடி அதனால் என்னை மூடியருளும். இந்த உலகத்தின் மூடபக்தி வைராக்கியங்களை நான் கேட்க விரும்பவில்லை. அணுகுண்டுகளை அவர்கள் தயாரித்து வைத்திருக்கிறதைக் குறித்து எனக்குக் கவலையில்லை. புது ரக விமானங்களை அவர்கள் தயாரித்தாலோ அல்லது புதுவிதமான சவர்லேட் கார்களை (Chevrolets) அவர்கள் உருவாக்கினாலோ, அதைக் குறித்து எனக்கு ஒரு காரியமும் இல்லை ஏனெனில் ஒவ்வொரு நாளும் நான் உலகிற்கு மரித்தவனாக கிறிஸ்துவோடு நடந்து ஜீவித்துக் கொண்டும் இருக்கிறேன். திரையானது என்னைச் சுற்றிலும் மூடி, நான் அவரிலும் அவர் என்னிலுமாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். 165. புயல்கள் சீறட்டும். என்னுடைய நங்கூரமானது திரைக்குள்ளாகப் பாய்ச்சப்பட்டு ஸ்திரமாயிருக்கின்றது. இந்நாட்களில் ஏன் புயல்கள் கடலில் அதிகமாக உருவாகின்றது என்று என்னால் விவரிக்க முடியாது. ஆனால் என்னுடைய நங்கூரமானது திரைக்குள்ளாகப் பாய்ச்சப்பட்டு நிலையாக இருப்பதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கின்றேன். ஒவ்வொரு புயலுக்கும் என் கப்பல் கடலினடியிற் சென்று விடுவதைப் போல் தான் காணப்படுகின்றது. இருந்தாலும் என்னுடைய நங்கூரம் திரையினுள் பாய்ச்சப்பட்டிருக்கிறது. "நான் இயேசுவில் நங்கூரம் போடப்பட்டுள்ளேன், ஜீவியத்தின் புயலை தைரியமாக எதிர்நோக்குவேன். நான் இயேசுவில் நங்கூரம் போடப்பட்டுள்ளேன். காற்றிற்கோ, அலைகளுக்கோ நான் அஞ்சுவதில்லை. நான் இயேசுவில் நங்கூரம் போடப்பட்டுள்ளேன். என்னை இரட்சிக்க அவருக்கு வல்லமையுண்டு. நான் பிளவுண்ட மலையினில் நங்கூரம் போடப்பட்டுள்ளேன். 166. அத்தகைய உள்ளான ஜீவியத்திற்குள் செல்ல இந்தக் காலையில் தேவன் நமக்கு உதவி செய்வாராக. உன்னை அலைக்கழிக்கும் காற்றாகிய ஒவ்வொரு உபதேசங்களும் வாசம் செய்யுமிடமான வெளிப்பிரகாரத்தினின்று நீங்கி உள்ளே வா. 167. கடைசி நாட்களில் சாத்தான் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்து உன்னிடம் வருவான் என்று வேதம் கூறுவதை நீ அறிந்திருக்கவில்லையா-? கல்லறைகள் ஒவ்வொன்றும், பயித்தியக்கார் விடுதிகளும், தண்டிக்கும் ஸ்தலங்களும், ஒவ்வொரு மரணமும், துன்பமும், பசியால் துடிக்கும் குழந்தையும், மரிக்கும் ஒவ்வொரு தாயாரும், ஏவாள் என்னும் ஒரு பெண், சாத்தான் அவளிடம் பேசின போது, அவள் புதிய வெளிச்சத்தை அதில் தேடினதினால் உண்டானவைகள் என்று நீ அறிந்திருக்கவில்லையா-? அவள் ஏதோ ஒரு புதுமையை தேடிக் கொண்டிருந்தாள். ஓ, தேவனே, உம்முடைய ஷெக்கினா மகிமைக்குள் என்னைத் திரும்பவும் மூடிக்கொள்ளும், திரைக்குள்ளாக உம்மிலே மறைத்தருளும். இயேசுவில் நான் திருப்தியடைந்திருக்கிறேன். கர்த்தாவே, உம்மில் என்னைக் காணச் செய்யும். 168. "இதோ நான் தேசத்தின் மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும். ஆகாரக் குறைவினால் உண்டாக்கியப் பஞ்சமல்ல. ஜலக் குறைவினால் உண்டாக்கிய தாகமுமல்ல. கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வசனத்தைத் தேட ஒரு சமுத்திரத் தொடங்கிக் கீழ் திசை மட்டும் அலைந்து திரிந்தும் அதைக் கண்டடையாமற் போவர்கள். அந்நாளிலே செளந்தரியமுள்ள கன்னிகைகளும், வாலிபரும் தாகத்தினால் சோர்ந்து போவார்கள்” என்று வேதம் கூறுகின்றது. அந்த நேரம் இப்பொழுதே உண்டாயிருக்கின்றது. மனிதர்கள் தங்களை தேவர்களைப் போல் காண்பித்து தாங்கள் மகிமைப்பட விரும்புகிறார்கள். அத்தகைய காலம் இதோ இப்பொழுதே உண்டாயிருக்கின்றது. 169. "ஓ, மேதகு இன்னார், இன்னார் அந்தப் பெரிய மனிதர்” என்றெல்லாம் ஜனங்கள் அழைக்கிறார்கள். 170. பவுல் அப்போஸ்தலன், "நான் பலவீனத்தோடும், பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன். ஏனெனில் நான் பிரசங்கிக்கும் வசனத்தை நீங்கள் தொழுது கொள்ளாமல் என்னைத் தொழுதுக் கொள்வீர்களாவென்று நான் பயந்திருந்தேன். உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்தில்ல. தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு, என் பேச்சும், என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது” என்று கூறினான். இன்றுள்ள காலம் மிகவும் பயங்கரமானதாயிருக்கிறது. ஜனங்கள் எப்பக்கத்திலும் சிதறடிக்கப்பட்டிருக்கின்றனர். 171. பிசாசுகளைத் தன்னால் துரத்த முடியும் என்று கூறின் ஒரு மனிதனின் பெரிய கூட்டத்திற்கு சில வாரங்களுக்கு முன்பாக நான் சென்றிருந்தேன். (அப்படி பிசாசுகளை துரத்த அவருக்கு முடியும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை - வேறுவிதமாக நான் கூறுவதற்கு முற்படவில்லை. தேவன் என்னை மன்னிப்பாராக) கொடூரமான முறையில் பிசாசுகளைத் துரத்துவதில் நான் நம்பிக்கையில்லாதவன். உலகத்திலேயே மிகவும் வல்லமையுள்ள ஆயுதம் அன்பு தான். 172. அன்றொரு இரவு தன் கணவனை விட்டு பிரிந்து விட விரும்பிய ஒரு பெண்ணிடம் நான் பேசிக் கொண்டிருந்தேன். அந்தப் பெண் என்னிடம் "சகோ. பிரான்ஹாமே, நான் அவரைப் பிரிந்து வாழப் போகிறேன்” என்று கூறினாள். 173. அதற்கு நான், "அத்தகைய காரியத்தை செய்யாதீர்கள். சகோதரியே” என்று கூறினேன். அப்பொழுது அவள், "ஓ, என்னுடைய கணவனின் ஊழியம் பாழாகி விடும். நான் என்னச் செய்யட்டும்-? நான் நியூயார்க்கிற்குச் சென்று எனக்கு ஒரு வேலை தேடிக் கொள்ளப்போகிறேன்” என்றாள். அதற்கு நான் "சகோதரியே, அவ்விதம் செய்யாதீர்கள்” என்றேன். அதற்கு அவள் "சகோ. பிரான்ஹாமே, நான் என்ன செய்யட்டும்” என்று கேட்டாள். அதற்கு நான் “நீ உன் கணவனிடம் செல்” என்று கூறினேன். அப்பொழுது அவள், "சகோ, பிரான்ஹாமே, அவருடைய படங்களில் (Pictures) ஒன்றை நான் பார்த்தேன். அதைக் குறித்து வெளியரங்கமாய் பேசி, இன்னின்னக் காரியங்களை நான் செய்தேன்" என்று கூறினாள். 173. நான் அங்கு நின்றவனாய், "உன் காரியத்தை என்னால் காண முடிகின்றது. ஆனாலும் நீ உன் கணவரிடத்திற்குச் சென்று அவருடைய கழுத்தைச் சுற்றி உன் கரங்களை போட்டு அவரைத் தழுவி, "என் பிரியமே, நீங்கள் என்ன தவறு செய்திருந்தாலும் பரவாயில்லை. நான் இன்னமும் உங்களை நேசிக்கிறேன்” என்று சொல். அத்தகைய காரியம் ஒன்று போதும்” என்று கூறினேன். 174. ஒரு சமயம் ஒரு வாலிபன் என்னிடம் வந்தான். அவன் ஒரு பெந்தெகோஸ்தே ஐக்கியத்தைச் சேர்ந்தவனாயிருந்தான். இத்தகைய அனேகக் கூட்டங்களில் அவன் பங்கு பெற்றவனாய் இருந்தான். ஆனால் அவனுடைய மனைவியோ ஒரு தீவிர நம்பிக்கையுள்ள லூத்தரனாய் இருந்தாள். அவள் தன் கணவனாகிய இந்த வாலிபனைப் பார்த்து, "நேற்று இரவு முழுவதும் நீர் அங்கே சென்று சத்தமிட்டு, அந்நிய பாஷைகளைப் பேசினீர் என்று நினைக்கிறேன்” என்று கூறினாளாம். அவன் உடனே எழுந்து நின்று, "தேவனே, அவளிலுள்ள பிசாசை இப்பொழுது துரத்துகிறேன்” என்று கூறினானாம். இச்சம்பவம் ஏறத்தாழ அவர்கள் விவாகரத்து செய்யுமளவிற்கு வந்து விட்டது. 175. அவன் ஒரு நல்ல வாலிபனாயிருந்தான். இத்தகைய சூழ்நிலையில் அவன் என்னிடம் வந்து, "சகோ. பிரான்ஹாமே, நாங்கள் விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்” என்று கூறினான். அவன் மேலும் என்னிடம், "அந்த பிசாசை அவளிடமிருந்து என்னால் துரத்த முடியவில்லை” என்று கூறினான். 176. அதற்கு நான், "சகோதரனே, அந்த பிசாசை துரத்த நீ தவறான வழியைத் தெரிந்துக் கொண்டிருக்கிறாய். அவள் உன்னிடம், அவ்வித கோபத்தோடு வரும் போது, நீ அவளைப் பார்த்து, "பரவாயில்லை என் பிரியமே, கர்த்தர் உன் இருதயத்தை ஆசீர்வதிப்பாராக” என்று கூற மிகவும் அன்புடன் உண்மையிலே அவளிடம் நடந்துக் கொண்டு, பின்னர் சம்பவிப்பதைப் பார்” என்று கூறினேன். அவன் அதற்கு, "சகோ. பிரான்ஹாமே, இந்த பிசாசை நான் எவ்விதம் அவளை விட்டுத் துரத்துவது-?” என்று கேட்டேன். அதற்கு நான், "நான் கூறியபடியே நீ செய்து, அவளுக்காக உன் இருதயத்திலே ஜெபம் செய். மற்றக் காரியங்களை தேவன் பார்த்துக் கொள்வார்” என்று கூறினேன். இரண்டு மூன்று வாரங்கள் கழித்து அவன் என்னை சந்தித்து, "சகோ. பிரான்ஹாமே, என் வீடு புரட்சிகரமாக மாறிவிட்டது. இப்பொழுது என் மனைவி மாறி விட்டாள்” என்று கூறினான். 177. அப்பொழுது நான் அவனைப் பார்த்து, "சத்தமிடுவதா, மேலும் கீழும் குதிப்பதா, அல்லது உன் இருதயத்தை முழுவதுமாக அன்பினால் நிறைப்பதா, எது வல்லமையுள்ளது-?” என்று கேட்டேன். தேவன் அன்பாகவே இருக்கிறார். "தேவன் இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்........” என்று வேதம் கூறுகிறது. "விசுவாசத்தினால் நான் அந்த ஊற்றை கண்டதிலிருந்து, உம்முடைய காயத்திலிருந்து, எனக்கு அது ஊற்றப்படுகின்றது. இரட்சிக்கும் அன்பு என்பதே அதன் பொருள். மரிக்கும் வரை அதுவே என் பாடல்”. அது தான் உண்மை. 178. நான் முன்பு குறிப்பிட்டபடி அந்தப் பெரிய கூட்டத்தில், பிசாசுகளைத் துரத்தும் மனிதன், ஒரு பெண்ணைக் கூப்பிட்டு, "இந்த பெண்ணிற்கு மூன்று பிசாசுகள் பிடித்திருக்கின்றன. ஒன்றின் பெயர் ஜெப் (Jeff); இரண்டாவதின் பெயர் சேத் (Seth)” என்று கூறினான். மூன்றாவதின் பெயரைப் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. நல்ல அறிவுள்ள ஜனங்கள் ஆயிரமாயிரமாக அங்கு அமர்ந்திருந்து அத்தகைய கூட்டத்தை ஆதரித்துக் கொண்டிருந்தார்கள். அவன் மேலும் தொடர்ந்து, முதல் பிசாசின் நிறம் பச்சை. இரண்டாம் பிசாசின் நிறம் ஊதா, மூன்றாவதின் நிறம் இளஞ்சிகப்பு” என்று கூறினான். 179. அப்பொழுது நான், "ஓ என் தேவனே இது தவறாயிருக்கின்றதே அது நடைபெறாமலிருக்கச் செய்து விடும்” என்று எனக்குள்ளாக ஜெபித்தேன். பரலோக ராஜ்ஜியத்திற்கு வர முயற்சி செய்யும் அந்த ஜனங்கள் ஆயிரமாயிரமாகக் கூடி இத்தகைய அறிவீனத்திற்கா செவி கொடுக்க வேண்டும்' 180. இது ஏன் இவ்விதமாக நடைபெறுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா-? அவர்கள் ஒரு போதும் திரைக்குள்ளே சென்றதில்லை என்பதையே அது குறிக்கின்றது. அது ஒரு நிச்சயமான காரியம். அவர்கள் அதற்குள் எப்பொழுதாகிலும் செல்வார்களென்றால் அவர்களுக்குக் காரியம் வேறு விதமாக இருக்கும். என் ஆடுகள் "என் சத்தத்தை அறியும்: அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அவனை விட்டோடிபோம். ஆம் ஐயா. மதம் என்ற பெயரில் நீ எத்தகைய உணர்ச்சிகளுக்குள்ளும் பிரவேசிக்கலாம். அஞ்ஞானிகளும் அதையே தான் செய்கிறார்கள். 181. ஆனால் தன்னை முழுவதும் அர்ப்பணித்து, மரித்து, கிறிஸ்துவில் உயிர்த்தெழுந்து, ஷெக்கினா மகிமையில் வாழ்ந்து, தேவ அன்பை தன்னைச் சுற்றிலும் சூடிக் கொண்டிருக்கிற ஒரு மனிதனைப் பற்றிக் கூறுங்கள். அத்தகைய மனிதன் தான் அங்கிருப்பான் என்று நான் விசுவாசிக்கிறேன். கர்த்தாவே, திரைக்குள்ளாக என்னை மறைத்துக் கொள்ளும். 182. பிசாசு தேவ வார்த்தையில் கூறப்பட்ட ஒவ்வொரு வரங்களையும் போலியாக உபயோகப்படுத்தக் கூடும். ஆனால் அன்பை அவனால் போலியாக உபயோகப்படுத்த முடியாது. ஏனெனில் அன்பானது உண்மையில் காணப்படுகின்றது. பிசாசினால் அன்பு கூற முடியாது. அந்த ஒரு காரியம் தான் அவனால் செய்ய முடியாது. ஒருவரையொருவர் நேசிக்கத்தக்கதான அந்த அன்பின் இடத்தில் நீ வருவாயானால், நீ தேவனை நேசித்தால், முழு உலகமும் உனக்கு வித்தியாசமாக காணப்படும். 183. ஒரு சமயம் நான் ஒரு வயதான அம்மையாரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அந்த அம்மையார் என்னை சவுக்கால் அடிக்காத குறையாக கூக்குரலிட்டுத் திட்டினார்கள். நான் அப்பொழுது இன்னொருவருடன் அமர்ந்திருந்தேன். அந்த பெண்மணி என்னை நோக்கி, "இந்த இடத்தை நீ கடந்தாயானால், நான் தலைமை காவல்காரரை இங்கு அழைப்பேன்” என்றேன். அதற்கு நான், "நல்லது. சகோதரியே, நாங்கள் கிறிஸ்தவர்கள். அத்தகைய காரியத்தை நாங்கள் செய்ய மாட்டோம்” என்றேன். அப்பொழுது அவர்கள், "கிறிஸ்தவர்கள் என்று ஒரு காரியமும் இல்லை” என்று கூறி எங்களை நோக்கி கூக்குரலிட்டார்கள். அதற்கு நான், "பெண்மணியே, இயேசு கிறிஸ்துவை நீங்கள் விசுவாசிக்கிறதில்லையா-?” என்று கேட்டேன். அதற்கு அந்த அம்மையார், "ஓ, அவரில் எனக்கு நம்பிக்கையுண்டு. ஆனால் இந்தக் கிறிஸ்தவர்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை” என்று கூறினார்கள். அதற்கு நான், "அவருடைய ஜனங்களை நீங்கள் விசுவாசியாமல் அவரில் விசுவாசமாயிருக்க முடியாது. அம்மையாரே என்றேன். இதைக் கேட்டு அவர்கள் என்னை சபிப்பதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. 184. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த என்னுடைய காரினிடமாக அவர்களோடு நடந்து சென்றேன். அப்பொழுது நான் அவர்களை நோக்கி, "சகோதரியே, இந்த இடத்தை சற்று குறுக்காக மட்டும் கடந்து அங்கே செல்ல விரும்புகிறோம். வேறு எதற்காகவது இக்காரியத்தை நான் உங்களிடம் கேட்டிருக்க மாட்டேன். ஏனெனில் நான் ஒரு இடத்தில் வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன்” என்றேன். அதற்கு அவர்கள், "அது தான் உங்களோடு இருக்கும் காரியம், எங்களைப் போன்ற வயதானவர்களை விட நீங்கள் மித மிஞ்சிப் போக நினைக்கிறீர்கள்” என்று கூறினார்கள். 185. அதற்கு நான், "இல்லை, இல்லை. எங்களை அனுமதிக்கவில்லையென்றால் அதைக் குறித்துப் பரவாயில்லை. இந்தக் காரை இங்கிருந்து எப்படி எடுத்துக் கொண்டு போவது என்று தான் எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் இங்கே வரும் போது உங்கள் கணவர் நாங்கள் அவ்விதம் செய்து கொள்ளலாம் என்று கூறினார்” என்று கூறினேன். அதற்கு அவர்கள், "என் கணவர் என்ன சொன்னார் என்பதைக் குறித்து எனக்கு கவலை இல்லை. நீங்கள் இந்த இடத்தைக் கடக்கக் கூடாது” என்றார்கள். அதற்கு நான், "சகோதரியே, இதோ இங்கு வந்திருக்கிறோம். எங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்றேன். அப்பொழுது அவர்கள், அந்த முற்றத்தின் வழியாக செல்ல முடியாதா-?” என்றார்கள். அதற்கு நான், "பெண்மணியே, அங்கேயிருக்கும் சகதி நிலத்தைக் காண்கிறீர்களா-? இந்த புல்தரையிலிருந்து அந்த கல்லிருக்கும் தூரமான 10 அடி கூட நாங்கள் கடந்துச் செல்ல முடியாது” என்று கூறினேன். அதற்கு அந்த பெண், "அதைக் குறித்து நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் நீங்கள் இங்கே குறுக்கே பாதையைக் கடந்தீர்களென்றால், நான் சென்று தலைமை காவலாளரை கூப்பிடுவேன் என்றார்கள். அப்பொழுது நான், "அவ்விதம் செய்ய உங்களுக்கு பரிபூரண உரிமையுண்டு, உங்கள் கணவரை பார்த்த பொழுதே உங்களையும் பார்க்காததிற்கு நான் வருந்துகிறேன். அதைக் குறித்து நீங்கள் என்னை மன்னியுங்கள்” என்று கூறினேன். 186. ஆனால் அப்பெண்ணோ தன் கையை என் முகத்திற்கு நேராக அசைத்து, என்னை சபித்து, கோபத்தால் கூக்குரலிட்டார்கள். நான் அங்கு அமர்ந்திருந்து, "உங்களை தொந்தரவு செய்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன். இதைக் குறித்து நான் மிகவும் வெட்கப் படுகிறேன். சகோதரியே, ஆனால் உங்கள் கணவர் அதைக் குறித்துப் பரவாயில்லை என்று சொன்னார். அவள் சொன்னாள், "இளைஞர்களாகிய நீங்கள் வயதானவர்களான எங்களைத் தாக்கலாம் என்று நினைக்கிறீர்கள்." 187. இந்த சுற்று வட்டாரத்தில் அநேக சமயங்களில் அத்தகைய காரியங்கள் நடந்திருப்பது பற்றி சந்தேகமில்லை. ஆனால் சகோதரியே, நாங்கள் கிறிஸ்தவர்களாயிருக்கிறோம். நான் இந்தப் பகுதியைச் சேர்ந்தவனல்ல. இங்குள்ள ஒரு சகோதரனை அவனுடைய சங்கடத்தில் இருந்து விடுவிக்கத்தக்கதாக நான் இங்கு ஊழியமாக வந்துக் கொண்டிருக்கிறேன்" என்று கூறினேன். அதற்கு அந்த பெண், "அப்படி என்ன வேலை நீ இங்கு செய்கிறாய்-? என்று கேட்டார்கள். அதற்கு நான், "அம்மையாரே, நான் ஒரு ஊழியக்காரன்” என்று கூறினேன். அதற்கு அவர்கள், "நீ ஒரு ஊழியக்காரனா-?” என்று கேட்டார்கள். அதற்கு நான், "ஆம் தாயே” என்றேன். அப்பொழுது அவர்கள், "அப்படியானால் எத்தகைய ஊழியத்தை இங்கு செய்து கொண்டு இருக்கிறாய்-? என்று கேட்டார்கள். அதற்கு நான், "உபத்திரவத்தில் சிக்கியிருக்கும் ஒருவரை விடுவிக்கத்தக்கதான நல்ல செயலை செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்” என்றேன். அதற்கு அந்த அம்மையார், "உன் பெயர் என்ன-?” என்று கேட்டார்கள். அதற்கு நான், "என் பெயர் பிரான்ஹாம் என்று கூறினேன். அப்பொழுது அவர்கள், "நீர் தான் சகோ.பிரான்ஹாமோ-?” என்று கேட்டார்கள். "ஆம், அம்மையாரே” என்று நான் கூறினேன். 188. அதற்கு அவர்கள், "என்னை மன்னித்து விடுங்கள் ஐயா” என்றார்கள். அவர்களுடைய உதடுகள் நடுங்க ஆரம்பித்து விட்டன. அந்த பெண் அழத்தொடங்கி, “மெத்தோடிஸ்டு சபையை சேர்ந்தவளாகிய நான், இப்பொழுது பின்வாங்கிப் போனவளாக இருக்கிறேன், நான் உங்களிடம் நடந்துக் கொண்ட விதத்திற்காக வெட்கமுறுகிறேன்” என்றார்கள். அதற்கு நான், "தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே. உங்கள் ஆலயத்திற்குத் திரும்பச் சென்று கர்த்தரை சேவியுங்கள். அவ்விதம் செய்வீர்களா-?” என்றேன்: 189. கவனித்தீர்களா-? நானும் கோபத்தோடு-? குதித்தெழுந்து அவர்களோடு வாக்குவாதம் செய்திருந்தால் காரியம் என்னவாயிருக்கும்......-? அன்பான ஒரு சில வார்த்தைகளை அவளுடைய இருதயத்திற்குள் செல்ல விட்டேன். அவ்வளவு தான் சகோதரனே, ஜனங்களை திரைக்குள்ளாக கொண்டு வருவோம். அது தான் சரியான காரியம். 190. ஒரு சிறிய இரகசியத்தை அறிய விரும்புகிறீர்களா-? அன்பு என்பதன் மூலம் தான் நான் காட்டு மிருகங்களையும், வியாதிகளையும் வெற்றி சிறக்கிறேன். தேவனுடைய அன்பு தான் நம்மை நெருக்கி ஏவி அத்தகைய காரியத்தைச் செய்ய வைக்கிறது. திரைக்குள்ளாக வாருங்கள். நம்முடைய தலைகளை தாழ்த்தி சில கணம் நாம் ஜெபிக்கும் போது இன்று உங்களை ஒப்புக் கொடுக்கிறீர்களா-? சகோதரியே, இசைக்கருவியின் அருகில் செல்ல முடியுமா-? 191. எங்கள் பரலோகப் பிதாவே, பரிசுத்த ஆவியினால் தேவனுடைய அன்பு எங்கள் இருதயங்களில் இந்த காலையில் ஊற்றப்பட்டதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். எங்களுடைய நேரமானது கடந்து செல்வதை நாங்கள் பார்க்கும் போது, ஒவ்வொரு மனிதரையும் திரைக்குள்ளாக அந்த திவ்விய சமூகத்தில் வர விடுகிறோம். 192. வாலிபர்களும், பெண்களும் வயோதிபர்களும் இங்கே இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் மறுபடியும் பிறந்து, மகிமையின் நம்பிக்கையும், தேவ நம்பிக்கையும் அவர்கள் மேல் வரும் வரை கிறிஸ்துவுக்குள் அவர்களை மறைக்கும்படி இந்த காலை நேரத்தில் ஜெபிக்கிறோம். 193. சத்துருவின் சோதனைகள் வரும் போது, அது திரைக்கு வெளியே வெகு தூரத்தில் இருக்க, அதின் சத்தத்தையும் அவர்கள் கேட்காவண்ணம், இயேசுவை மட்டும் பார்த்து, அவருடைய ஷெக்கினா மகிமையில் வாழ்ந்து, ஆசீர்வாதத்தில் வாழ்ந்திருக்கவும் செய்யும். 194. இங்கு கூடாரத்தில் இப்பொழுது இருக்கும் அந்த வட்ட வடிவமான வெளிச்சம் ஒவ்வொரு இதயத்திலும் குடியிருக்கட்டும், அத்தகைய தன்மை புத்திசாலித்தனத்திற்கு அப்பாலிருந்து வரட்டும். படத்தை இயற்கையான கண்களினால் பார்ப்பதினாலே அது உண்டாக வேண்டாம். அது அவர்களுடைய இருதயத்தில் வந்து குடியிருந்து, அவர்கள் தேவனுடைய சமூகத்தில் ஜீவித்திருந்து, ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவுக்கென்று கனியுள்ள ஜீவியத்தை கொடுக்க உதவி செய்யும் பிதாவே. நம்முடைய தலைகள் குனிந்திருக்க, நம்முடைய சகோதரி, இந்த இசைக்கருவியில், "இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டே” என்ற பாடலை இசைக்கட்டும். ஷெக்கினா மகிமைக்குள் பிரவேசிக்க அது ஒன்று தான் வழியாகும். "இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டே. எப்பாவத் தீங்கும் அதினால், நிவர்த்தியாகுமே. மாபாவியான கள்ளனும், அவ்வூற்றில் மூழ்கினான். மன்னிப்பும் மோட்சானந்தமும் அடைந்து பூரித்தான்.” 195. இந்த காலையிலே, இங்கிருக்கும் யாராகிலும் கிறிஸ்துவுக்கென்று ஒரு தீர்மானம் எடுத்திருந்தால், "தேவனே, இந்த மேடு பள்ளமுள்ள ஜீவியத்தை நான் வாழப்போகிறதில்லை என்று தீர்மானித்திருக்கிறேன். சிந்தப்பட்ட உம்முடைய இரத்தத்தின் பேரிலும், உம்முடைய வார்த்தையின் பேரிலும், நான் உம்மண்டையில் இப்பொழுது நேராக வருகிறேன். நான் அதை ஏற்றுக் கொண்டு என்னுடைய கைகளை உம்மிடமாக உயர்த்துகிறேன். தேவனாகிய கர்த்தாவே, இன்றிலிருந்து அந்த தீர்மானத்தை நிறைவேற்றுவேன்” என்று கூறுவாயாக. 196. கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக, சகோதரி. அது நன்று. கர்த்தர் உன்னை ஆசிர்வதிக்கட்டும். ஆசீர்வதிக்கிறேன். ஏதோ… கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரரே. அது நன்று. இப்போது, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரர். நான் உன்னை இங்கே பார்க்கிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார், சகோதரி. ஏன், அவர் உங்களைப் பார்க்கிறார். கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக, என் சகோதரனே. 197. "இந்த நாளில் உம்மண்டை வருகிறேன், கர்த்தாவே, குத்துவிளக்கின் வெளிச்சத்திலும், சந்திரன், சூரியனின் வெளிச்சத்திலும் நான் வாழ்ந்து அலுத்து விட்டேன். இருள் வரும் போதும் மறைந்து போகாத அந்த ஷெக்கினா மகிமை எனக்கு வேண்டும். அதுவே என் விருப்பம்" என்று கூறுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே - தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக சிறிய பெண்ணே, இந்த நாள் முதற்கொண்டு நான் எல்லாவற்றையும் செய்வேன். நான் உம்மண்டை வருகிறேன். என்னை புறம்பே தள்ளாதேயும். நீர் அவ்விதம் செய்யமாட்டீர். ஏனெனில் நீர் ஏற்றுக் கொள்வதாக வாக்களித்திருக்கிறீர். நான் உம்மண்டை வருகிறேன். அதை ஏற்றுக் கொண்டு விசுவாசிக்கிறேன்” என்று கூறுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக தாயே, சிறுவனே, சகோதரியே 198. "ஷெக்கினா மகிமையில் நான் ஜீவிக்கப் போகிறேன். பழைய பாவங்களும், துன்பங்களும் வரும் போதும், எல்லாம் என்னை அசைக்க முயற்சித்தாலும், இதை செய் அல்லது அந்த தீமையைப் பேசு என்று தூண்டப்பட்டாலும், நான் அத்திரைக்குள்ளே நங்கூரம் பாய்ச்சப்பட்டு, ஷெக்கினா மகிமையை நோக்கிப் பார்க்கப் போகிறேன். பின்பு அதிலிருந்து நான் உம்மோடு ஜீவிப்பேன்” என்று கூறுங்கள். நான் ஜெபிக்கும் முன்பு, இன்னும் யாராகிலும் தீர்மானத்திற் காக இங்கு இருக்கிறார்களா-? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக பெண்ணே ஏறத்தாழ 12 பேர் தங்கள் கரங்களை உயர்த்தினார்கள். 199. இப்பொழுது நான் என்ன செய்யப் போகிறேன் என்று உங்களுக்குக் கூறப் போகிறேன். நமக்கு தெரிந்திருக்கும்படி, தீர்மானத்திற்குள் வந்தவர்கள் பீடத்தண்டை சுற்றிலும் நின்று ஜெபிப்பது சம்பிரதாயம். கி.பி.17-ம் நூற்றாண்டில், மெத்தோடிஸ்டு சபையால் முதலில் இது தொடங்கப்பட்டது. வேத ரீதியாகப் பார்க்கப் போனால் அத்தகைய காரியத்தை அவர்களை செய்யவில்லை. விசுவாசித்தவர்கள் எத்தனை பேரோ அத்தனை பேரும் இரட்சிக்கப்பட்டனர் என்று தான் வேதம் கூறுகின்றது. 200. இப்பொழுது, நீங்கள் எங்கிருக்கின்றீர்களோ அங்கேயே அமர்ந்திருக்க நான் விரும்புகிறேன். என்னோடு கூட நீங்களும் தலைகளை குனிந்து நான் சொல்லுகிற ஜெபத்தை நீங்களும் என்னோடே சொல்ல விரும்புகிறேன். உங்கள் பக்கத்திலிருப்பவர்களைக் குறித்து கவலைக் கொள்ள வேண்டாம். உலகத்தைப் பற்றியதான கவலைகளும் உங்களுக்கு வேண்டாம். ஒரு வேளை, பரலோக ராஜ்ஜியத்திற்குள்ளாக வரும் தருணம் உனக்கு இதுவே கடைசியாக இருக்கலாம். தேவன் கிருபையின் கதவுகளை உனக்கு திறக்கும்படியாக இன்று நான் ஜெபிக்கிறேன். இது தான் அதற்குரிய நேரம். நம்முடைய தலைகள் குனிந்திருக்க நாம் இப்பொழுது ஜெபிப்போமா. 201. எங்கள் பரலோகப் பிதாவே, இப்பீடத்தினின்று விதைகள் ஜனங்களிடம் தெளிக்கப்பட்டது. ஐம்பதுக்கும் மேலான ஆத்துமாக்களில், பரிசுத்த ஆவியானவர் அதை விழச் செய்து, அவர்கள் தங்கள் கரங்களை உயர்த்தி, "இக்காரியத்தினிமித்தம் இப்பொழுது நாங்கள் உம்மண்டை வந்திருக்கிறோம்” என்று கூறினார்கள். அவர்களுடைய இருதயங்கள் விரிவாகத் திறக்கப்பட உதவி செய்யும். பிதாவே, அவர்களில் அநேகர் நித்திய ஜீவனை ஏற்கனவே பெற்று இருக்கின்றனர். அவர்கள் என்றென்றும் ஜீவிப்பார்கள். அவர்கள் அவ்விதம் தான் ஜீவிக்க வேண்டும். ஏனெனில் நீர் அவ்விதம் சொன்னீர். அதன் காரணமாகவே எங்களுடைய எண்ணங்களை மிகவும் உறுதியாக அஸ்திபாரப்படுத்தியுள்ளோம். 202. இப்பொழுதும் பிதாவே, அவர்கள் உம்மிடம் நெருங்கி ஐக்கியங் கொள்ள அழைத்து வாரும் என்று இயேசுவின் நாமத்தில் கேட்டுக் கொள்ளுகிறோம். இவ்வளவு நாட்களாக அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். சாத்தான் அவர்களை அடித்துக் கொண்டிருந்தான். தவறுகளை எப்பொழுதும் செய்யவும், தவறானதை பேசவும், தவறானதைக் கேட்கவும் தூண்டத்தக்கதாக சாத்தானின் முனகல்களை அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 203. பிதாவே திரையானது உலகத்திற்கும் அவர்களுக்கும் நடுவாக விழுந்து, அவர்கள் கிறிஸ்துவில் மறைக்கப்படட்டும். இனி அலைந்து திரிவதல்ல, அவருடைய மகிமையில் அவர்கள் தரித்திருந்து, தினமும் வேதம் வாசித்து ஸ்தோத்தரித்து தாழ்மையான, அமைதியான ஆவியினால் நிரப்பப்பட்ட கிறிஸ்துவர்களாகட்டும். இதை அருளிச் செய்யும். கர்த்தாவே, நாங்கள் அவர்களை உம்மிடம் ஒப்புக் கொடுக்கிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவருடைய மகிமைக்கென்று இதை ஏறெடுக்கிறோம். ஆமென். "இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டே. எப்பாவத் தீங்கும் அதினால், நிவர்த்தியாகுமே. மாபாவியான கள்ளனும், அவ்வூற்றில் மூழ்கினான். மன்னிப்பும் மோட்சானந்தமும் அடைந்து பூரித்தான்.” 204. இன்னும் சிறிது நேரத்தில் நாம் தெய்வீக சுகமளிக்கும் ஆராதனையை நடத்தப் போகிறோம். ஒவ்வொரு இருதயமும் இப்பொழுது இங்கு மையமாக்கப்பட வேண்டுமென்று நான் விரும்புகிறேன். எத்தனை பேர் தேவனுடைய கிருபையினால் இன்றிலிருந்து அவருடைய பிரசன்னத்தில் விழப்போகிறீர்கள் என்று உணர்கிறீர்கள்-? சரியான அபிஷேகத்திற்குள் நடந்து செல்லுங்கள். சரியான அபிஷேகம் என்றால் எதுவாயிருக்கும்-? வார்த்தையின் படி, அன்பு, சந்தோஷம், சமாதானம். இவைகளே சரியான அபிஷேகத்தின் அடையாளங்கள். தேவன் திரையை உயர்த்தும் வரைஅவ்விதமாகவே நடந்து செல்லுங்கள். அப்பொழுது அவர் உங்களை இழுத்து சுற்றிலுமிருக்கிற உலகத்திற்கு உங்களை மறைத்துப் போடுவார். 205. இதை நீங்கள் செய்வீர்களா-? உங்கள் கைகளை உயர்த்திக் காண்பியுங்கள். நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. கிறிஸ்துவை அந்த முறையில் உங்கள் இருதயத்தில் கண்டு கொள்வீர்களானால், நீங்கள் தேடும் ஒவ்வொரு உணர்ச்சிகளையும், வரங்களையும் அல்லது வேறெதாகிலும் சரி, அவைகளை அது மேற்கொண்டு விடும். அத்தகைய காரியம் தான் எனக்கு இதுவரை உதவி செய்திருக்கின்றது. 206. என்னுடைய கரங்களில் என் தகப்பனை சாய்த்து படுக்க வைத்தேன். அவர் தொய்ந்து போய், என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டே தேவனை சந்திக்கச் சென்று விட்டார். என்னுடைய சகோதரன் அங்கு கழுத்து முறிந்தவனாக, நரம்புகள் அறுபட்டு, இரத்தம் வாயிலிருந்து பாய்ந்தோட வேதனையுற்று மரித்ததை நான் கண்டேன். என் மனைவி மரணப்படுக்கையில் இருந்த போது, என்னை நோக்கிப் பார்த்து, "பில்லி, மறுக்கரையில் நான் உங்களை சந்திக்கிறேன்” என்று கூறினாள். 207. அடுத்த நாளே, என்னுடைய குமாரத்தியாகிய சாரோன் மரணத் தருவாய்ப்பட்டாள். அவளுடைய கால்கள் இழுத்துக் கொண்டன. நான் என் கைகளை அவள் மீது வைத்து, "சாரோனாகிய சிறு ஆத்துமாவே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. உன் தகப்பனாகிய நான் மறுக்கரையில் உன்னை சந்திப்பேன்” என்று கூறினேன். துயருக்கு மேல் துயரம், ஆனாலும் என் நங்கூரம் நிலைத்து நின்றது. அது உணர்ச்சிகளின் மேல் கட்டப்படவில்லை. கர்த்தர் உரைத்த வார்த்தையின் மேலேயே அது பாய்ச்சப்பட்டிருந்தது. 208. இந்த 23 வருட ஊழியத்தில் அந்த நங்கூரமானது ஸ்திரமாயிருக்கிறது. அது மெதுவாக நான் சிலுவையண்டை நெருங்க எல்லா நேரங்களிலும் இழுத்துக் கொண்டேயிருக்கின்றது. அர்ப்பணிக்கப்பட்டு, நெருங்கி ஜீவிக்கிற வாழ்க்கையை தேவன் தாமே உங்கள் ஒவ்வொருவருக்கும் தந்தருள்வாராக. 209. நான் முடிக்கு முன்பாக அதன் பேரில் சற்று கவனமாக செவி கொடுங்கள். சத்தமிட்டு தேவனை மகிமைப்படுத்துவது தான் நீங்கள் பெறுகின்ற ஆசீர்வாதமன்று. அத்தகைய காரியமெல்லாம் நல்லது தான். நீங்கள் மன்னாவைப் புசித்துக் கொண்டிருக்கிறீர்கள். உணர்ச்சி சம்பந்தப்பட்ட காரியங்களை நான் இக்காலை உங்களோடு பேசிக் கொண்டு இருக்கவில்லை. நீங்கள் எழுந்திருந்து அந்நிய பாஷை பேசி, சத்தமிட்டு இந்த கட்டிடத்தில் மேலும், கீழும் ஒடியிருந்திருக்கலாம். அதுவல்ல காரியம். கிறிஸ்துவில் மறைக்கப்பட்டு இரவும், பகலும் அவருக்குள் வாழ்கின்ற ஜீவியத்தைக் குறித்தே நான் பேசிக் கொண்டு இருக்கிறேன். 210. இப்பொழுது அவர் இங்கிருக்கிறார். வியாதியுள்ளவர்களை என்னால் சுகப்படுத்த முடியாது. அவ்விதம் என்னால் சுகப்படுத்தக் கூடுமானால் நான் வியாதியஸ்தரை சுகப்படுத்த விருப்பம் கொள்வேன். நான் சாதாரணமான ஒரு மனிதன். ஆனால் கர்த்தராகிய இயேசுவே சுகமளிப்பவராயிருக்கிறார். 211. "நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது” (யாக். 5:16) என்று வேதம் கூறுகிறது. எலியா நம்மைப் போல ஒரு பாடுள்ள மனுஷனாயிருந்தான் என்பதை கவனியுங்கள். மழை பெய்யாதபடிக்கு அவன் கருத்தாய் ஜெபம் பண்ணினான். அப்பொழுது மூன்று வருஷமும், ஆறுமாதமும் பூமியின் மேல் மழை பெய்யவில்லை. மறுபடியும் ஜெபம் பண்ணினான். அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது. பூமி தன் பலனைத் தந்தது. ஜெபம் காரியங்களை மாற்றுகிறதாயிருக்கின்றது. என்னாலும், உங்களாலும் எதையும் மாற்ற முடியாது. ஜெபமே காரியங்களை மாற்றும். 212. ஒரு சமயம், தேவன் தீர்க்கதரிசியை ஒரு மனிதனிடம் அனுப்பி, அவன் மரிக்கப் போவதினால் அவனுடைய வீட்டுக்காரியங்களை ஒழுங்குப்படுத்தச் சொன்னார். அப்பொழுது அந்த மனிதன் சுவரின் புறமாகத் திரும்பி அழத் தொடங்கி ஜெபித்தான். தேவன் தம்முடைய தீர்மானத்தை மாற்றி அவனுக்கு மேலும் 15 வருடங்கள் தந்தார். அது என்ன-? ஜெபத்தின் வல்லமை. 213. சற்று நேரத்திற்கு நாம் பேசும் பொருளை மாற்றுவோம். கர்த்தருக்குச் சித்தமானால் அடுத்த ஞாயிறு மறுபடியும் உங்களோடு இருப்பேன் என்று நம்புகிறேன். இந்தக் காலை நான் இங்கு வரும் போது, என் மனைவி என்னிடம், "உங்கள் தொண்டை சரியில்லாமலிருக்கின்றதே, நீங்கள் ஆலயத்திற்குச் செல்கிறீர்களா-? என்று கேட்டாள். அதற்கு நான், "வருவதாக நான் வாக்களித்து விட்டேன், எப்படியாயினும் நான் செல்வேன்” என்று கூறினேன். 214. உங்களுக்கு ஒரு காரியத்தை சொல்ல விரும்புகிறேன். ஏதோ ஓர் காரியம் எனக்கு சொல்லப்பட்டதிலிருந்து, இன்று தான் நான் முதலாவதாக ஜெபிக்கும் ஆராதனையாய் இருக்கிறது. நீங்கள் இதைப் புரிந்துக் கொள்வது போல தேவனும் இதை உண்மையென்று அறிவார். இனி மேல் ஜெப ஆராதனை வழக்கமாக இருந்தது போன்று பொதுவாக (Public) இருக்காது. இந்த ஆலயத்தில் கூட்டங்கள் இந்தவிதமாகத்தான் இருக்கும். ஆனால் இனி நாம் போகப் போகிறதான வேறுவிதமான ஆராதனையை நான் குறிப்பிடுகிறேன். ஆனால் நம்பிக்கையானது மட்டும் எனக்கு உண்டாயிருக்கின்றதை நான் அறிந்திருக்கிறேன். 215. நான் பிரசங்கியாயிருக்க தேவன் சித்தங் கொண்டிருப்பாரானால், சுவிசேஷத்தை பிரசங்கிக்கும் சிலரோடு நானும் சேர்ந்துக் கொண்டு அநேக இடங்களுக்கு சென்று பிரசங்கித்து இருப்பேன். ஆனால் நான் அதிகம் படிக்காதவன். என்னுடைய ஊழியம் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதேயாகும். அநேக இடங்களில் ஜெபமானது எத்தகைய காரியங்களைச் செய்கிறது என்பதை அந்த ஆராதனைகளில் நான் கவனித்திருக்கிறேன். அது மிகவும் பலனுள்ளதாயிருக்கிறது. 216. உங்களில் எத்தனை பேர் "கிறிஸ்தவ ஜீவியம்” என்ற பத்திரிகையைப் படிக்கின்றீர்கள்-? அதில் பிரமிக்கத்தக்க காரியத்தை எழுதியிருந்தார்கள். இல்லியனாயிலுள்ள வீடன் என்னும் இடத்தில் வாழும் ஒரு மருத்துவர் அதை எழுதியிருக்கிறார். நிருபர்கள் அவரிடம், "தெய்வீக சுகமளித்தலை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா, அத்தகைய காரியம் ஒன்று உண்டா-?” என்று கேட்டனர். 217. அதற்கு அந்த மருந்துவர், "தெய்வீக சுகமளித்தல், அல்லது அற்புதங்களைக் குறித்து என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டீர்கள். அதற்கு நான் பதிலுரைக்கிறேன். சுகமாகுதல் என்பது ஒரு நிச்சயமான காரியம். வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும் போது அவர் வியாதினின்று சுகமாகிறார். மேலும் அற்புதமும் அங்கு சம்பவித்து வியாதிக்குரிய அடையாளங்களும் நம் கண்களுக்கு முன்பாக மறைந்து விடுகின்றது. ஆகவே தெய்வீக சுகமளித்தலில் நான் நிச்சயமாக நம்பிக்கை கொண்டுள்ளேன். ஆனால் ஒரு சிலரும் விஞ்ஞானமும் கொண்டிருக்கின்றதான - இரத்தத்தை அடிப்படையாகக் கொண்டிராத மத நம்பிக்கைகளுக்கு நான் செவி கொடுக்கிறதில்லை. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எல்லா நேரங்களிலும் சுகமாக்குகிறது என்று நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறினாராம். இத்தகைய விளக்கத்தை ஒரு மருத்துவர் கூறியிருப்பதை பாருங்கள் 218. தேவன் தம் சபையில் சிலரை வியாதியஸ்தருக்காக ஜெபிக்கவும், சிலரை போதகராகவும், இவ்விதமாக தம் சபையை தீர்மாணித்திருக்கிறார். அது உண்மையா-? இதன் மூலம் பல தரப்பட்ட வரங்களை தேவன் ஜனங்களுக்க சில சமயங்களில் தருகிறார். உன்னுடைய ஆத்துமாவின் இரட்சிப்புக்கும் வரங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. 219. ஆனால் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும்படி அவர் என்னை அழைத்தார் என்ற நான் அறிந்தவனாய் உங்களுடைய உறுதியான நம்பிக்கையை பெற்றுக் கொள்ள நான் விரும்புகிறேன். என்னுடைய சுயத்திற்காக அல்ல. கர்த்தர் என்னுடைய இருதயத்தை அறிகிறவராயிருக்கிற படியினால், சில காரியத்தை உங்களுக்கு காண்பிக்க என்னை அனுமதியுங்கள். இந்த தேசத்தைச் சுற்றி எத்தகையக் காரியங்கள் சம்பவித்தன என்று கவனித்து அதைக் குறித்து உங்கள் மனதிலே உருவகம் செய்து கொள்ளுங்கள். 220. அன்று நடந்த ஓர் சம்பவத்தை சற்று கவனித்துப் பாருங்கள். காட்டிலிருந்த வந்த அப்போஸம் (Oppossum) என்ற மிருகத்தைப் பற்றி நீங்களெல்லோரும் அறிந்திருக்கிறீர்கள். அந்த மிருகம் ஓநாய்களாலோ, அல்லது வேறு காட்டு மிருகங்களாலோ பிடுங்கப்பட்டு, உயிரிழக்கும் நிலைமையில் காணப்பட்டது. ஆத்துமா இல்லாத ஒரு மிருகத்தை ஏன் யேகோவா தேவன் என்னுடைய வீட்டிற்கு அனுப்பி, நானும் அதைக் குறித்து ஒன்றும் அறியாதவனாயிருந்தேன் என்பது எனக்கு ஒன்றும் புலப்படவில்லை. அது அங்கேயே என் வீட்டு வாசலில் 24 மணி நேரம் கிடந்தது. நான் என்னுடைய அறையில் அமர்ந்திருந்தேன். அப்பொழுது கர்த்தர், "ஒரு பெண்மணியைப் போல 24 மணி நேரமாக உன்னுடைய கதவண்டையில் ஜெபித்துக் கொள்ள தன்னுடைய முறைவரும் என்று உனக்காக காத்துக் கொண்டிருக்கிறாளே, அவளுக்காக நீ இன்னும் ஜெபிக்காமலிருக்கிறாயே” என்று என்னோடு பேசினார். அப்பொழுது என்னுடைய மகள் சிறிய ரெபேக்காள் என்னோடு அறையில் இருந்தாள். 221. அப்பொழுது நான், "பரலோகப் பிதாவே, என்னை மன்னித்தருளும். நான் அதை அறியாதவனாயிருந்தேன். இப்பொழுதும் அந்த மிருகத்திற்காக ஜெபிக்கிறேன். அதை சுகப்படுத்தும்” என்று ஜெபித்தேன். நான் ஜெபித்த மாத்திரத்தில் அந்த மிருகம் உடனே எழுந்து தன்னுடைய குட்டிகளை தூக்கிக் கொண்டு, "நன்றி ஐயா" என்ற தோரணையில் என்னைப் பார்த்து விட்டு, பின்பு சற்றேனும் நொண்டாதவாறு அங்கிருந்து கிளம்பி கதவின் வழியாக சென்று விட்டது. பாருங்கள். அது ஒன்றும் தெரியாத பகுத்தறிவில்லாத மிருகம். ஆனால் தேவன் அதை அங்கு வழி நடத்தினார். இதை நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா-? அவர் எப்படி பாஸ்வொர்த்தை வழிநடத்தினார்-? ஓ சொப்பனங்கள், தரிசனங்கள் மூலமாக அவர் அறிவித்து நடத்தின காரியங்களை தேசம் முழுவதிலும் பாருங்கள். இவைகளை எல்லாம். பார்க்கும் போது வேறு ஒரு காரியத்தை நான் அறிந்துக் கொண்டேன். 222. அவர் என்னை அங்கு சந்தித்து என்னுடைய பக்கத்தில் நின்று கொண்டு, "வியாதியுள்ள ஜனங்களுக்காக ஜெபிக்கும் படி நீ இந்த உலகத்தில் பிறந்திருக்கிறாய். உன்னுடைய ஊழியம் இந்த உலகைச் சுற்றிலும் பெரிய எழுப்புதலையுண்டாக்கும்” என்று கூறினார். அது அவ்விதமே நடந்தது இவ்வுலக முழுமையிலும் நடைபெற்ற சுகமளித்தலின் கூட்டங்களை கவனித்துப் பாருங்கள். உலகைச் சுற்றிலும் கோடிக்கணக்கான ஜனங்கள் சுகமடைந்திருக்கிறார்கள். அதை கணக்கெடுக்க முடியாது. நிச்சயமாக நான் அதை கர்த்தருடைய கிருபையினால் ஆரம்பித்தேன், அதுவோ இன்று உலகைச் சுற்றிலும் பாய்ந்தோடுகின்றது. 223. அநேக மாதங்களுக்கு முன்பு ஒரு இரவு, நான் ஒரு தெய்வீக சுகமளித்தலின் கூட்டத்தில் அநேக ஊழியக்காரர்களோடு அமர்ந்திருந்தேன். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட அனுபவங்களைக் கூறிக் கொண்டிருந்தனர். நான் அங்கிருப்பதை அவர்கள் அறியாதிருந்தனர். நான் அந்த அரங்கின் கடைசியில் ஒரு கண்ணாடியை அணிந்தவனாய், முகம் தெரியாத அளவுக்கு என்னுடைய மேலாடையை இழுத்துவிட்டு கொண்டவனாய் அமர்ந்திருந்து, அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தேன். 224. அவர்களில் ஒருவர் எழுந்து பீடத்தண்டை நடந்து வந்து, "என்னுடைய ஊழியமானது ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது. நான் என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. அந்த சமயத்தில் சகோ. பிரான்ஹாம் என்னும் சிறிய தாழ்மையுள்ள மனிதன் அங்கு வந்தார். அவர் வந்த பின்பு என்னுடைய ஊழியமானது உயிர்ப்பிக்கப்பட்டது” என்று கூறினார். 225. அடுத்தவர் அங்கு நடந்து வந்து, முன்னே சென்ற சகோதரன் சாட்சி சொன்னது போல்தான் என்னுடையக் காரியமும் இருந்தது. நான் ஒரு சிறிய சபைக்கு போதகனாயிருக்கிறேன். நானும் கூட தொய்ந்து போனேன் என்ற சூழ்நிலையில் சகோ.பிரான்ஹாமே அங்கு வந்து உயிர்ப்பித்தார்" என்று கூறினார். 226. இவைகளை நான் கேட்ட பொழுது, அங்கு அழுது கொண்டே அமர்ந்திருந்தேன். என்னால் அக்காரியத்தை தாங்கிக் கொள்ள முடியாததினால் நான் எழுந்து அந்த கட்டிடத்தை விட்டு வெளியே சென்று விட்டேன். "தேவனே, என்ன நடக்கும் என்று நீர் கூறியபடியே இங்கு நடக்கிறது” என்று எனக்குள் தியானித்தேன். 227. இதோ இந்த காலை நேரத்தில் நான் உங்கள் மத்தியில் இருக்கிறேன். நண்பர்களே, கர்த்தருக்கென்று நான் ஒரு ஏழ்மையான ஊழியக்காரன். அநேக நேரங்களில் நான் அவருடைய காரியத்தில் தவறியிருக்கிறேன். அதைக் குறித்து நான் வெட்கமுறுகிறேன். வியாதியாயுள்ள அவருடைய அன்பு பிள்ளைகளுக்காக நான் ஊழியஞ்செய்யவும் தகுதி அற்றவன் என்று உணருகிறேன். நான் என்னுடைய தகுதியை நோக்குகிறதில்லை. ஏனெனில் என்னிடம் தகுதியேதும் இல்லை. அவருடைய கிருபை எதுவாயிருக்கும் என்று தான் நான் நோக்கிப் பார்க்கிறேன். அந்த விதமாகத்தான் அவரும் எனக்கும் காணப்படுகின்றார். நான் அவருடைய பிள்ளையாயிருந்து, அவர் என்னுடைய தகப்பனாயிருக்கிறார். என்னுடைய கைகள் அசுத்தமாயிருக்குமானால், அவருடைய கரங்கள் சுத்தமாயிருக்கின்றன. ஏனெனில் என்னுடையவைகளை வைத்து நான் அவருக்கு ஊழியம் செய்கிறதில்லை. அவர் என் மூலமாக ஊழியம் செய்யத்தக்கதாக என்னை முற்றிலும் அவருக்கு அர்ப்பணிக்க முயற்சிக்கிறேன். இந்த திரைக்குள்ளாக நான் ஜீவிக்கிறதற்காகவும், உலகத்தின் காரியங்களினின்று நான் மறைக்கப்பட்டு இருக்கிறதற்காகவும் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 228. தேவன் என்னிடம், "நீ அதை செய்ய முடியாது. அதினால் அவர்கள், பிரசங்கி பிரான்ஹாமிற்கு ஏதோ தவறாயிருக்கிறது, அவரைப் பாருங்கள் அவர் கிறுக்கனாகி விட்டார்” என்று கூறுவார்கள் என்று கூறினார். 229. அந்த யூதர்களின் மருத்துவமனையில் நடைபெற்ற ஊழியர்களின் கூட்டத்தில் ஒரு கூட்ட மனிதர்கள் அமர்ந்து கொண்டு, "நீர் ஏன் உம் சொந்த புத்தியை தவறவிடுகிறீர்” உம்மால் ஏன் அதை செய்யக் கூடாது-? ராஜாக்களுக்கும் நீர் ஜெபிக்கிறீரே" என்று கேட்டனர். அதற்கு நான், "அதைத்தான் தேவனும் கூறினார்” என்று கூறினேன். 230. அவர்கள் என்ன கூறினாலும், அது எந்த விதத்திலும் அதை வித்தியாசப்படுத்துவதில்லை. தேவன் தாம் சொன்னதை நிறைவேற்றினார். அவர் என்னுடைய அறியாமையை காணவில்லை. என்னுடைய அறியாமை ஒரு போதும் அத்தகை காரியத்தை உண்டாக்க வில்லை. ஆனால் அது அவருடைய கிருபை என்று நான் கூறுவேன். 231. அந்த கிருபையினாலே மட்டும் நான் நம்பிக்கை கொண்டிருந்து, இந்தக் காலை நேரத்தில், இறந்துக் கொண்டிருக்கும் இந்த சகோதரிக்காகவும், மற்றவர்களுக்காகவும் நான் ஜெபிக்கப் போகிறேன். நான் மட்டுமல்ல, நீங்களும் கூட தேவனுடைய ஊழியக்காரர் தான். சபையோரின் ஊக்கமுள்ள ஜெபம் பெலனுள்ளதாயிருக்கிறது. இந்த காலை நேரத்தில் இங்கு படுக்கையில் இருக்கும் இந்தப் பெண்மணியும், அமர்ந்து கொண்டிருப்பவர்களில் அநேகரும் மரிக்கும் தருவாயில் காணப்படுகின்றார்கள். 232. ஒரு தன்மையும், ஒரு வரமும் அங்கு உண்டாயிருக்கின்றது. நிச்சயமாக. அத்தகைய வரம் இவ்வுலகத்தால் இனி ஒரு போதும் குற்றம் பிடிக்காதவாறு அமைந்து விட்டது. நீங்கள் இந்த பீடத்தண்டை வருவீர்களானால் தேவனுடைய பிரசன்னத்தின் முன்பு உங்கள் மறைவான ஜீவியத்தை மறைக்க இயலாது. நீர் யாரென்றும், என்ன செய்தீர் என்றும் அவர் கூறிவிடுவார். அது உண்மையென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஆனால் அது தெய்வீக சுகமளித்தலன்று 233. விசுவாச ஜெபம் தான் வியாதியஸ்தனை இரட்சிக்கின்றது. நிச்சயமாக அதைத்தான் நான் செய்யவிரும்புகிறேன். அதோ அங்கே படுத்திருப்பவர்கள் என்னுடைய தாயாராய் இருக்கி றார்கள். எப்படியிருக்கும்-? ஆனால் அவர், வேறொருவரின் தாயாராயிருக்கிருக்கிறார்கள். என்னுடைய மனைவியோ அல்லது யாராகிலும் வியாதியாய் அங்கே உட்கார்ந்திருந்தாலும் அதைப் பற்றியென்ன-? நான் உண்மை உள்ளவனாயிருக்க வேண்டும். அவர்கள் யாராய் இருந்தாலும் நான் அவர்களுக்காக ஜெபிப்பேன். 234. இங்கு படுத்திருக்கும் பெண்மணியைப் போல் அதோ அங்கு இப்பொழுது நடந்து வந்த ரூப் அம்மையாரும் புற்றுநோயினால் மரித்துக் கொண்டிருந்தார்கள். ஜெபர்சன்வில்லிலுள்ள அந்த உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் அந்த அம்மையார் சுகம் பெற்று இன்றும் கவலையில்லாமல் இருக்கிறார்கள். அது அற்புதமானதல்லவா-? சகோதரியே, "மகத்தான வைத்தியர் அருகில் இருக்கிறார். அவர் இரக்கமுள்ள இயேசுவே அன்றி வேறு யாருமல்ல” என்ற பாடலை இசைக்கருவியில் நீங்கள் இசைக்க விரும்புகிறேன். 235. இப்பொழுது இந்த ஆராதனைக்கு தரித்து நிற்பவர்கள் சற்று நேரம் அமைதியாய் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நாம் ஜெபிப்போம். இன்னும் சிறிது நேரத்தில் நான் ஜெப வரிசையை அழைப்பேன். 236. முதலாவதாக, இக்கட்டிலில் இருக்கும் பெண்ணிற்காக நான் ஜெபிக்கப் போகிறேன். எல்லாத் தலைகளும் குனியட்டும். ஒவ்வொருவரும் உண்மையான மனதுடன் ஜெபிக்க நான் விரும்புகிறேன். கட்டிலில் படுத்திருக்கும் சகோதரியே, நான் இப்பொழுது உங்களிடம் பேசிக் கொண்டு இருக்கிறேன். நீங்கள் விசுவாசமுடையவராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்க நான் விரும்புகிறேன். 237. நாம் எல்லோரும் பயபக்தியோடு ஜெப சிந்தையில் இருப்போம். நான் அவர்களுக்கு ஜெபம் செய்து விட்டு திரும்பவும் பீடத்திற்கு வந்து விடுவேன். பின்பு மற்றவர்களுக்கு ஜெபிக்க ஏதுவாயிருக்கும். நாம் இப்பொழுது ஜெபிக்கலாமா-? 238. எங்கள் பரலோகத் தந்தையே, ஆம். எங்களுக்கு மகத்தான ஒரு வைத்தியன் உண்டு. கீலேயாத்தின் தைலம் உண்டு. இந்த காலையில் கட்டிலில் படுத்திருக்கும் நபரும், ஆசனங்களில் அமர்ந்திருப்பவர்களும் உம்முடைய ஜனங்கள். அவர்கள் வியாதியினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இருள் சூழ்ந்த இந்த உலகத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஓ. நித்திய பிதாவே, இவர்கள் ஒவ்வொருவரும் இந்நாளிலே சுகம் அடையத்தக்கதாக உம்முடைய கிருபை நீட்டப்படவேண்டுமாய் நாங்கள் ஜெபிக்கிறோம். 239. மன்னாவைப் புசிக்க அவர்கள் உள்ளே பிரவேசிக்கட்டும். யாராயிருந்தாலும் உள்ளே பிரவேசிப்பதற்கு நீர் இந்தக் காலையில் வாசலை திறந்து வைத்திருக்கிறீர். யூதன், கிரேக்கன், அடிமை, சுயாதீனன் யாராயிருந்தாலும் அவர்கள் ஆடுகளின் வாசலுக்குள்ளே பிரவேசிக்கத் தக்கதாக, பிரிவினையாயிருந்த நடுச்சுவரை நீர் தகர்த்துப் போட்டீர். நீரே அந்த வாசல். ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளத்தக்கதாக இயேசுவின் மூலம் நாங்கள் பிரவேசிக்கிறோம். தேவ குமாரனாகிய இயேசுவே, இப்பொழுது நான் வியாதிக்காக ஜெபிக்கப் போகிறேன். அவர்களை சுகமாக்குவீரா. கர்த்தாவே-? 240. எங்களுடைய அன்பான சகோதரன் நெவிலுக்காக நாங்கள் உமக்கு நன்றி உள்ளவர்களாயிருக்கிறோம். ஓர் உண்மையுள்ள ஊழியக்காரனாக தன்னுடைய ஸ்தானத்தில் இருந்து கொண்டு இச்சபையின் மேய்ப்பனாக உழைத்துக் கொண்டிருக்கிறார். அவர் செய்த எல்லாவற்றிற்காகவும் உமக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். தேவனே, அவரையும் அவருடைய மனைவி, பிள்ளைகளையும் ஆசீர்வதியும். கர்த்தாவே, அவருடைய சிறிய பையன்கள் வளர்ந்து தங்கள் தகப்பனைப் போலவே இருக்க அருள் புரியும். 241. ஓ, தேவனே, நான் வியாதிக்காக ஜெபிக்கும் ஊழியத்தை இப்பொழுது தொடங்கும் போது நீர் எங்களுடைய பக்கத்தில் இரும். என்னோடு நீர் இருந்து எனக்கு விசுவாசத்தைத் தாரும். எல்லா சந்தோஷங்களையும் என் மனதிலிருந்து எடுத்து போடும். ஒவ்வொரு மனிதனும், இங்கு வரும் போது என்னுடைய மனமானது அவிசுவாசமாக கிரியை செய்ய வேண்டாம். ஆனால் ஒவ்வொரு சமயமும் அது விசுவாசத்தை உந்தித் தள்ளட்டும். இதை அருளிச் செய்யும். கர்த்தாவே, என் இருதயத்திலுள்ள விசுவாசம் எல்லா யூகங்களையும் பின்தள்ளிப் போடட்டும். யூகங்களை விரட்டியடித்து விசுவாசமுண்டாகச் செய்யும். இங்குள்ள ஒவ்வொரு வியாதியஸ்தரும் சுகமாக்கப்படட்டும். இதை எங்களுக்கு அருளிச் செய்யும், பிதாவே. இப்பொழுது நம்முடைய தலைகள் குனிந்த நிலையில் இருக்கையில், நான் அந்த சகோதரிக்காக ஜெபிக்கப் போகிறேன். 242. தேவன் அவளுடைய சரீரத்தைத் தொட்டு அவளை முழுவதுமாக சுகப்படுத்தி விட்டார். இதோ அவள் எழுந்து நடந்து தேவனை மகிமைப்படுத்துகிறாள். அந்த சகோதரியின் கால் மூட்டுகளும், விலா எலும்புகளும் எழுந்து அவள் நடக்கக் கூடாதபடி பழுதடைந்திருந்தன. நான் கர்த்தரிடம், "தேவனே, இந்தக் காலையில் நீர் எனக்கு உறுதிப்படுத்துவீரானால், நீர் எதை செய்யச் சொன்னீரோ அதையே நான் செய்வேன். அந்த பெண் எழுந்து குறுக்காக இக்கட்டிடத்திற்குள் நடக்க செய்தருளும்" என்று ஜெபித்தேன். அவ்விதமாகவே, ஜெபித்தவுடன் அவள் எழுந்து விட்டாள். இப்பொழுது அவர்கள் அந்த கட்டிலை எடுத்து விட்டார்கள். இதோ அந்த பெண் சுற்றிலும் நடந்து கொண்டிருக்கிறாள். 243. சகோதர சகோதரிகளே, கர்த்தராகிய இயேசு இங்கிருக்கிறார். நான் உங்களை சுகமாக்க முடியாது. ஆனால் நீங்கள் கண்கூடாக பார்க்கிறபடி, எப்பொழுதும் கண்டிராத வண்ணம் இந்த தேசத்திலே மிகப்பெரிய எழுப்புதலானது இன்று நடந்து கொண்டிருக்கின்றது. ஏதோ ஒன்று நிகழ ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றது என்றும் நானறிகிறேன். 244. இங்கு வலப்பக்கமாக, நீங்கள் ஜெபிப்பதற்காக கடந்து வரும் போது, மற்ற ஒவ்வொருவரும் ஜெபசிந்தையோடு இருங்கள். நம்முடைய சகோதரி பாட்டை இசைப்பார்கள். சகோ. நெவிலும் நானும் வியாதியஸ்தர் எங்களைக் கடக்கும் போது கைகளை அவர்கள் மேல் வைத்து ஜெபிப்போம். 245. அபிஷேகத்தைக் குறித்து அநேகர் தவறான அபிப்பிராயம் கொண்டிருக்கின்றனர். அதைக் குறித்து எப்பொழுதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா-? மகத்தான அபிஷேகமானது யாருக்காகிலும் எப்பொழுதாவது கொடுக்கப்பட்டதுண்டா-? அவ்வித அபிஷேகம் பெற்றவர் எதை செய்தார்-? 246. மகத்தான அபிஷேகம் யாருக்காகிலும், எப்பொழுதாகிலும் கொடுக்கப்பட்டது உண்டானால் அது இயேசு கிறிஸ்துவிற்கு தான் கொடுக்கப்பட்டது. நாம் அபிஷேகத்தை ஓர் குறிப்பிட்ட அளவு தான் பெற்றிருக்கிறோம். ஆனால் அவருக்கோ அது அளவில்லாமல் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாள் அவர் ஆலயத்திற்குள் பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார். அவரிடம் ஒரு புஸ்தகம் கொடுக்கப்பட்டது. அவர், கர்த்தருடைய ஆவியானவர் என் மேலிருக்கிறார். தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார். இருதயம் நொருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்ட வர்களை விடுதலையாக்கவும் கர்த்தருடைய அனுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும் என்னை அனுப்பினார், என்றார். 247. வரும் என்று கூறப்பட்ட அந்த அபிஷேகமானது 800 வருடங்களுக்கு முன்பதாகவே தீர்க்க தரிசனமாய் உரைக்கப்பட்டிருந்தது. அத்தகைய அபிஷேகமாகிய ஆசீர்வாதங்களை உடையவராக அவர் வந்தார். நமக்கு அந்த விதமான அபிஷேகமிருந்தால் - இந்தக் கட்டிடத்திற்குள்ளாக சுற்றிலும் எல்லா இடத்திற்கும் ஓடி கூச்சலிட்டு, குதிக்கலாம் என்று நாம் நினைக்கலாம். 248. ஆனால் வேதம், "அவர் வாசித்து புஸ்தகத்தை சுருட்டி பணிவிடைக்காரன் இடத்தில் கொடுத்து உட்கார்ந்தார். அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளை க்குறித்து ஆச்சரியப்பட்டார்கள் என்று கூறுகிறது. அபிஷேகமானது உணர்ச்சிகள் அல்ல. அபிஷேகமானது இயற்கைக்கு மேம்பட்ட வல்லமையான தன்னடக்கமாய் இருக்கின்றது. இது என்னவென்றும், இது எவ்விதமானதென்றும் நான் அறிந்தவனாய் இருக்கிறேன். அத்தகைய காரியம் தான் இங்கும் இருக்கின்றது. 249. நீ இங்கு நடந்து வரும் போது ஒருவேளை இதை அறிந்துக் கொள்ள இயலாமலிருப்பாய். ஆனால் உன்னுடைய விசுவாசத்திற்கு இதை ஒரு சவாலாக்குகிறேன். நான் கூறின் விதமாகவே நீ வந்து விசுவாசி. பின்பு நடக்கும் காரியத்தை கவனி. இக்காலையில் கர்த்தருடைய அபிஷேகமானது இந்தக் கூடாரத்தில் இருக்கிறது. ஆமென். நாம் இப்பொழுது ஜெபிப்போம். (சகோ. பிரான்ஹாம் சுகம் தேவையானவர்களுக்காக ஜெபிக்கிறார்). 250. கர்த்தரை நீங்கள் நேசிக்கிறீர்களா-? அவர் அற்புதமானவரல்லவா-? இந்த காலை ஐக்கிய ஆராதனையில் மகிமையான நேரம் நமக்குண்டாயிருந்தது. அவருடைய பிரசன்னத்தை நீங்கள் உணர்ந்தீர்களா-? "நான் உன்னோடு இருக்கிறேன், பயப்படாதே, சிறிய கப்பலானது ஆடாது, தீங்கும் செய்யாது” என்ற மெல்லிய சத்தத்தை கேட்டீர்களா-? 251. அம்மையாரே, உங்களுக்கு எப்படியிருக்கிறது-? (சுகமாயிருக்கிறது என்று கூறுகிறார்கள்). கட்டிலில் கிடத்தப்பட்டிருந்த அந்த தாயார் இப்பொழுது சுகமாக இருப்பதாக கூறினார்கள். அதற்காக நாம் கர்த்தராகிய இயேசுவுக்கு நன்றியுள்ளவர்களாயிருக்க வேண்டுமல்லவா-? அவர்கள் திரும்பி வந்து, நம்மோடு கூட சபையில் அமர்ந்து, களிகூர்ந்து தேவனை துதிப்பார்கள். அது உண்மையா-? அடுத்த ஞாயிறன்று, இங்கு சுகம் பெற்ற எல்லாவித ஜனங்களும் சாட்சி சொல்ல விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன். அதை நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா-? 252. இனி நாம் என்ன செய்ய வேண்டும்-? மகிமையில் நிலைத்திருங்கள். ஒளியிலே நடந்து கொள்ளுங்கள். அடி மேல் அடியாக வைத்து அவரோடு நடந்து செல்லுங்கள். தேவனுடைய நித்திய ஆசீர்வாதங்கள் உங்கள் மேல் தங்கத்தக்கதாக எப்பொழுதும் அவருடைய நித்திய கரங்களை பிடித்துக் கொண்டிருங்கள். தம்மால் செய்ய முடியாததை தேவன் வாக்குத்தத்தம் செய்யமாட்டார் என்ற நம்பிக்கை உடையவர்களாய் இருந்து அவரோடு நடந்து செல்லுங்கள். 253. தேவன் சொன்னதை நிறைவேற்றுவார் என்பதை ஆபிரகாம் அறிந்தவனாய் தான் எவ்வளவு வயதானாலும் அதைக் குறித்து அவன் கவலைக் கொள்ளவில்லை. அது அற்புதமான காரியமல்லவா-? நல்லது. தேவன் மரிப்பதில்லை. அவர் நித்திய காலமாக ஜீவிக்கிறார். 254. நீ புகை அறையிலிருந்தாலும் (Gas Chamber), கிணற்றின் அடியிலோ, அல்லது கடலின் அடியிலோ, நீ எங்கிருந்தாலும் உன்னுடைய ஆவி உன்னை விட்டு நீங்கும் போது, தண்ணீரோ நெருப்போ அதை தடை செய்ய முடியாது. அது ஒரு நீராவியைப் போன்று வெளியே சென்று விடுகின்றது. அது ஜீவனுள்ளதாயிருந்து மரிப்பதில்லை. அது நித்திய ஜீவனை உடையதாய் இருந்து மரிப்பதில்லை. 255. நீ மரிக்கும் போது உனக்குப் பிரியமானவர்களெல்லோரும் கதறி அழுகிறார்கள். நீ மரித்து விட்டாய் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நீ அவ்விதம் மரிக்கவில்லை. நீ இன்னுமாக அங்கு மேலே வாழ்ந்துக் கொண்டிருக்கிறாய். பழைய சரீரமானது ஒழிந்து போகிறது. அது இந்த மண்ணிலே புதையுண்டு போகிறது. எல்லா இரசாயன அணுக்களையும் கொண்டிருக்கிற உன் சரீரமானது உடைந்த சிதறி மண்ணுக்கு இரையாகி விடுகின்றது. 256. என்றாவது ஒரு நாளில், இயேசு என்ற ராஜா, ஆவிகளுக்கெல்லாம் அதிபதி, தம்முடைய மகிமையின் சரீரத்தில் வருவார். ஆமென். அப்பொழுது அவர் தேவனுடைய வல்லமையை அனுப்பும் போது, அவருக்குள்ளிருக்கும் ஒவ்வொரு நபரும், அவர்களுடைய சரீரங்களின் அணுக்களும், ரசாயணங்களும் உண்டாகத் தொடங்கி, அவைகளெல்லாம் ஒன்று சேர்ந்து, ஒரு இமைப்பொழுதிலே, கிறிஸ்துவுக்குள்ளான ஒவ்வொருவரும் மறுரூபமாகி வாலிப மனிதனும், பெண்ணுமாக திரும்பவும் இப்பூமியின் மேல் நிற்பார்கள். இதைக் குறித்து யோசித்துப் பாருங்கள். இனி ஒரு போதும் அவர்கள் விருதாப்பியங் கொள்வதில்லை. இனி ஒரு போதும் வியாதியோ, இருதய வலியோ அல்லது கவலைகளோ வருவதில்லை. நாம் எதற்காக கவலைப்பட வேண்டும்-? நாம் தான் தேவ வெளிச்சத்தில் நடக்கிறோம். அது அற்புதமானதன்றோ-? "என் விசுவாசம் உம்மையே நோக்கிப் பார்க்கிறது. ஓ. கல்வாரி ஆட்டுக்குட்டியே, திவ்விய இரட்சகரே. இப்போதும், நான் ஜெபிக்கையில் செவிகொடும். என் பாவம் எல்லாம் தொலைத்திடும். ஓ. இந்நாளிலிருந்து, நான் முழுமையும் உம்முடையவனாகட்டும். எல்லோரும் சேர்ந்து இப்பாடலை பாடுவோமாக. *******